Wednesday, November 24, 2010





கடவுளை அடையவேண்டும் என விரும்புபவர்கள் அதற்காக சிரத்தையான செயல்களைசெய்ய வேண்டும் என்பதில்லை. எளிதாக மூன்று வழிகளை மட்டும் பின்பற்றினால்போதும். இதயத்தை அன்பிலும், செயல்களை நேர்மையிலும், உணர்ச்சிகளை கருணையிலும் நனைத்துவிடுங்கள். இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே, கடவுளை வெகு சீக்கிரத்தில் அடைந்து விடலாம்.

Thursday, September 30, 2010

மும்மூர்த்திகள்: ஒரே தெய்வத்தின் மூன்று இயல்புகள்
சனாதன தர்மத்தில் இறைவனின் நிர்க்குண பாவமும், சகுன பாவமும் தனிச் சிறப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன. படைத்து, காத்து, அழித்து பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் இயல்பு சகுன இறைவனுக்கு உரியதாகும். அதே சமயம், படைப்புக்கு அப்பாற்பட்ட நிலையானதும், மாற்றம் ஏதுமில்லாததுமான இறை குணமே பிரம்மமாகும். அது நிர்குணம் என்று சொல்லலாம். பிரம்மம் படைப்பென்னும் லீலை புரிய சங்கல்பிக்கும் போது சகுன இறைவனின் பாவங்கள் தோன்றுகின்றன. அவையே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன். இவை மூன்றும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை நடத்தும் பிரம்மத்தின் பாவங்களாகும். ஒரே சைதன்யமே மும்மூர்த்திகள் வடிவத்தில் வெளிப்படுகிறது
.
விக்கிரகத்தை வழிபடுவதன் தத்துவம்.
இறைவனின் அர்ச்சாவதார வடிவங்களாக விளங்குபவை விக்கிரகங்கள். மகான்கள் பிராணப் பிரதிஷ்டையின் மூலமாக விக்கிரகப் பிரதிஷ்டை செய்தால் அங்கே இறைசக்தியின் சாந்நித்தியம் உண்டாகும். விக்கிரகங்களை பக்தியுடன் வழிபட்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். விக்கிரகத்தை தெய்வமாகக் கருதித்தான் பக்தர்கள் வழிபடுகிறார்கள். அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்தியம் போன்றவற்றை ஒரு மனிதனுக்கு கொடுப்பது போன்ற பாவனையுடனும், நம்பிக்கையுடனும்தான் விக்கிரக வடிவிலுள்ள தெய்வத்திற்கு கொடுக்கிறார்கள். இதற்கு சாஸ்திர பூர்வமான முத்திரைகளும், அனுஷ்டானங்களும் உள்ளன. இருப்பினும் அன்புடன் கூடிய வழிபாடுதான் இறைவனுக்கு விருப்பமானது. ஸ்ரீராம கிருஷ்ணரைப் போன்ற மகான்கள் விக்கிரக ஆராதனையின் மூலமும் இறை அனுபூதி பெறமுடியும் என்பதற்கு நேரடி உதாரணங்களாவர்.

Wednesday, September 22, 2010

அறுபதாம் திருமணம்

தம்பதியர் அறுபது வயது முடிந்ததும் திருமணம் செய்கின்றனர். இத்திருமணத் திற்கு என்று தனியான தத்துவப்பின்னணி உண்டு. இல்லற வாழ்வில் அறுபதுவயதுவரை மனிதன் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கிறான். இதன்பிறகு உலகியல் பாசபந்தங்களை விட முயல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதே இத்திருமணம். எழுபது வயதில் மனிதன் மனமுதிர்ச்சி பெற்று ரிஷிகளைப் போன்று பக்குவநிலையை அடைகிறான். எண்பதாவது வயதில் எட்டுத்திசைகளையும் பாதுகாக்கும் தெய்வங்கள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றனர். தொண்ணூறாவது வயதில் நவக்கிரகங்களின் முழு ஆசியும் மனிதனுக்குக் கிடைக்கிறது. நூறாவது வயது அடைவது மிகவும் சிரமம். அப்போது ஐம்புலன்களின் செயல்கள் அனைத்தும் கட்டுப்பட்டு விடுகின்றன. இந்த உன்னதமான நிலையை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத் தான் "நீ நூறு வயது வாழ வேண்டும்' என்று கூறிப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். அறுபது வயதில் சஷ்டியப்தப் பூர்த்தியையும், அறுபது வயதிற்குப் பிறகு, எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தையும் நடத்துவது நம்மை மேலும் மேலும் பக்குவமாக்கி உயர்நிலை அடைவதற்குத்தான்.

Friday, September 17, 2010

* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப்பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுக்கும் தன்மையுடையது. 
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களைப் படியுங்கள். 
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைச் செல்வங்கள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.

-வாரியார்

Friday, August 20, 2010

Wednesday, August 11, 2010

விபூதி

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும். விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும் 1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். 2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். 3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது. சத்குரு ஜக்கிவாசுதேவ்

Friday, July 9, 2010

Saturday, June 5, 2010

Wednesday, May 26, 2010

Amma RECEIVES DOCTORATE OF HUMANE LETTERS FROM SUNY Amma receives doctorate of humane letters from SUNY


25 May 2010
Buffalo, New York
The State University of New York (SUNY) presented spiritual leader and humanitarian Sri Mata Amritanandamayi Devi (Amma) with an honorary doctorate in humane letters at a special ceremony held at 2 p.m. on May 25 at Lippes Concert Hall in Slee Hall on the University at Buffalo North Campus.
SUNY bestowed the doctorate upon Amma in recognition of her tireless efforts on behalf of global peace, for her commitment to education and for the far-reaching impact of her charitable organizations in relieving poverty and human suffering in India and around the world.
Addressing the gathering, President Dr. John B. Simpson, the President of the University at Buffalo (State University of New York), said, “Through this conferral, we pay tribute to the far-reaching contributions of a distinguished educational leader, prominent humanitarian and esteemed spiritual leader. Through her leadership of Amrita University as well as through her humanitarian work, Chancellor Amma exemplifies the value of international dialogue and dedicated public service in the global arena. These are values at the core of the University at Buffalo’s mission as an internationalized public university seeking to prepare our students to contribute meaningfully to the global world.”
As part of the award ceremony, Amma delivered an address on education, in which she discussed the importance of including universal spiritual values in core curricula, the role of meditation in developing and gaining control over the mind, and the complimentary relationship of scientific knowledge and spiritual wisdom, among other topics.
Amma said, “It is Amma’s prayer that we develop the expansive-mindedness to embrace both scientific knowledge and spiritual wisdom. We can no longer afford to see these two streams of knowledge as flowing in opposite directions. In truth, they compliment one another. If we merge these streams, we will find that we are able to create a mighty river—a river whose waters can remove suffering and spread life to all of humanity.”
Other dignitaries to address the gathering included Dr. Satish K. Tripathi, Provost of University at Buffalo, and Dr. Stephen Dunnett, University at Buffalo, Vice-Provost for International Education.
SUNY is a renowned public university with 64 campuses across the state of New York. Its four main centers are in Albany, Binghamton, Buffalo and Stonybrook. Its total student body is 440,000 students.
Others receiving honorary doctorates from SUNY this year include MapQuest founder Barry Glick, pioneering AIDS/HIV- researcher Dr. Robert Vince, and Pulitzer Prize-winning composer Steve Reich.

Friday, May 21, 2010

சந்தனத்தின் மகிமை


ஆசாரங்களை அனுஷ்டிக்கும் இந்துவுக்கு சந்தனம் மிகவும் புனிதமான பொருள். தெய்வ பூஜைக்கு சந்தனம் இன்றியமையாததாகும். பித்ரு கர்மங்களிலும் இது உபயோகிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நினைக்கும் போது அவருடைய சந்தனம் பூசிய கார்மேக மேனி எழில் நம் நினைவுக்கு வருகிறது. லலிதா சஹஸ்ர நாமம் தேவியை சந்தனக் குழம்பு சார்த்திய அங்கங்களை உடையவள் "சந்தனத்ரவதிக்தாங்கீ"என்று சொல்கிறது: இவ்விதம் எல்லாத் தெய்வங்களுடனும் சந்தனம் தொடர்புள்ளதாகும்: குளிர்ச்சிக்கு மறுபெயர் எனத் திகழும் சந்தனத்திற்கு இந்து கலாச்சாரத்தில் முக்கியமான இடம் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் குளிர்ச்சியும், நறுமணமும் உள்ள சந்தனத்தின் மகிமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மதச் சடங்குகளிலும், வரவேற்பு போன்ற நல்ல முகூர்த்தங்களிலும் சந்தனம் கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது நம்முடைய அனுஷ்டானத்தின், ஆன்மிகத்தின் மற்றும் சுய நம்பிக்கையின் சின்னமாகும். இதற்கு அறிவியல் பூர்வமான மகிமையும் உண்டு. நோய்க்கிருமிகள், தோல் வியாதிகள் போன்றவற்றை அழிப்பதும், குளிர்ச்சி அளிப்பதும், இதயத்திற்கு நலன் அளிப்பதும், நாவின் ருசியின்மையை அகற்றுவதும், பித்தத்தை முறைப்படுத்துவதும் சந்தனத்தின் குணங்களாகும் என்று ஆரோக்கிய சாஸ்திரம் கூறுகிறது. பலம், நிறம், உடல் நலம், நல்ல மன உணர்வு, ஐஸ்வர்யம் ஆகியவற்றை சந்தனம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. பகவானுக்கு சந்தனம் சார்த்திய பிறகு பக்தன் அதை தனது நெற்றியில் வைத்துக் கொள்கிறான். மருத்துவ குணங்கள் உள்ள சந்தனத்தை அணிவது நமது உடலுக்கு நன்மை பயக்கும். அதனால்தான் ஆலயங்களிலும், வீடுகளிலும் பூஜை சமயங்களில் இதை கட்டாயமாக உபயோகிக்கின்றனர். மரணத்திற்குப் பின் இறுதிக் கிரியை செய்யும் பொழுது சந்தனக்கட்டை(சிறிய துண்டாவது) உபயோகிப்பது வழக்கம். எங்கும் நறுமணம் பரப்பி, அனைவருக்கும் குளிர்ச்சி நல்கும் சந்தனம் நமக்கு ஒரு வகையில் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. சந்தனத்தை தண்ணீருடன் சேர்த்து அரைத்து பகவானுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் நம்முடைய சமர்ப்பன மனோபாவம் வெளிப்படுகிறது. சந்தனம் தான் தேய்ந்து பிறருக்கு மணம் பரப்புகிறது.

Monday, May 17, 2010

விபூதியின் மகிமை


நெற்றியில் திலகம் அணிவது இந்துக்களின் தினசரி வழக்கமாகும். நம்மைப் பொறுத்தவரை அது ஆசாரமாகும். நம்முடைய பண்பாட்டின் சின்னமாகும். விபூதி, குங்குமம், சந்தனம், கோரோசனை, சாந்து, மை போன்ற நெற்றியில் அணியும் பலபொருட்கள் உள்ளன. பரிசுத்தமான விபூதியை நெற்றியில் அணிவது மிகவும் சிறப்பு. பரமசிவனின் நெற்றியிலுள்ள ஞானக்கண்ணை குறிப்பதற்காகவே நாம் நெற்றியில் திலகம் அணிகிறோம். உலர்ந்த பசுவின் சாணியில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சுட்டெடுத்தால் சுத்தமான மணமுள்ள விபூதி கிடைக்கும். நோயை நீக்கவும், பாபத்தைப் போக்கவும், தீய கனவுகளை அகற்றவும் விபதி அணிதல் உதவும். நெற்றியில் மூன்று வரிகளாக விபூதி அணிய வேண்டும். இம்மூன்று வரிகளும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் ஆகியவற்றைக் குறிப்பிடுபவை ஆகும். நெற்றியில் மட்டுமன்றி கழுத்திலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலேயும், கை முட்டிகள், கால் முட்டிகள், முதுகு ஆகிய இடங்களில் விபூதி அணிதல் சிறப்பாகும். விபூதி அணியும் போது சிவ பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிப்பது உத்தமம். விபூதி முதலான மங்களச் சின்னங்களை அணிந்து மங்களமாக வாழ்வோம்.

Sunday, May 16, 2010

Tuesday, May 11, 2010

விதியும் சமர்ப்பணமும்

எவ்வளவு இறை நம்பிக்கை இருந்தாலும், நம்பிக்கை ஆட்டம் காணும் சந்தர்ப்பங்கள் வரும். ஒரு சாதாரண இல்லறவாசிக்கு. நம்பிக்கை என்பது கயிறுமேல் நடப்பது போன்றது ஆகும். நிம்மதியின்மையின் கரையில்தான் நாம் அனைவரும் வசிக்கின்றோம். சுற்றிலும் வேதனைக்குரல்கள்; கஷ்டப்படுபவரின் அழுகுரல்கள், பசிக்கும் போது என்றோ குடித்த கஞ்சியை நினைத்து ஏங்கும் குழந்தைகளின் ஏழ்மை, நோயினால் அவதிப்படுவோர். இவற்றிற்கிடையில் தான் மனித பலவீனங்களை விற்று பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டம். வீடு பற்றி எரியும் போது அதன் தூணை எடுக்க முயற்சி செய்பவர்கள் இவர்கள். தாயத்து கட்டினால் நினைத்ததெல்லாம் நடக்கும், ஹோமம் செய்தால் எல்லா துன்பங்களும் அகலும் என அற்புதமான மந்திர பலன்களை இவர்கள் வாக்குக் கொடுக்கிறார்கள். அற்புதமான மாற்றங்களை எதிர்பார்த்து வாடும் பரிதாபமான மனிதர்கள், இவர்களது வலையில் விழுகிறார்கள். பட்டினியும், கர்மவினையும் அனுபவிப்பவர்களைக் குறை சொல்வதால் பயனில்லை. அதே சமயம், பெரும்பாலோர் விதி என்று சொல்லி வருந்துகிறார்கள். கரை ஏறுவதற்கு உள்ள உண்மையான வழி எது என்று தேடுவதில்லை. அப்படியே அதை அறிந்தாலும் நம்புவதில்லை. நம்பினாலும் அதில் உறுதியாக நிற்பதில்லை. எல்லோரும் தற்காலிக பலனையே தேடுகிறார்கள். உடனடி மு ன்னேற்றம். பொறுமையோ, முயற்சியோ இல்லை. குறுக்கு வழிகளை பின்பற்றவே ஆர்வம். விளம்பரத்தைக்கண்டு மயங்கி, துயரக்கடலைக் கடக்க விரும்புபவர்கள். கர்மபலனைக் கர்மத்தால் தடுக்கலாம். ஒரு கல்லை மேலே வீசிவிட்டு கீழே விழுவதற்கு முன்பு பிடிக்கலாம் அல்லவா? அதுபோல் இடையிலேயே கர்மபலனின் போக்கை மாற்றலாம். விதியை நினைத்து துன்புற வேண்டிய அவசியமில்லை. இறை சங்கல்பத்திட்கு முன்னால் ஜாதக பலன் மாறிவிடும். பகவானிடம் அனைத்தையும் சமர்ப்பித்து விடுங்கள் அவர் நம்மைக் காப்பார். ஆத்மசமர்ப்பணமே விதியை வெல்வதற்கான ஒரே வழி. அனைத்தையும் மறந்து செய்யப்படும் பிரார்த்தனைக்கு பணச்செலவு இல்லை என்பது மட்டுமல்ல, சரியான அளவற்ற முன்னேற்பாடும் தேவையில்லை. ஆயிரக்கணக்கில் செலவழித்து நடத்தும் ஹோமங்களும், காப்பு கவசங்களும் சுயநலத்திற்காக ஆகும் போது அது எந்த அளவு உயர்வு பொருந்தியது என்பது கூறாமலே புரியும். குறுக்குவழிகளைத் தேடாமல், புலனடக்கத்துடன் இறைவனை நாட வேண்டும். தனது திறமைக்கும், நம்பிக்கைக்கும், ஆசாரத்திற்கும் ஏற்ப பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளைச் செய்யலாம். உண்மையில் நாம் பேராசையத்தான் கட்டுப்படுத்த வேண்டும். தனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சம சித்தத்துடன் வாழ முடிந்தால் மனநிம்மதி கிடைக்கும். ஆத்மசமர்ப்பணத்தின் நற்பலன் தானே தேடிவரும். மாறாக, எளிய வழியைத் தேடி போகாத வழிகளில் போனால் விபரீத பலனே விளையும். துக்கமும், நிராசையும் மேலும் அதிகரிக்கும். அதனால் இறைவனின் பாதார விந்தங்களே சரணம் என்ற நம்பிக்கை உறுதியாக வேண்டும் எனும் பிரார்த்தனை தேவை. சரணாகதி மனப்பான்மை தான் ஒருவனது ஆன்மீக வாழ்வின் அடித்தளமாகும்.       ---♥♥♥---

Monday, May 3, 2010

மதமாற்றம் அவசியமா?
மதங்கள் மனிதனின் படைப்பாகும்: ஒரு மதத்தையும் ஸ்ரீராமரும்; ஸ்ரீகிருஷ்ணரும், கிறிஸ்துவும் உருவாக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த, வேறுபட்ட நிலையிலிருந்த மக்களை முன்னேற்றுவதற்கு அங்கங்கே தோன்றிய மகான்களினாலும், அவதாரங்களினாலும் அருளப்பட்ட உபதேசங்களை பின்பற்றிய சீடர்களே பிற்காலத்தில் அவற்றை ஒவ்வொரு மதமாக உருவாக்கினர். மக்களின் கலாச்சாரங்களும், தேவைகளும் வேறுபட்டவையாக இருந்த காரணத்தால் பல மதங்கள் தோன்றின.ஒவ்வொரு மதமும் அதற்கே உரிய தனித்தன்மையுடன் திகழ்கிறது. பொருளற்ற மதம் என்று எதுவும் இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், அனைவரையும் "எனது" மதத்தில் சேர்க்கவேண்டும் என்ற பகுத்தறிவற்ற சிந்தனை நம் மனதிலிருந்து அடியோடு நீங்கிவிடும்.
ஆன்மிகமே மதத்தின் உயிர்நாடி. ஆசாரங்களும், நம்பிக்கையும் அதன் மேல்தோலாகும். ஆன்மிகம் என்பது ஒவ்வொருவரும் "நான் யார்" என்பதை உணர்வதாகும். தன்னை அறிபவனே உண்மையான மதநம்பிக்கை உள்ளவன். தன்னை அறியும் ஆன்மிகப் பாதையில் முன்னேறுபவன் மத ஆசாரங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபகிறான். நாம் அனைவரும் ஒரே மெய்ப்பொருளே. அது சாந்தியாகும்; அன்பாகும். அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றே. இங்கே பயம், வெறுப்பு, போட்டி ஆகியவை தேவையே இல்லை. வேறுபாடுகள் எல்லாம் மேல்மட்டத்தில் காணப்படுபவை. மெய்ப்பொருளை அறிந்தவர் மனதில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. வேறுபாடுகள் காணப்படும் இடத்தில் ஆத்மானுபூதி இல்லை. மனிதனின் மனம் மதம் என்னும் பிணைப்பிலிருந்து விடுபடுகிறது. மதம் எதுவாக இருப்பினும், ஆன்மிக தத்துவங்களை புரிந்துகொண்டால் அந்த மதத்தை அனுஷ்டித்தவாறே யாரும் இலட்சியத்தை அடைய முடியும். உதாரணமாக கிருஷ்ணனை வணங்கினாலும், கிறிஸ்துவை வணங்கினாலும், அல்லாவை வழிபட்டாலும் அனைத்திலும் அடிப்படையில் பக்தி மார்க்க தத்துவமே பின்பற்றப்படுகிறது. நாம ரூபங்கள் முக்கியம் அல்ல. இதயத் தூய்மையும், சமர்ப்பண மனோபாவமும் தான் முக்கியம்.
மெய்ப்பொருளை அறிவதற்கு ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் பாதையைப் பின்பற்றும் உரிமையும், சுதந்திரமும் உண்டு. ஒருவரின் நம்பிக்கையைக் குலைப்பது மிகப்பெரிய பாபமாகும். ஒருவரின் நம்பிக்கையைக் குலைத்தால் பின் அவரிடத்தில் மற்றொரு நம்பிக்கையை வளர்ப்பது எளிதான செயலல்ல.அறியாமை மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாதையைத் தேர்ந்தெடுப்பது கூடாது. அதற்கு முதலில் அவரவர் பிறந்து, வளர்ந்த மதத்தைப் பற்றிய அறிவும், ஆன்மிகம் என்றால் என்ன என்ற அறிவும் தேவை. தூண்டுதலாலோ, பேராசையாலோ மதம் மாறும் பலரால் பழைய நம்பிக்கைகளை முற்றிலும் கைவிட முடிவதில்லை. அவர்கள் மனதில் குற்ற உணர்வு உண்டாகும். பழைய மத நம்பிக்கை குலைந்தும், புதிய மத நம்பிக்கை உறுதியற்றும் இருக்கும். அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பங்கள் சிதைந்து போகின்றன. மெய்ப்பொருளை அறிவதற்கான பாதைகள் என்ற நோக்கத்துடன் ஆரம்பித்த மதங்கள் பின்னர் இயக்கங்களாக மாறிய போது, இயக்கத்தின் வலிமையைக் காப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மதத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. தங்கள் அதிகாரம், தலைமை ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்கு உரிய ஸ்தாபனங்களாக இயக்கங்கள் மாறிவிட்டன. அவர்கள் மதத்தின் தத்துவங்களுக்கு தங்கள் விருப்பப்படி விளக்கமளித்தனர். பெரும்பாலும் அவற்றைப் பிறர் மீது திணிக்க முயன்றனர்.
இவ்வாறு மனிதனை முக்தியை நோக்கி அழைத்துச் செல்வதற்காக தோன்றிய மதங்கள் அவனைப் பிணைக்கும் சங்கிலியாக மாறிவிட்ட காட்சியையே நாம் காணுகின்றோம். உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் வளர்க்க வேண்டிய மதங்களே உலகில் ஏற்பட்ட பல போருக்கும், போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தன.
நாம் எந்த மதத்தை நம்புகிறோமோ அதில் இருந்தவாறே ஆன்மிகத்தில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். பிறரையும் அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அது தான் தார்மீகமான முறை. கிறிஸ்து, "உன்னைப் போல் உன் அயலானையும் நேசி." என்றே உபதேசித்தார். அதை வாழ்வில் பின்பற்றினால் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பல நீக்கி விடும். அயலானான கிறிஸ்தவனை மட்டும் நேசிக்க வேண்டும் என்று கிறிஸ்து கூறவில்லை. அயலான் என்பதில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இதைப் புரிந்துகொள்ளும் அளவு பரந்த மனம் இல்லையெனில் மதத்தால் பெறும் பயன் தான் என்ன? நாமனைவரும் மதங்களின் இதயமாக உள்ள நோக்கத்தை அறிந்து, அன்பு, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை எனும் புதுயுகத்தை நோக்கிக் காலெடுத்து வைக்கவே இனி முயற்சிக்க வேண்டும்.
இந்து மதம் யாரையும் எதிர்ப்பதில்லை. யாரும் தங்கள் மதத்தையோ, நம்பிக்கையையோ விட்டுவிட வேண்டுமென்று கூறவுமில்லை. அது மட்டுமல்ல,ஒருவரது நம்பிக்கையைக் கெடுப்பதை அதர்மமாகவும் அது கருதுகிறது. எல்லா மதங்களையும் ஒரே இலட்சியத்தை அடைவதற்கான பலவித மார்க்கங்களாகவே அது கருதுகிறது. சனாதன தர்மம் வாழ்வின் முழுமையான நிர்வாகவியல் சாஸ்திரமாகும்.அது மனித குலத்தின் ஆன்மிக நலனிற்கும், மற்றும் உலகியல் நலனிற்கும் வழிவகுக்கும்.

Wednesday, April 28, 2010

சிந்தித்துச் செயற்படுங்கள்.
சிந்தனையின் மூலமே நாம் வாழ்வில் எதையும் பெறுகிறோம். பாத்திரத்தைக் கழுவுதல் என்ற சாதாரண சிறிய செயல் முதல் சந்திரனில் இறங்குதல் என்ற மிகப் பெரிய செயல் வரை நம்மால் செய்ய முடிகிறது எனில் அதன் ஆரம்பம் ஒரு சிந்தனையிலாகும். எந்த ஒரு கலைப்படைப்பும் கலைஞனின் மனதில் தோன்றும் சிந்தனையில் தான் உருக்கொள்கிறது. சிந்தனைகளின் சக்தி எல்லையற்றது. ஆனால் வெறும் சிந்தனை மட்டும் போதாது. நம்மால் நாள் முழுவதும் அமர்ந்து சிந்திக்க முடியும். பல தினங்கள் மனதில் ஒரு விஷயத்தை பாவனை செய்ய முடியும். இதனால் மட்டும் அந்த சிந்தனை, அந்த பாவனை உண்மையாகி விடுமா? சிந்தனைகளை செயலாக வடிவமைக்க வேண்டும். கர்மமோ, சிந்தனையோ தனியாகச் செயல்படுவதால் பயனில்லை. நமது ஒவ்வொரு செயலும், சிந்தனையால் வழிநடத்தப்படவேண்டும். அப்போதுதான் பலன் விளையும்.
தீயால் வீட்டுக்கூரையையும் எரிக்கலாம், உணவும் தயாரிக்கலாம். தீயை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. நல்ல சிந்தனையிலிருந்து நல்ல செயல் பிறக்கிறது. அது நல்ல பலனை அளிக்கிறது. தீய சிந்தனை தீய செயலுக்குக் காரணமாகிறது. அது தீய பலனை அளிக்கிறது. நல்ல சிந்தனையும், நற்செயலும் இணையும் இடத்திற்கு இறை அருள் வந்து சேரும். அதனால் நல்லதையே சிந்தியுங்கள், நன்றாகச் செயற்படுங்கள். அதுதான் வெற்றியை அடைவதற்கான ராஜபாதையாகும்.

Monday, April 26, 2010

ஆன்மீகம் என்பது உலக சுகங்களை எல்லாம் அனுபவித்து முடித்த பின், நடப்பதற்குக்கூட இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தவர்களுக்குரியது என நவீனகால மனிதன் கருதுகிறான். அது உண்மையல்ல. வாழ்வில் சுகமும், துக்கமும் வரும்போது அவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் அதாவது அதிகம் மகிழவோ, சோர்ந்து வருந்தவோ செய்யாமல் இரண்டையும் சமநோக்கோடு ஏற்றுக்கொண்டு மன அமைதியுடன் வாழ்வதற்கு உதவுவதே ஆன்மீகமாகும். ஆன்மீகத்திற்கு செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் வீணாவதில்லை. அது நிலையான வைப்புக் கணக்கு போன்றது. உலக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் இறைவனை சிந்திக்கவும், ஜப தியானங்கள் செய்யவும் சிறிது நேரத்தையாவது செலவிடுங்கள்.

Friday, April 23, 2010

இறைவனை அடைக்கலமடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு சட்டத்தரணிகள் வாதாடுவது போன்றதாகும். வாதம் எந்த முடிவையும் அளிக்காது. வாதத்திற்கு தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. நீதிபதி இல்லாமல் வாதம் நடந்தால், வாதத்தைத் தொடரலாமே அன்றி தீர்ப்பு அளிக்க முடியாது. இறை குணங்கள் நம்மிடம் வளர்வதற்காகவே இறைவனை வணங்குகின்றோம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இறைவன் என்பது மெய்ப்பொருளாகும். அந்த மெய்ப்பொருளை நாம் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அதற்கு ஒரு குறையும் ஏற்படாது. புவியீர்ப்பு சக்தி உண்மையாகும். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அது இல்லாமல் போவதில்லை. அதே சமயம் அதை மறுத்து, உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போது ஏற்படும் விபத்தின் மூலம் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். இதுபோல உண்மைக்கு எதிரான முகத்தைத் திருப்பிக்கொள்வது, கண்களை மூடிக்கொண்டு "இருட்டு" என்று கூறுவதாகும். இறைவன் என்ற மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை முறைப்படுத்துவதன் மூலம் அல்லல் அற்ற வாழ்க்கை வாழ முடியும்.

Thursday, April 22, 2010

"லோகா சமஸ்தா: ஷுகினோ பவந்து" நமது முன்னோர்களான ரிஷிகள் தந்துள்ள மந்திரம் இது. இந்த மந்திரம் நமக்கும், நம் குடும்பத்திற்கும் மட்டும் உரியதல்ல. இவ்வுலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.


Tuesday, April 20, 2010

Sunday, April 18, 2010

குண்டலினி சக்தி


குண்டலினி சக்தி என்பது எல்லா உயிரினங்களிலும் இருக்கும் ஜீவசக்தி ஆகும்: இது முதுகெலும்பின் அடிப்பாகத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்பாம்பைப் போன்றது. இடைவிடாத தியானத்தாலும், குருவின் அருளாலும் இச்சக்தி விழிப்படைகிறது. அப்போது அது முதுகெலும்பில் உள்ள கழுமுனை நாடி வழியாக தலையில் இருக்கும் ஷஹஸ்ராரத்தில் உள்ள ஆண்பம்பைக் காணும் ஆவலில் மேலெழுந்து செல்கிறது. யோகத்தினால் ஏற்படும் உள்ளுணர்வின் வாயிலாக இதை அனுபவிக்கலாம். குண்டலினி சக்தி ஒரு ஆதாரத்தை அடைந்த பிறகு அந்த ஆதாரத்தை நன்றாக மலரச் செய்து செம்மைப்படுத்தி அடுத்த ஆதாரத்திற்கு செல்கிறது. குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரத்தை அடையும் பொழுதும் சாதகன் பல விதமான அனுபவங்களைப் பெறுகிறான். தெய்வீகமான அனுபவங்களும், ஆசையைத் தூண்டிவிடும் அனுபவங்களும் ஏற்படும். ஒரு சற்குருவின் மேற்பார்வை இல்லாத சாதகன் இந்த நிலைகளை மிக உயர்ந்தது, கடவுள் காட்சி கிடைத்துவிட்டது என்று தவறாக எண்ணி ஆன்மீகப் பாதையிலிருந்து வழுவலாம். இதனால்தான் சற்குருவின் கண்காணிப்பு ஒரு சாதகனுக்கு மிக அவசியம் என்று கூறப்படுகிறது.
குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரங்களின் வழியாக மேலெழும்போது உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் முழுவதும் மிளகாயை அரைத்துத் தேய்த்தது போன்ற எரிச்சல் ஏற்படும். உடலில் அதிகமான வெப்பம் தோன்றும். அடிக்கடி மயிர்க்கூச்சல் எடுக்கும், வேர்வை கசிவது போல் உடலிலிருந்து நீர் கசியும், உடம்பு துரும்பாக இளைத்து விடும். இந்நிலையில் சாதகன் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக அவன் கண்காணிக்கப்படவேண்டும். நேரான வழவழப்பான பலகையில் படுக்க வேண்டும். ஒரு சிறு அடி கூட படக்கூடாது. அது பெரிய கெடுதலை ஏற்படுத்தும். குண்டலினி சக்தி விழிப்பு அடைந்துவிட்டால் சாதகன் மிகவும் பொலிவு பெறுவான். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களைக் கடந்து குண்டலினி கடைசியாகத் தனது உண்மை இருப்பிடமான ஷஹஸ்ராரத்தை அடைகிறது. அப்போது உடலில் புத்துணர்வு ஏற்பட்டு, உடல் முழுவதும் குளுமையும், அமுத மழையும் பொழிகிறது. பழைய உடல் ஆன்மீக சக்தி நிறைந்த புதிய உடலாக மாறுகிறது.

Saturday, April 17, 2010

Friday, April 16, 2010

Wednesday, April 14, 2010


மனச்சாட்சியே மனிதனுக்கு நீதியையும் நேர்மையையும் போதிக்கிறது. தனி மனிதனின் எல்லா நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்ந்து, ஆராய்ந்து எச்சரிக்கிறது. அதன் எச்சரிக்கையை பின்பற்றாவிட்டாலோ புறக்கணித்தாலோ அதன் எச்சரிக்கை நின்றுவிடுகிறது. மனச்சாட்சி உங்களிடமிருந்து முற்றாகவே விலகிவிடுகிறது. மனச்சாட்சி இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியாது.
ஐம்புலன்களை ஆதாரமாக வைத்துத்தான் மூளை வெளியுலக தொடர்புகளை பெறுகிறது. எனினும் புலன்களை எப்போதும் நம்பிவிடக்கூடாது. அவற்றையும் விவேகம், மனச்சாட்சியால் நெறிப்படுத்த வேண்டும்.


Tuesday, April 13, 2010



புத்தாண்டு பிறந்துள்ளது. புதுவருடப் பிறப்பு என்பது நம் மனங்களில் உற்சாகமும், எதிபார்ப்பும் நிறைகின்ற சமயமாகும். வருடம் மாறியதால் மாற்றம் ஏற்பட்டுவிடாது. மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் நாமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நமது எதிபார்ப்புகள் நிறைவேறும். அனைவரும் முயற்சி செய்து முன்னேறுவதாக இவ்வருடம் அமையட்டும். சுற்றுப்புறமே ஆனந்தம் நிறைந்ததாக மாறட்டும். சென்ற வருடத்தைவிட சிறிதாவது ஒரு நல்ல குடும்பத்தை, ஒரு நல்ல நாட்டை உருவாக்க நம் அனைவருக்கும் இயலட்டும். அம்மாவின் குழந்தைகள் அன்பு மற்றும் அமைதியின் செய்தியை தாங்கிச் செல்லட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் சந்தோசமும் நிறைய அம்மா பரமாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்.*******அம்மா*******

Monday, April 12, 2010

உறங்கும் விழிகள் உலகத்தைக் காண்பதில்லை. மயங்கும் மனம் ஆன்மாவை அறிவதில்லை.

ஒவ்வோர் உயிரிலும் தெய்வசக்தி உள்ளது. மானிடத்தில் தெய்வசக்தி மறைந்திருப்பதை ஞானியர் அறிவர். அவர்களுடைய ஆழ்ந்த தியானம் அதைக் காட்டும்.

மனிதன் ஒளியைத் தேடும் இன்னொரு ஒளி.

படிக்கிறவனுக்கு பத்து எண்ணங்கள், பார்க்கிறவனுக்கு நூறு எண்ணங்கள், அனுபவிக்கிறவனுக்கோ ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஆனால் தியானிக்கிறவனுக்கோ ஒரேயொரு எண்ணம்தான்.

. ஆன்மா மிகச்சிறிய ஒளிப்பொறி அது தொட்டுணரக் கூடியதோ கண்டறியக் கூடியதோ அல்ல.

Sunday, April 11, 2010

சிந்தனைக்கதை:எத்தனை பேர்?

ஒருநாள் ஒட்டகக் குட்டி ஒன்று தனது தந்தையைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்டது. "அப்பா, நம் முதுகில் திமில் இருப்பதன் காரணம் என்ன?"
"மகனே! அதில் சேர்த்து வைக்கப்படும் கொழுப்பானது நாம் பாலைவனங்களில் சஞ்சரிக்கும் போது நமது உடல்நிலையைப் பேண உதவுகிறது."
"நல்லது தந்தையே! நமது கண்களின் மீது மிக நீண்ட இமைகள் இருப்பதன் கரணம் என்ன?"
"பாலைவனத்தில் மணல்க்காற்று வீசும் போது மணல்துகள்கள் நம் கண்களில் விழுந்துவிட வாய்ப்புண்டு. நீண்ட கண் இமைகள் நாம் இதனால் குருடாகிவிடாமல் காக்க உதவுகின்றன."
"நன்றி தந்தையே! நமக்கு பரந்து விரிந்த சதையுள்ள கால்கள் இருக்கக் காரணம் என்ன?"
"பாலைவனத்தில் உள்ள மணல் மிகவும் மென்மையானது. அதில் கால்கள் புதைந்துவிடாமல் நடக்க இவை உதவுகின்றன."
இந்த பதில்களால் வியப்பிலாழ்ந்த குட்டி ஒட்டகம் தந்தையைப் பார்த்து கேட்டது "மிகவும் நன்றி தந்தையே! அப்படியானால் இந்த மிருகக்காட்சிச்சாலையில் நாம் என்ன செய்கிறோம்?"
மனிதர்களாகிய நாம்;  நமது தெய்வீக இயல்பை அறிந்து கொள்வதற்கான எல்லா வழிகளையும் அறிந்திருக்கிறோம்.     ஆனால்   நமது விருப்பு, வெறுப்பு என்ற கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். விடுதலையை வேண்டுவோர் எத்தனை பேர்?!

Friday, April 9, 2010

மனோபாவம்

ஒருமுறை மருத்துவர் ஒருவர் கிராமத்திற்குச் சென்று, மது அருந்துவதால் விளையும் தீமைகளைத் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தீர்மானித்தார். கிராமத்திலிருந்த குடிகாரர்களை ஒன்றாகக் கூட்டினார். அவர்களுக்கு மதுவால் விளையும் தீமைகளைக் குறித்து உணர்த்த பலவற்றைக் கூறிப் பார்த்தார். தனது முயற்சி நினைத்த அளவு பலனளிக்கவில்லை என்பதை அறிந்து, ஒரு பரிசோதனையின் மூலம் புரியவைக்கத் தீர்மானித்தார். அவர், இரண்டு கண்ணாடிக் குப்பிகளை எடுத்தார். ஒன்றில் சுத்தமான தண்ணீரையும் இரண்டாவதில் சாராயத்தையும் நிறைத்தார். பின்னர் ஒரு மண்புழுவை எடுத்து தண்ணீர் நிறைந்த குப்பியில் போட்டார். அந்த மண்புழு நீரில் அங்குமிங்கும் நீந்தி மகிழ்ந்தது. மற்றொரு மண்புழுவை எடுத்து சாராயம் இருந்த குப்பியில் போட்டார். அது ஒருமுறை துடித்தது; பின்னர் பல துண்டுகளாயிற்று. கடைசியில் அது பொடிப்பொடியாகி மறைந்தது. உடல் கரைந்து போயிற்று. அனைவரும் இதைக் கண்டு பேச்சிழந்து அமர்ந்திருந்தனர். மது அருந்துவதால் விளையும் தீமைகளைக் குறித்து இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என மருத்துவர் கருதினார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி, "இந்தப் பரிசோதனையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று கேட்டார். உடனே, குடிமயக்கத்தால் நேராக நிற்கக் கூட முடியாத ஒரு குடிகாரன் எழுந்து நின்று உரத்த குரலில், "எல்லோரும் குடியுங்கள்! பார்த்தீர்களா, குடித்தால் வயிற்றிலுள்ள புழுவெல்லாம் செத்துவிடும்" என்றான்.

குழந்தைகளே! கேட்கும் விடயத்தை சரியாகப்புரிந்துகொள்ளக் கூடிய களங்கமற்ற மனமே தேவை. களங்கமற்ற தூய இதயம் இருந்தால் அனைத்திலும் நல்லதைக் காண முடியும்.

Thursday, April 8, 2010



ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரிய தனிச் சிறப்பு உண்டு. பாரதத்தின் சிறப்பும், உயர்வும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாகும். எடுப்பதில் அல்ல, கொடுப்பதில் தான் இன்பம்; அடைவதில் அல்ல; துறப்பதில் தான் ஆனந்தம் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து ஓதிய அவதாரங்களும், மகான்களும், ரிஷிகளும், முனிவர்களும் தோன்றிய புனித பூமி இது.
பாரதம் ரிஷிகளின் நாடு. உலகிற்கு எந்தக் காலத்திலும் நன்மையையும், புகழையும் அளிக்கும் பண்பாட்டையே ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். அந்தப் பண்பாடே நமக்கு அன்னை. அதை நாம் காப்பாற்றி வளர்க்க வேண்டும். "மாத்ரு தேவோ பவ (அன்னையைத் தெய்வமாக மதி) பித்ரு தேவோ பவ (தந்தையைத் தெய்வமாக மதி) ஆசார்ய தேவோ பவ (குருவைத் தெய்வமாக மதி) என்பதே நமது முன்னோர்கள் நல்கிய உபதேசம். இந்த அன்பு தான் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் சங்கிலி. அந்த சங்கிலி இன்று உடைந்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தீவாக மாறும் காட்சியையே நாம் இன்று கண்டு வருகிறோம்.
நம்முடைய பண்பாடும், நமது தாய்நாடும் நமக்கு அன்னை ஆவாள். அந்தப் பண்பாட்டுடன் நமக்குள்ள உறவை இழந்தால் நாம் நூலறுந்த பட்டம் போலாகி விடுவோம். பண்பாட்டை வளர்ப்பதும் தாய்நாட்டிற்கு சேவை செய்வதும் நம் அனைவரதும் தர்மமாகும். பண்பாட்டையும் தர்மத்தையும் வளர்ப்பதன் மூலம் அமைதியும், செழிப்பும் நிறைந்த ஒரு நாட்டை, ஒரு உலகத்தை உருவாக்க நம்மால் முடியும். இயற்கையின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

Tuesday, April 6, 2010

♥♠♥ சிந்தனைக்கதை: இதய மலர் ♥♠♥

ஒரு பக்தன் நிறைய ஆப்பிள், திராட்சை, மற்றும் பலவித பலகாரங்களை எல்லாம் வாங்கி பூஜை அறையில் வைத்தான். பிறகு இறைவனை நோக்கி, " இறைவா! நான் உனக்காக எதையெல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் என்று பார்த்தாயா? இப்போது உனக்கு திருப்தி தானே?" என்று கேட்டான்: உடனே ஒரு குரல்; "இல்லை, எனக்கு இது ஒன்றும் திருப்தியைத் தரவில்லை" என்றது.
"இறைவா, உனக்கு திருப்தியை அளிப்பது எது என்று சொல். நான் அதை வாங்கி வருகிறேன்" என்றான் பக்தன். " இதய மலர் என்று ஒரு மலர் இருக்கிறது ; அதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது" என்றார் இறைவன். பக்தன் "அது எங்கே கிடக்கும்" என்று கேட்டான். "மிகவும் அருகிலுள்ள வீட்டில் கிடைக்கும்" என்றார் இறைவன். பக்தன் உடனே அடுத்த வீட்டிற்குச் சென்று விசாரித்தான். ஆனால் அவர்களுக்கு அப்படி ஒரு மலரைக் குறித்து எதுவுமே தெரியவில்லை. அந்த மலரைத் தேடி அவன் அந்தக் கிராமத்திலிருந்த எல்லா வீடுகளுக்கும் சென்றான். அனைவரிடமிருந்தும் ஒரே பதில்தான் கிடைத்தது " அப்படி ஒரு மலரைக் குறித்து நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை" என்று. சோர்வடைந்த பக்தன் பகவானிடம் திரும்பிச் சென்று சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து "இறைவா! என்னை மன்னிக்க வேண்டும்; நான் இந்தக் கிராமம் முழுவதும் தேடினேன். ஆனால் நீ சொன்ன அந்த இதய மலர் எங்குமே கிடைக்கவில்லை. இனி உனக்கு தருவதற்கு என்னிடம் என் மனம் மட்டுமே உள்ளது" என்றான். "இதுதான் நான் விரும்பிய மலர்-இதய மலர். நீ அளித்தவை எல்லாம் என் சக்தியால் வளர்ந்தவை. என் சக்தியின்றி உனது கையைத் தூக்க உன்னால் முடியாது. உலகிலுள்ளவை அனைத்தும் என் படைப்பாகும். ஆனால் உனது படைப்பு ஒன்று உண்டு. "நான்" என்ற எண்ணம். அதைத்தான் எனக்கு சமர்ப்பிக்க வேண்டும். மனமே எல்லாவற்றையும் விட, நான் விரும்ம்பும் மலர்." என்று கூறினார் பகவான்..

Monday, April 5, 2010

மந்திரதீட்சை



மனத்தூய்மை தான் மந்திரதீட்சையின் முக்கிய நோக்கம். நம்முள்ளே இருக்கும் தெய்வீக சக்தி விழிப்படைய மந்திரதீட்சை உதவும். பிரம்மஞானியான குருவிடமிருந்து சக்தி வடிவமாகிய மந்திரம் சீடனின் இதயத்தில் செல்கிறது. மந்திரதீட்சையால் அகத்தூய்மை ஏற்படுகிறது. மந்திரத்தை திரும்பத் திரும்ப ஜபிப்பதால் சக்தி கிடைக்கிறது.

Sunday, April 4, 2010

மாதா அமிர்தானந்தமயிக்கு கெளரவ டாக்டர் பட்டம்


கொச்சி,ஏப். 1: ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள "ஸ்டேட் யூனிவர்சிட்டி ஆப் நியூயார்க்' பல்கலைக்கழகம் இந்த கெüரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவர் ஆற்றி வரும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் தலைவர் பாரத் ஜெயராமன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் மே 25-ம் தேதி நடைபெறும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.இந்த கெüரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்தியர் மாதா அமிர்தானந்தமயி என்பது குறிப்பிடத்தக்கது.

164 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், இதுவரை உலக அளவில் 2 தலைவர்களுக்கு மட்டுமே கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா அதில் ஒருவர்.

அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்களில் மாதா அமிர்தானந்தமயியும் ஒருவர் என்று அமிர்த விஸ்வ வித்யா பீட பல்கலைக்கழக இணை வேந்தர் அபயஅமிர்தா சைதன்யா, துணை வேந்தர் வெங்கட் ரங்கன் ஆகியோர் தெரிவித்தனர்.

இறைவன் ஒருவரே.

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்குகிறோம். உண்மையில் இறைவன் ஒருவரே. இந்து மதம் இறைவன் ஒருவரே என்று நம்புவது மட்டுமல்லாமல், அந்த இறைவனைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனவும், எங்கும் நிறைந்திருக்கும் சைதன்யமே இறைவன் எனவும் கூறுகிறது. இறைவன் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர், இருந்தாலும், பக்தனுக்கு அருள் புரிவதற்காக அவர் எந்த வடிவத்தையும் எடுக்கவல்லவர். எந்த பாவத்தை வேண்டுமானாலும் வெளிப்படுத்தவல்லவர். காற்று இளந் தென்றலாக வரலாம், வேகமாக வீசலாம், புயல் காற்றாகவும் மாறலாம், அந்தக் காற்றையும் கட்டுப்படுத்தும் சர்வேஸ்வரனால் எந்த பாவத்தையும் மேற்கொள்ள முடியுமல்லவா? அவருடைய மகிமைகளை வர்ணிக்க யாரால் முடியும்?
ஒரே இறைவன் சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், துர்க்கை, காளி, சரஸ்வதி என பல நாமங்களிலும் பல வடிவங்களிலும் ஆராதிக்கப்படுகிறார். ஒவ்வொருவரின் விருப்பங்களும் வேறுபட்டவை. அவர்களது பண்பாடு, வளர்ந்த சூழ்நிலை போன்றவை மாறுபட்டவை. அவரவரின் விருப்பத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப இறைவனை எந்த வடிவிலும் வணங்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு. இதனால்தான் இந்து மதத்தில் இறைவனின் பல வடிவங்கள் தோன்றினவே அன்றி, அவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல

Saturday, April 3, 2010

சிந்தனைக்கதை: இரத்தின மோதிரம்

ஒருமுறை ஒரு திருடன் ஒரு மகாத்மாவின் வீட்டில் திருடச் சென்றான்.திருடன் மிகவும் ஏழை. அவனும், அவனது குடும்பத்தினரும் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. அவனது நிலையை அறிந்து கொண்ட மகாத்மா திருடனை நோக்கி, "சும்மா நேரத்தை வீணாக்காதே. அலமாரியில் என் மனைவியின் விலை மதிப்புள்ள மோதிரம் இருக்கிறது. என் மனைவி உன்னைப் பிடிப்பதற்கு முன் அதை எடுத்துக் கொண்டு விரைவாக இங்கிருந்து ஓடிவிடு." என்றார். திருடனால் இதை நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்ட அவன், தான் கேட்டது உண்மையே என்று உறுதி செய்து கொண்டபின் அலமாரியை நோக்கி நடந்தான். அதிலிருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினான். அப்போது மகாத்மாவின் மனைவி அங்கு வந்தாள். மோதிரம் திருட்டுப் போய்விட்டது என்பது புரிந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். "ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள என் இரத்தின மோதிரத்தை யாரோ திருடி விட்டார்கள் " என்றாள். "அது அவ்வளவு விலை மதிப்புள்ளது என்று எனக்குத் தெரியவில்லையே!" என்று வியந்தார் மகாத்மா . உடனே திருடனின் பின்னால் ஓடினார். திருடனுக்கு முன்னால் சென்று நின்ற அவர், "நீ திருடிய மோதிரம் ஐயாயிரம் ரூபாய் விலை மதிப்புள்ளது. இதை நீ குறைந்த விலைக்கு விற்று விடாதே. இதைச் சொல்லவே உன் பின்னால் ஓடி வந்தேன்." என்றார்.
திருடனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவன் தனது வாழ்வில் இதுவரை இது போன்ற அன்பை அனுபவித்ததில்லை. அந்த ஒரு நிமிடத்தில் அவனது வாழ்வே மாறிவிட்டது. அவன் நன்னடத்தை உள்ள மனிதனாக மாறி உழைத்து வாழ ஆரம்பித்தான்

Wednesday, March 31, 2010



அன்பு நிறைந்த வசைச் சொற்கள் நறுமணமுள்ள, மென்மையான மலரால் அடிப்பது போன்றதாகும். கடினமான வசைச் சொற்கள் கல்லால் அடிப்பது போன்றதாகும்.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட மனத்தால் சரியான அன்பையும், கபடமான அன்பையும் வேறுபடுத்தி அறிய முடியாது.
வேதனையில் ஆழ்ந்துள்ள மனதைக் குளிரச் செய்ய அன்பால் தான் முடியும், மாறாக, அன்பின்மையானது பொதுவாக மனங்களை வேதனையில் ஆழ்த்துகிறது.
அன்பு கிடைப்பதற்கு மிக எளிதான வழி அன்பைக் கொடுப்பதுதான். அன்பு கிடைக்காவிடிலும் கொடுப்பவர்களே உயர்ந்தவர்கள்; அன்பு கிடைத்தாலும் அதைத் திருப்பிக் கொடுக்காதவர்கள் கடின இதயம் படைத்தவர்கள் ஆவர்.
குழந்தைகள், பூந்தொட்டியில் உள்ள சிறிய செடிகளைப் போன்றவர்கள். அன்பெனும் நீரை இடையிடையில் பாய்ச்சாவிட்டால் அவர்கள் வாடி வதங்கிப் போய்விடுவார்கள்.
துருப்பிடித்து அசைக்க முடியாத இணைப்பு பாகங்களில் எண்ணெய் ஊற்றி மெல்ல மெல்ல செயல்படச் செய்வது போல் மாறுபட்ட கருத்துக்களால் மரத்துவிட்ட மனித உறவுகளை அன்பெனும் எண்ணெய் ஊற்றி மெல்ல மெல்ல புத்துயிரூட்டலாம். மனித உறவுகளில் அன்பே எண்ணெயாகும். அன்பு இல்லாவிடில் உறவுகள் உலர்ந்து போகும்.
அனைவரும் அன்பை விரும்புகின்றனர். அது கொடுக்கக் கொடுக்க வற்றாத நிதியாகும். அருந்த அருந்த திகட்டாத தேனாகும். அன்பே அகில உலகின் சாரமாகும்.

"ஓம் நமசிவாய":

நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது " ஓம் நமசிவாய" என்று கூறி வணங்குகிறோம். இது ஏன்? "மங்களகரமானவருக்கு வணக்கம்" என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும். உலகிலுள்ள எல்லா மனிதரும் இறைவனின் அம்சமே.எனவே, நாம் ஒருவரை "ஓம் நமசிவாய" என்று கூறி வணங்கும் போது 'உங்களுக்குள்ளே இருக்கும் இறைவனைப் போற்றுகிறேன்: அந்த இறைவனின் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்று அவரிடம் கூறுவதாகப் பொருள்படும்.

Tuesday, March 30, 2010

தத்துவத்தை அறிந்து வாழ்தல்

டலையோ, புற சுகங்களையோ, புறபொருட்களையோ சார்ந்து நிற்பதல்ல வாழ்க்கை. வாழ்க்கையின் உண்மையான இன்பம் மனதை ஆதாரமாகக் கொண்டது. அந்த மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்தால் எல்லாம் நம் கைக்குள் அடங்கிவிடும். மனதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் கல்வியே உண்மையான கல்வி. அதுவே ஆன்மீகக் கல்வி. இந்தக் கல்வியைப் பயின்றால் தான் நாம் கற்றுள்ள பிற துறைகளின் அறிவை எல்லாம் முறையாகப் பயன்படுத்த முடியும்.குழந்தையைப் போன்ற இதயமும், விவேகம் நிறைந்த அறிவுமே ஆன்மீகவாதிக்குத் தேவை. அது இருந்தால் தான் ஆத்மானுபூதியை அனுபவிக்க முடியும். அத்தகையவரின் வாழ்வில் துன்பத்திற்கோ, ஏமாற்றத்திற்கோ இடமில்லை.அமைதியை அனுபவிக்க வேண்டுமெனில் களங்கமற்ற இதயம் தேவை. களங்கமற்ற இதயமே இறைவன் வாழுமிடமாகும்.♣♣♣♣

ஒரு துளி நீர் நதியாகாது, நதி எண்ணற்ற நீர்த்துளிகளால் ஆனது. எண்ணற்ற துளிகள் சேர்ந்தால் தான் நதியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அன்பால் உருவான ஒற்றுமையிலிருந்து தான் உண்மையான வாழ்வெனும் நீரோட்டம் உற்பத்தியாகும். அதன் மூலமே ஒற்றுமையும் அமைதியும் ஏற்படும்.

Monday, March 29, 2010

flower

"This world is like a flower. Each nation is a petal. If one petal is infested, does it not affect all the other petals? Does not the disease destroy the life and beauty of the flower? Is it not the duty of each one of us to protect and preserve the beauty and fragrance of this one world flower from being destroyed? This world of ours is a big, wonderful flower with many petals. Only when this is understood and becomes deeply ingrained within us, will there be any real peace and unity." - Amma

Friday, March 26, 2010


அம்மா! கனவுக்குச் சமமான இந்தப் பிரபஞ்ச நாடகம் நடக்கும் சிறிய மேடையில் நான் ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரம் இதுவாக இருக்கக் கூடும். இவ்வுலகிலுள்ள உறவுகளும், பந்தங்களும் பொய்யானவை. உனது பிரேமையே மெய்யானது அம்மா! பதவியும் செல்வமும் நிச்சயம் நீங்கிவிடும். உன்னோடு உள்ள தொடர்பு மட்டுமே என்னை விட்டு நீங்காது. அம்மா!தரிசனம் தந்தருள்க!! பிறவிக் கடலிலிருந்து என்னைக் காத்தருள்க! தேவி!  அம்மா! ஆசைகள் என்னும் எதிரிகளை நீக்கி துன்பத்தையும் துயரத்தையும் ஓட்டிடுவாய்.  உனது புன்னகை கடாட்சத்தால் பந்தங்களை அறுத்து நித்திய சாந்தி எனும் கரையை அடையச் செய்து விடு அம்மா!

Wednesday, March 24, 2010

Wednesday, March 17, 2010

அம்மாவின் வாழ்க்கை வரலாறு முதலாம் பாகம் -.- -.-

அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை வார்த்தைகளால் சுருக்கிவிட முடியாது: எனினும் அவரின் வாழ்க்கையே நம் மனித குலத்திற்கு ஒரு பாடமாக இருக்கிறது, நாம் அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ளவும் வேண்டியது. அம்மாவின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்காக அவரின் வாழ்க்கை
வரலாற்றை பதிவு செய்கிறேன்
அம்மாவின் அவதாரம்.---பறையகடவு -கேரளமாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்:அந்தக் கிராமத்தில் வசித்த இடமனேல் குடும்பத்தை சேர்ந்தவர் சுகுனானந்தர் அவரது மனைவி தமயந்தி. கடவுள் பக்தி மிகுந்த அந்த தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன.ஒரு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலேயே இறந்து விட்டது.மற்ற எட்டு குழந்தைகளில் நான்கு பெண்கள்.நான்கு பையன்கள்.இவர்களில் நான்காவதாகப் பிறந்த குழந்தையின் பெயர் தான் சுதாமணி.பெண்குழந்தை.1953ம் வருடம் செப்டம்பர் மாதம் 27 ம் திகதி பிறந்த சுதாமணி தான் இன்று உலகெங்கும் பக்தர்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்படும் ஸ்ரீமாதா அமிர்தானந்தமாயி. சுதாமணி பிறக்கும் பொழுதே அவரது கை விரல்கள் சின் முத்திரை தாங்கி இருந்ததாக அவரது பெற்றோர்கள் கூறியுள்ளார்கள்.
ஐந்து வயதிலேயே கண்ணன் மீது பக்திப் பாடல்களை தானே இயற்றி பாட ஆரம்பித்தார் சுதாமணி.அவருக்கு நல்ல குரல் வளம் இருந்தது.தான் எழுதிய பாட்டுக்களை சுதாமணி பாடுகிற போது அதைக் கேட்க கிராமத்து மக்கள் ஆர்வமுடன் கூடுவார்கள்.ஐந்து வயதில் சுதாமணி உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.அவரது அபாரமான நினைவாற்றல், அறிவுக்கூர்மை,எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் திறமை இவை எல்லாம் பள்ளியில் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தின.விளையாட்டு போல மிக எளிதாக பாடங்களை மனப்பாடம் செய்தார்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினார்.ஒன்பது வயதான போது அவரது தாயாரின் உடல் நலம் குன்றியது.குடும்ப வேலைகளை செய்ய வேண்டிய பொறுப்பு சுதாமணியின் தலையில் விழுந்தது.மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்வது முதல் சமையல் வேலைகள் வரை அனைத்தையும் சுதாமணியே செய்யலானார்.சுதாமணி பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனது.--------
இடை விடாத வீட்டு வேலைகளுக்கு மத்தியிலும் சுதாமணி, தினமும் ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உணவு அளிப்பதற்கு தவறமாட்டார். வீட்டுக்கு அருகில் உள்ள முதியோர்கள், கவனிக்க ஆளில்லாத போது அவர்களை குளிப்பாட்டி, உடை மாற்றி, சாப்பாடு ஊட்டி அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்ளுவார். ஒரு தடவை, இந்த அக்கறை கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அடுத்த வீட்டிலிருந்த ஏழைப்பெண்மணி ஒரு நாள் தன் கஷ்டங்களை எல்லாம் சுதாமணியிடம் சொல்லி அழுதாள். சுதாமணியின் மனம் அதைக்கேட்டு மிகவும் வேதனைப்பட்டது. நேரே தன் வீட்டுக்குப்போனார். வீட்டிலிருந்து தன் அம்மாவின் தங்க நகை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து அப்பெண்ணிடம் கொடுத்து விட்டார். இந்த விடயம் தெரிந்த போது சுதாமணியின் வீட்டார் கடும் கோபம் அடைந்தனர். அப்பா சுகுனானந்தர், மகளை ஒரு மரத்தில் கட்டி வைத்து ரத்தம் வரும் வரை அடித்துத் தீர்த்தார்.அவிழ்த்து விடப்பட்ட போது, நேரே வீட்டுப்பூஜை அறைக்குச் சென்று, "கடவுளே! பெற்றோரால் மகளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? எனக்கு ஏன் இந்த சோதனை? என்னை உன்னிடமே அழைத்துக்கொள்ள மாட்டாயா? " என்று அழுத படி பிரார்த்தனை செய்தார்.
பதினேழாவது வயதில் சுதாமணிக்கு தையல் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோரிடம் தையல் வகுப்பிற்கு போக அனுமதி கேட்டார். ஆனால் பெற்றோரது அனுமதி கிடைக்க வில்லை.மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் தினமும் ஒரு மணி நேரம் தையல் வகுப்பிற்கு போய் வர அனுமதி கிட்டியது. தன் வீட்டு வேலைகளை சீக்கிரமாக முடித்து விட்டு தையல் வகுப்பிற்கு போக ஆரம்பித்தார் சுதாமணி.-
வகுப்பில் சேர அனுமதித்ததே பெரிய விஷயம் என்பதால், தையல் வகுப்பிற்கான கட்டணத்தை பெற்றோரிடமிருந்து வாங்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை.எனவே, வசதி படைத்த சிலருக்கு துணி தைத்துக் கொடுத்து அதன் மூலம் கிடைத்த பணத்திலிருந்து பயிற்சிக் கட்டணம் கட்டினார்.அப்படிச் சம்பாதித்த பணத்தில்,கட்டணம் போக மிகுதியை ஏழைகளுக்கு உதவிட பயன்படுத்திக் கொண்டார்.தையல் வகுப்பினை நடத்தியவர் அந்த ஊரிலிருந்த தேவாலய பாதிரியார். தையல் வகுப்பில் தையல் இயந்திரத்தில் தைத்துக் கொண்டே, அது எழுப்பும் சத்தத்துக்கு ஏற்ப பாடியபடி சுதாமணி தைப்பார். அவரின் பக்தியும் பண்பாடும் அந்த பாதிரியாரை மிகவும் கவர்ந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் வேறு ஊருக்கு மாற்றலாகி போன அந்த எழுபது வயதினைத் தாண்டிய பாதிரியார் தேவாலய பாதிரியாருக்கு எழுதிய கடிதங்களில், சுதாமணியைப் பற்றி அன்புடன் விசாரித்ததுண்டு.
சுமார் இருபது வயதான போது சுதாமணிக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு சட்டை தைக்க அளவு எடுக்க வேண்டும் என்று சொல்லி சுதாமணியை அழைத்துச் சென்றனர். அந்த வீட்டுக்குப் போனதும் அந்த வீட்டுப் பெண்மணி, ஒரு செம்பில் தண்ணீரை கொடுத்து அடுத்த அறையில் இருந்த இளைஞரிடம் அந்தத் தண்ணீர் செம்பைக் கொடுக்கச் சொன்னார். இது பெண் பார்க்கும் தந்திரம் என்பதைப் புரிந்து கொண்ட சுதாமணி " நான் சட்டைக்கு அளவு கொடுக்கத்தான் வந்தேனேயொழிய யாருக்கும் தண்ணீர் கொடுக்க வரவில்லை!" என்று பட்டென்று சொல்லிவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.அடுத்தடுத்து சுதாமணியைப் பார்க்க வரன்கள் வந்த போதும், ஏறத்தாழ இதே அனுபவம் தான். இந்நிலையில் தான் சுதாமணி தனது சிறந்த கடவுள் பக்தியினால் கிருஷ்ண பாவத்தை வெளிப்படுத்தினார். -----
சுதாமணி, ஆரம்ப காலத்தில், வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் அடியில்தான் கிருஷ்ண பாவத்தில் தரிசனம் அளித்து வந்தார்.அந்த மரத்தை ஒட்டி ஒரு சாலை இருந்தது. அந்தச் சாலை வழியாக போகிற பொது மக்கள் சுதாமணியைக் கவனிப்பதை கௌரவமில்லை என்று கருதினர். அவருடைய தந்தை சுகுனானந்தர் அது குறித்து சுதாமணியிடம் குறை கூறினார்.ஒரு நாள் தரிசன நேரத்தில், சுதாமணியிடம் நேரில் வந்து தன்னுடைய மனதில் பட்டதைக் கூறினார். அதற்கு சுதாமணி "அப்படியானால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்கு வேறு இடம் பார்த்துக் கொடுங்கள், நல்ல இடமாக இல்லை என்றாலும் ஒரு மாட்டுத்தொழுவம் கூடப் போதுமானது". என்று கூறி விட்டார். இதைக் கேட்ட சுகுனானந்தர், தனது மாட்டுத் தொழுவத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.தரையை சிமெண்ட் தளமாக்கினார். ஒரு பகுதியை மாடுகளை கட்டப் பயன்படுத்திக் கொண்டு மறு பகுதியை கோயில் போல் உருமாற்றினார். சுதாமணி, அங்கேயே தன்னுடைய பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கத் தொடங்கினார். ஆனால் இந்த ஏற்பாடு சுதாமணியின் அண்ணன் சுபகனுக்குப் பிடிக்கவில்லை.
நாளுக்கு நாள் சுதாமணியின் இறைபக்தி, குறிப்பாக கிருஷ்ண பக்தி தீவிரமடைந்து கொண்டே வந்தது. கண்ணன் மீது ஏராளமான பாடல்களை இயற்றிப் பாடத் தொடங்கினார். பூஜை அறையிலேயே அதிக நேரம் செலவழித்தார். தன நினைவு இழந்த நிலையில், கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழியும். மகளுக்கு, மனோவியாதியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்ட பெற்றோர், ஒரு மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வந்து மந்திரித்த ஒரு கயிறைக் கட்டினார்கள்.
சில சமயங்களில் சுதாமணிக்குத் ´தானே கிருஷ்ணன் என்ற எண்ணம் வந்து விடும். பேரானந்தத்தில் திளைத்த நிலையில் நடனம் ஆடுவார். தூங்கினால் கனவில் கண்ணன் வருவதாகக் கூறுவார். நாளடைவில் கண்ணன், சுதாமணியை முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார். சுதாமணியின் பக்தியினால் கவரப்பட்ட ஏராளமான மக்கள் அவரைக் காண வரத் தொடங்கினார்கள். சுதாமணி தன்னையே கிரிஷ்ணனாக பாவித்து அவர்களுக்கு அருளாசி வழங்கத் தொடங்கினார். அவது மாட்டுத் தொழுவமே பக்தர்கள் கூடுமிடமானது. சுதாமணியைக் காண வரும் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தனர். அதே நேரம் அவருக்கு எதிர்ப்பாளர்களும் தோன்றினார்கள்.நாஸ்திகர்கள் ஆன அவர்கள், தங்களை "குருட்டு நம்பிக்கைகளை அகற்றும் குழு" என சொல்லிக் கொண்டனர். அக்கம் பக்கத்து கிராமங்களின் இளைஞர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டு சுதாமணி பற்றி அவதூறுப் பிரசாரம் செய்தனர். பக்தி என்ற பெயரில், அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றிவருகிறார்கள் சுதாமணியும் அவரது தந்தையும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். காவல் துறையினருக்கும் புகார் கொடுத்தனர்.காவல் துறை சுதாமணியை விசாரிக்க வந்தது. "இந்த இடம் நான் விரும்புகிற மாதிரி இல்லை. என்னை சிறையில் அடைத்து வையுங்கள், நான் அங்கே அமைதியாகத் தியானம் செய்கிறேன்! பூஜை செய்கிறேன்" என்று சொன்னார். அவரது கபடமற்ற பேச்சினையும், மன உறுதியினையும் கண்ட காவல் துறையினர் வெறுமனே திரும்பிச் சென்றனர். அதன் பின், உள்ளூர் காவல் துறை தங்கள் புகாருக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மேலதிகாரிகளுக்கு புகார் போனது, அவர்களும் வந்து விசாரணை நடாத்தி சுதாமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி சென்று விட்டனர்.
இரவு நேரங்களில் தன்னுடைய வீட்டுக்கு அருகிலிருந்த கடற்கரைக்கு போய் தியானம் செய்வதை சுதாமணி மிகவும் விரும்பினார். லேசான வெளிச்சம், பரந்த நீல வானம், அதில் மின்னும் நட்சத்திரங்கள், உடலைத் தழுவிச் செல்லும் போதே மனதுக்கு இதமான கடற்காற்று, இவை அனைத்தும் தேவியின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதாக அவருக்குத் தோன்றும்.கடற்கரைக்குச் சென்று அமர்ந்த சில நிமிடங்களிலேயே அவரது மனம் அமைதியாகி உள்முகமாகி விடும்.
சுதாமணி, அமைதியாக கடற்கரையில் தியானம் செய்து கொண்டிருக்க, அவருடைய வீட்டில் சுகுனானந்தர் தன மகளைக் காணாமல் தவிப்புடன் தேடிக்கொண்டு கடற்கரைக்கு வருவார். அங்கே சுதாமணி ஒரு பாறையைப் போல் அசையாமல் தியானத்தில் மூழ்கி இருப்பார். சுதாமணி இரவு நேரத்தில் தனியாக கடற்கரைக்குச் செல்வதற்கான காரணத்தை அறியாத ஊரார், அவரைப் பற்றி அவதூறாகப் பேசலானார்கள். இது சுகுனானந்தரையும் தமயந்தி அம்மாவையும் மன வருத்தமடையச் செய்தது. இதனால், சுகுனானந்தர் மிகவும் முயற்சி செய்து தன மகள் இரவில் தியானம் செய்ய கடற்கரைக்குச் செல்வதை தடுத்து விட்டார்.
சுதாமணியின் பக்தி சாதாரண மனிதர்களைப் போன்றதில்லை. அவர் தன்னை மறந்து தியானம் செய்வார். சில சமயங்களில் தேம்பித் தேம்பி அழுவார்.மற்றொரு சமயம், சின்னக் குழந்தையைப் போல் கைகளால் தாளமிட்டவாறு சிரிப்பார், தரையில் விழுந்து உருளுவார், காற்றைக் கூட "கண்ணா" என்றழைத்து அணைப்பார். சுதாமணியின் இத்தகைய உயர் நிலைப் பக்தியைப் பார்த்த அவரது குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் அவருக்கு மனநோய் என முடிவு கட்டினார்கள். அவரை அடக்கி வைக்க எண்ணித் துன்புறுத்தினர். இத்தகைய நடவடிக்கைகளால் மனம் நொந்த சுதாமணி, கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தார். ---உயிரை விடுவதற்கு கடலை நோக்கி ஓடினார். தண்ணீரை நெருங்கிய போது அவரை ஏதோ ஒன்று தடுத்தது. நீல வானிலும், கடல் நீரிலும் அவர் கண்ட காட்சியில் அவர் மனம் லயித்தது. கடற்கரை மணலில் விழுந்து நினைவு இழந்தார். வெகு நேரம் கழித்து அவரை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்தார்கள். சுதாமணியை பைத்தியம் என்று சொன்னவர்கள் இருந்தாலும், அவர் மீது அன்பு காட்டி அவருக்காக இரக்கம் காட்டியவர்களும் ஊரில் இருந்தார்கள். ஒரு நாள் உப்பங்கழி பகுதியில் சுதாமணி இந்த உலக உணர்வின்றி சகதி நிறைந்த மணலில் படுத்திருந்தார். உடல் முழுவதும் ஈர மணல் ஒட்டியிருந்தது. கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அவரைக் கண்டவர்கள், அவரது வீட்டுக்குப் போய் அவருடைய தந்தை சுகுனானந்தரிடம் விஷயத்தை சொன்னார்கள். ஆனால் அவரோ அது பற்றிக் கவலைப் படவில்லை. கடைசியில் ஊர் மக்களே அவரைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டுக்குள் படுக்க வைத்தார்கள். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய அண்ணன் சுபகன், " இந்தச் சனியனை, என் கட்டிலில் யார் படுக்க வைத்தது?" என்று கூச்சல் போட்டான். கட்டிலை கடுமையாக உலுக்கினான். கட்டிலே உடைந்து போனது. உடைந்த கட்டிலுக்கு மத்தியில் சுதாமணி சுயநினைவு இல்லாமல் இருந்தார். நினைவு திரும்பியதும், நடந்த சம்பவங்களைக் கேள்விப் பட்டு, "எல்லாம் நன்மைக்கே" என்று கூறினார்.


மறுநாள் தச்சு வேலைக்காரர் ஒருவர், ஒரு கட்டில், மேசை, நாற்காலி மூன்றையும் கொண்டுவந்து சுதாமணிக்கு காணிக்கையாக கொடுத்தார். பகவான் கிருஷ்ணர், தன் கனவில் வந்து சுதாமணிக்கு இவற்றைக் கொண்டு வந்து கொடுக்குமாறு ஆணையிட்டதாக கூறினார்.தொடரும்-----

முதலாம் அத்தியாயம் முடிந்து விட்டது. இரண்டாம் பாகம் புதிதாக தொடரப் படும். ♥♥♥♥✿◕‿◕♥♥♥♥✿◕‿◕
அம்மாவின் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம்
சுதாமணியைக் காணவரும் பக்தர்கள் அவரை அம்மா என்று அழைக்கத் தொடங்கினார்கள். அம்மாவுக்கு கிளிகள் என்றால் மிகவும் விருப்பம்.இயற்கை அழகு சூழ்ந்த அவரது வீடு இருந்த பகுதியில் பலவிதமான பறவைகள் பறந்து திரியும்.பல சமயங்களில் அம்மாவின் தோள்களின் மீது கிளிகள் பறந்து வந்து அமர்ந்து கொள்ளும். அம்மாவைக் காண வரும் பக்தர்கள் கிளி, புறா போன்ற பறவைகளை அன்புடன் அளிப்பதுண்டு.அம்மா அவற்றை ஒரு போதும் கூண்டில் அடைத்து வைத்ததில்லை.ஆனாலும் அந்தப் பறவைகள் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பறந்து சென்றதுமில்லை ஒரு முறை அவரது இல்லத்திற்கு அருகிலிருந்த பெரிய மரம் ஒன்றில் ஒரு கருடன் கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது. ஒரு நாள் அந்தக் கூடு உடைந்து இரண்டு குஞ்சுகள் கீழே விழுந்து விட்டன. சில சிறுவர்கள் அந்தக் குஞ்சுகளின் மீது கல்லெறிந்து கொல்ல முயன்றனர். அப்போது அந்தக் குஞ்சுகளை காப்பாற்றிய அம்மா, அவற்றிற்கு பாலூட்டி வளர்த்து, சுயமாக பறக்கிற நிலை வந்ததும் வானத்தில் பறக்க விட்டு சந்தோசப்பட்டார்.
சில தினங்களில் அம்மா தியானத்தில் ஈடுபட்ட நேரத்தில், பாம்புகள் அவரது உடலின் மேலால் ஊர்ந்து சென்றதாகவும் சிலர் கண்டதாவும் சொல்வார்கள்.ஒரு நாள் இடமன்னேல் இல்லத்திற்கு ஒரு நாய் வந்தது. அது எப்போதும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். அம்மா தியானத்தில் தன்னை மறந்து இருக்கும் போது, அருகிலேயே நின்று கொண்டு இருக்கும். யாராவது அம்மாவுக்குத் துன்பம் விளைவிக்க முயற்சி செய்தால் அவர்களைப் பார்த்து உரத்து குரைக்கும். சில சமயங்களில் அம்மா இந்த நாயையே தலையணையாக்கி, அதன் மீது தலை வைத்து வானத்தை நோக்கி பார்த்த படி படுத்திருப்பார். பல சமயங்களில் அந்த நாயும் அம்மாவின் மடியில் வந்து படுத்துக் கொள்ளும். ஒருநாள், அந்த நாயை நகராட்சியின் நாய் பிடிப்பவர்கள் பிடித்து விட்டார்கள். இந்தத் தகவலை கேள்விப்பட்ட அம்மா, அங்கே சென்றார். அவரைக் கண்டவுடன் குரலெடுத்து அழுவது போல் ஓலமிட்டது.அதன் கண்களில் கண்ணீர் பெருகியது. இந்தக் காட்சியைக் கண்ட நகராட்சியினர், அந்த நாயை விட்டு விட்டார்கள்.


ஒரு நாள் அம்மாவுக்கு ஏற்பட்ட தியான அனுபவம் வித்தியாசமானது. அது குறித்து அம்மாவே சொன்னது இது: "தியானத்தில் ஆழ்ந்திருந்த போது திடீரென்று கோரைப் பற்களும், நீண்ட நாக்கும், அடர்ந்து நீண்ட கருங்கூந்தலும், சிவந்த விழிகளும் கொண்ட காளி தேவி என்னைத் துரத்துவது போல உணர்ந்தேன். உடனே காளியிடமிருந்து தப்பித்து ஓட நினைத்தேன். அதன் பின், நானே காளி என்று உணர்ந்தேன். அடுத்த நிமிடம் என் கையில் வீணை இருப்பதாக உணர்ந்தேன். தலையில் தேவியின் கிரீடம். ´
'அதெப்படி நான் தேவியாக முடியும்' என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அடுத்து, சிவனைத் தியானம் செய்தேன். தலையில் நாகம், ஜடாமுடியுடன் நானே சிவனாக உணர்ந்தேன். அடுத்து விநாயகரைத் தியானித்த போது, எனக்கு விநாயகரின் திருவுருவம் ஏற்பட்டு விட்டதாக உணர்ந்தேன். இப்படி இறைவனின் எந்த வடிவைத் தியானித்தாலும், நான் அந்த உருவமாக மாறுவதாகவே உணர்ந்தேன். அப்போது என்னுள்ளே இருந்து ஒரு குரல் " இவர்கள் அனைவரும் உன்னுடன் என்றைக்கோ கலந்து விட்டார்கள். அப்படி இருக்க நீ ஏன் எல்லாத் தெய்வங்களையும் அழைக்கிறாய்?
என்று கேட்டது. அதன் பிறகு தெய்வ உருவங்களை தியானிப்பதை அம்மா நிறுத்தி விட்டார். எங்கும் நிறைந்த நாதப் பிரம்மமாகிய "ஓம்"அவருக்குள்ளே இனிமையாக ஒலித்தது.அந்த நாத வெள்ளத்தில் அம்மாவின் உள்ளம் கரைந்தது. ஆனாலும் அம்மா இன்றும் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். இது பற்றிக் கேட்டால், "தியானத்தின் மூலமாக அம்மா குழந்தைகள் அனைவரிடமும் -குறிப்பாக என்னை மனமுருக நினைப்பவர்கள் மற்றும் கஷ்டப்படுகிறவர்கள் ஆகியோரிடம் நான் செல்கிறேன்". என்று கூறுகிறார்


ஒரு நாள் சகோதரன் சுபகனும் இன்னும் சிலரும்; உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி அம்மாவை அழைத்துச் சென்று முன்னமே திட்டமிட்டபடி ஒரு வீட்டின் அறைக்குள் தள்ளி, கதவை மூடினார்கள்."உன்னால் குடும்பத்துக்கு எத்தனை அவமானம்! நீ உனது ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தி விடுவதாக சத்தியம் செய்து தராவிட்டால் உன்னைக் கொன்று விடுவோம்!: " என்று மிரட்டினார்கள். ஒருவன் கத்தியை எடுத்துக்காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான்.கையில் கத்தியுடன் அம்மாவை நெருங்கினான்.

"எனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை" என்றார் அம்மா. அம்மாவை அவன் கத்தியால் குத்த முயற்சித்த போது, அவனால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. தாங்க முடியாத நெஞ்சு வழியால் துடித்தபடி கீழே விழுந்தான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தன்னை கத்தியால் குத்திக் கொலை செய்தவனைக் காண அம்மா மருத்துவமனைக்குச் சென்றார். அவனுக்கு அன்புடன் ஆறுதல் சொல்லி, தன் கையால் உணவு ஊட்டி விட்டார். அம்மாவின் அன்பு மழையில் அவன் நனைந்தான். 
அம்மாவுக்கு பலவிதங்களில் தொல்லைகள் கொடுத்து வந்த உடன் பிறந்த சகோதரன் சுபகன் யானைக்கால் நோயால் மிகவும் கஷ்டப்பட்டான். திடீரென்று 1978 ஜூலை மாதம் ஒரு நாள் இரவு "தான் தீராத வியாதியால் அவதிப் படுவதால், தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டான். அம்மாவுக்கு எதிரானவர்கள் இதனை வைத்து அம்மாவுக்கும் அவரது தந்தை சுகுனானந்தருக்கும் சிக்கல் ஏற்படுத்தத் திட்டமிட்டார்கள். சுபகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இது திட்டமிட்ட கொலை என்று பிரசாரம் செய்து, அம்மாவையும் அவரது தந்தையையும் குற்றவாளிகளாக்க முயன்றனர். ஆனால் சுபகன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தனது சில நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தன்னுடைய முடிவைத் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தான். பிரேதப் பரிசோதனையும் இந்த முடிவு ஆதாரமற்றது என்று நிரூபித்தது.
அம்மாவின் அன்பாலும் கருணையாலும் ஈர்க்கப்பட்ட சில பிரம்மச்சாரிகள், அம்மாவின் சீடர்களாகி அம்மாவுடனேயே தங்கினார்கள். மிகவும் வசதிகள் குறைந்த அந்தச் சூழ்நிலையை யாரும் பொருட்படுத்தவில்லை. பாய், தலையணை இன்றி வெறுந்தரையில் படுத்து உறங்கினார்கள். கிடைத்த உணவை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர், வெளியூர்களுக்கு போகிற போது பேருந்துக் கட்டணம் கட்ட வழி இல்லாமல் நடந்தே சென்று வந்தனர்.
அம்மா வழக்கமான தனது வெள்ளை ஆடையில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாலும், அவ்வப்போது தலையில் கிரீடம், கழுத்தில் மாலை போன்றவற்றுடன் தேவியைப் போல் தரிசனம் அளிப்பது வழக்கம். இதற்கு தேவிபாவ தரிசனம் என்று பெயர். பல பக்தர்கள் அம்மாவை இந்தக் கோலத்தில் தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சியடைவதுண்டு, என்றாலும் சிலர் அம்மாவிடம், " நீங்கள் ஏன் தேவியைப் போல உங்களை அலங்கரித்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்பதுண்டு. அதற்கு அம்மா அளிக்கும் பதில் " ஒவ்வொரு உடையும் அதற்குரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாம் பிறக்கும் போது, ஆடையின்றிப் பிறந்தாலும், பின்னர் நாம் வாழும் நாடு, அங்கு நிலவும் கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப உடை அணிகிறோம். ஒருவன் என்ன உடை அணிந்திருந்தாலும் அவன் மனிதனே! இக்காலத்தில் மக்கள் உடைக்கு மிகவும் மதிப்பளிக்கிறார்கள். உடைகள் அதன் தன்மைக்கேற்ப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது போன்றது தான் "தேவிபாவ அலங்காரம்" என்று கூறினார். அம்மாவுடன் பலமணி நேரம் பேசினாலும் திருப்தியடையாத பக்தர்கள், தேவிபாவ தரிசனத்தின் போது சில நிமிடங்கள் பேசியதுமே திருப்தியடைந்து விடுகிறார்கள். தங்கள் மனக் குறைகளை தேவியிடமே கூறியதாக மன நிறைவினை அவர்கள் பெறுகிறார்கள்.

அமிர்தானந்தமயி மடம் இன்று மாபெரும் ஆசிரமமாக வளர்ந்து பல கிளைகளையும் கொண்டுள்ளது. இறைவனை அடைவதையும் உலகிற்கு தன்னலம் அற்ற சேவை செய்வதையும் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்ட நூற்றுக் கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆன்மீகப்பயிற்சியளித்து வருகிறார் அம்மா. பாரதத்தினர் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆசிரமத்தை தங்களுடைய ஆன்மீக இல்லமாக கருதுகிறார்கள். ஆசிரமத்தில் தங்கியுள்ள சமயங்களில், ஆசிரமத்தின் எல்லா வேலைகளிலும் அம்மா பங்கேற்கிறார். சமையல் அறையில் காய்கறி வெட்டுவது, கட்டட வேலை நடந்தால் தானும் மற்ற ஆசிரமவாசிகளுடன் சேர்ந்து மணலையும், கற்களையும் சுமப்பார்.மலத் தொட்டியினை துப்பரவு செய்யும் பணியில் கூட அம்மா தன்னையும் ஈடு படுத்திக்கொண்டதுண்டு. எந்த வேலையானாலும் சரி ஆசிரமவாசிகளிடம் சொல்லிவிட்டு தான் சும்மா இருந்தோம் என்பதே அம்மாவின் அகராதியில் கிடையாது. இரவு பூராவும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாலும் கூட, களைப்பு ஏதுமின்றி எல்லோருடனும் சேர்ந்து வேலை செய்வார். அம்மாவே கூட நின்று வேலை செய்கிறபோது, ஆசிரமவாசிகள் இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள்.அதனால் வேலை சீக்கிரமே முடிந்துவிடும்.
ஒரு நாள் அம்மாவைத் தரிசிக்க நோய்வாய்ப்பட்ட இளம் பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளை அம்மா அரவணைத்து ஆசி கூறிய போது, அவள் அம்மா அணிந்திருந்த வெள்ளைச் சேலையின் மீது வாந்தி எடுத்து விட்டாள். அம்மா, சற்று கூட அருவெறுப்பு அடையாமல் எழுந்து சென்று சேலை மாற்றி வந்தார். வாந்தி பட்ட சேலையை சுத்தம் செய்வதற்காக, ஒரு பிரம்மச்சாரிணி ஒரு கழியினை எடுத்துக் கொண்டு வந்து அதன் நுனியால் சேலையினை எடுத்துக் கொண்டு செல்வதை அம்மா கவனித்து விட்டார். " சேவை செய்ய வந்து விட்டு அருவெறுப்பு பார்ப்பது தவறு, எல்லோரிடமும் இறைவனைக் கண்டு சமமான மனோபாவத்துடன் சேவை செய்வது தான் தெய்வீகம். அதனைப் புரிந்து கொள்ளாமல், பஜனை, தியானம் இவைகளால் எந்த விதமான பயனுமில்லை." என்று அந்த பிரம்மசாரிணிக்கு அறிவுரை சொன்னதுடன் நிற்காமல், தானே அந்த சேலையை துவைத்தார் அம்மா.
அம்மா எப்போதுமே இந்த உலகத்தை ஒரு மலர் என்றும் இந்த உலகிலுள்ள பல்வேறு நாடுகளையும் அந்த மலரின் இதழ்கள் என்றும் வர்ணிப்பார்.1987 ம் ஆண்டு முதல் அம்மா பல்வேறு உலக நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயம் செய்கிறார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி,இத்தாலி, சுவிசர்லாந்து,ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், கனடா, மலேசியா என பல நாடுகள் இதில் அடங்கும். இந்த நாடுகளுக்குப் போகும் போது, அங்குள்ள பல்வேறு நகரங்களுக்கும் சென்று அம்மா தன பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். தவிர, இங்கெல்லாம் சத்சங்கம், தியானப் பயிற்சி, பூஜை ஆகிய அனைத்தும் நடைபெறுவது வழக்கம். அம்மா செல்லும் இடங்களிலெல்லாம் திரண்டு வரும் பக்தர்கள், அம்மாவிடம் ஏராளமான கேள்விகள் கேட்பார்கள். அம்மா, அந்தக் கேள்விகளுக்கெல்லாம் புன்சிரிப்புடன் பதிலளிப்பார். பொதுவாக, அம்மா, மலையாளத்தில் உரையாற்ற அது இந்தியாவானாலும் சரி அயல் நாடானாலும் சரி உள்ளூர் மொழியில் மொழி பெயர்க்கப்படும். ஆனாலும் அம்மா பேசும் அன்பு என்கிற மொழியை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. 2002 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு அமரிக்காவில் ஒரு ஆன்மீக மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள அம்மாவுக்கும் அழைப்பு வந்தது. அம்மா அதில் கலந்து கொண்டு "உலக அமைதிக்கு உற்ற வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை அங்கு திரண்டிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. எல்லோரும் அமைதியாக கேட்டு அதிசயப்பட்டனர். ஆனந்தமடைந்தனர்'
இவ்வுலகிலுள்ள கோடிக்கணக்கானோர் இன்று அம்மாவைத் தங்களுடைய தாயாகவும்,குருவாகவும் கருதுகின்றனர்.1993 ம் ஆண்டு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மதப் பேரவையில் அம்மா கலந்து கொண்டு உரையாற்றினார். அந்தச் சபையில் இந்து மதத்திற்காக மூன்று தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவருள் அம்மாவும் ஒருவர். இன்றைய இந்துமதம் என்கிற சர்வதேச ஆங்கில மாதப் பத்திரிகை அதே ஆண்டில், அம்மாவை அந்த ஆண்டிற்கான Hindu of the year ஆகத் தேர்ந்தெடுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பொன்விழாவை ஒட்டி 1995ம் ஆண்டு நியூயார்க் நகரின் தெய்வீக தூய ஜான் தேவாலயத்தில் ஒரு சர்வ மத சபை கூடியது. உலகிலுள்ள மிகப்பெரிய தேவாலயங்களில் இதுவும் ஒன்று. அம்மா இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.நிகழ்ச்சியின் முடிவில் அம்மா உலக நலன் வேண்டி, "லோகா சமஸ்தா ஷுகினோ பவந்து " (எல்லா உலகங்களும் இன்புற்று இருப்பதாகுக!) என்று பிரார்த்திக்க அதில் அனைவரும் கலந்து கொண்டனர்.
உலகெங்குமுள்ள எண்ணற்ற மக்களை அம்மா உயர்ந்தவர்களாக, நல்லவர்களாக உருவாக்கி வருகிறார்.கோபமுள்ளவர்களை அன்புமிக்கவர்களாகவும், தீயவர்களைத் தூயவர்களாகவும் மாற்றி வருகிறார். திக்கற்றவர்கள் தங்களுக்கு உற்றதுணையாக அம்மா இருப்பதை உணர்கின்றனர். நம்பிக்கை இழந்தவர்களின் உள்ளத்தில் அம்மா நம்பிக்கை ஊட்டுகிறார். துன்புற்றவர்களின் துயரைத் துடைக்கிறார். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி உறுதுணையாக வேண்டுமென அம்மா கூறுகிறார்.தமது குறைகளை இறைவனிடம் கூறுமாறு அம்மா வலியுறுத்தி வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக அம்மா, தனது குழந்தைகள், வாழ்வின் உன்னதமான இலட்சியமாகிய ஆத்மானுபூதியை அடைவதற்கு ஒவ்வொரு படித்தரத்திலும் உதவி வருகிறார்.
♥♥  " அம்மாவிடமிருந்து அன்பு இடைவிடாது இவ்வுலகிலுள்ள எல்லா ஜீவன்களையும் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இது என் இயல்பாகும் என்று அம்மா கூறுகிறார்" அம்மாவின் அளப்பரிய சேவை தொடர்ந்து கொண்டேயிருக்கும். நாங்கள் என்றென்றும் அவர் அன்பு மழையில் நனைந்து கொண்டேயிருப்போம்..........♥♥