Thursday, December 27, 2012
Tuesday, December 25, 2012
நாட்கள் நகர்கின்றன. உன் நினைவுகள் கூடிக் கொண்டே போகிறது. வருடங்கள், மாதங்கள் போனாலும் அழியாத உன் நினைவுகளில் பேரின்பம் கண்ணா! உன்மேல் கொண்ட ஆழ்ந்த அன்பினாலும், நீ என்னைத் தேடி வருவாய் என்ற நம்பிக்கையிலும் தான் உயிர்ப்புடன் வாழ்கிறேன் கண்ணா!
உன் அன்பெனும் இனிமையை உணர்ந்தேன் கண்ணா! கனவா, நிஜமா புரியவில்லை. எதுவோ இந்த நொடியில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய் என்ற நிம்மதியோடு இருக்கிறேன். நீ எங்கோ இருந்தாலும் நானும், நீயும் இதயத்தின் மொழியில் நிறையவே பேசிக்கொண்டிருக்கிறோம். ...முடிவில்லாமல் தொடர்கிறது எங்கள் உரையாடல்.... . .கொட்டும் பனியின் கடும் குளிரிலும் உன் அன்பின் மென்மையும், இனிமையும் என்னைச் சூழ்ந்துள்ளது .பேரானந்தம்....கண்ணா! ... உன்னை நினைத்தாலே பரவசம். கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எண்ணமெல்லாம் நீயாக நிற்கின்றாய் கண்ணா! உன் நினைவுடனே என் உயிர் பிரிந்து விட வேண்டும். இதைவிட வேறு ஆசைகள் எனக்கு இல்லை கண்ணா!
நான் அழுவதை பார்த்துக் கொண்டு கல்லாக இருப்பது உனக்கொன்றும் புதிதில்லையே...இப்படியே கல்லாகவே இரு... உன் மௌனத்தை கலைத்து விடாதே கண்ணா! நீ என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தாலும், எவ்வளவு காயப்படுத்தினாலும் நான் உன்னைக் காண தவமிருக்கிறேன். எந்த பிறவியிலாவது உன்னைக் காண்பேன்..நான் உன்மேல் கொண்ட பேரன்பின் சக்தி என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் கண்ணா!
Wednesday, December 19, 2012
Monday, December 17, 2012
கஷ்டம் வந்து விட்டதா? மனிதர்களின் காலில் விழுந்து பலனேதும் இல்லை. கடவுளின் திருவடியை நம் இருகைகளாலும் பற்றிக் கொள்வதே சிறந்த சரணாகதி. "நீ தான் எனக்கு கதி' என்று கெட்டியாக இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவனுக்கு எத்தனையோ முகங்கள், கைகள், ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், அவருக்கு பாதங்கள் (கால்கள்) என்னவோ இரண்டு மட்டும் தான். ஏனென்றால், அவரை வணங்கும் நமக்கு இரு கைகள் மட்டுமே. சரணாகதி அடைய வரும் அன்பர்கள் தன் இருகைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருணையோடு இருதிருவடிகளைத் தாங்கி நிற்கிறார். இதனையே, "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்று இறைவனின் திருவடியின் பெருமையை குறிப்பிடுவது வழக்கம்.
Tuesday, December 11, 2012
ஒரு சமயம் ஆயர்பாடியில் யசோதை கண்ணனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தாள். குழந்தையாக இருக்கும்போது தயிரையும், வெண்ணெயையும் திருடித் தின்றாலும், என்னை விட்டு எங்கும் போகாமல் இருந்தான். ஆனால், இளைஞனானதும் சொல்லாமல் கொள்ளாமல் இஷ்டம் போல் எங்காவது போய்விடுகிறானே,'' என்று வருந்தினாள். வளர்த்த பாசம் அவளை இப்படி எண்ண வைத்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. விறுவிறு என்று ஒரு வீட்டை நோக்கி நுழைந்தாள். அது வேறு யாருடைய வீடுமல்ல! கண்ணனின் காதலி ராதாவின் வீடு தான்.அவளிடம், ""அம்மா! ராதா! கண்ணனைக் கண்டாயா?'' என்று கேட்டாள். அவளோ கண்களை மூடியபடியே தியானத்தில் இருந்தாள். யசோதையின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. கண்ணனோடு இரண்டறக்கலந்து தெய்வீகப்பரவச நிலையில் இருந்த ராதா, மெல்ல உலகநினைவுக்குத் திரும்பியபடியே கண்விழித்தாள். தன் முன் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அப்படியே அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள். யசோதை பரபரப்புடன்,""ராதா! என்பிள்ளை கண்ணனைப் பார்த்தாயா?'' என்று மீண்டும் கேட்டாள்.
அவளோஇயல்பாக, ""கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்போது நம் உள்ளத்தில் கண்ணன் இருப்பதைக் காண்பீர்கள்,'' என்று சொன்னாள். யசோதையும் அப்படியே தியானித்தில் லயித்தாள். ராதா தன்னுடைய தெய்வீக சக்தியை யசோதையின் மீது செலுத்தினாள். புல்லாங்குழலை இசைத்தபடியே கண்ணன் கண்ணுக்குள் தோன்றினான். அதன்பின், நினைத்த நேரத்தில் எல்லாம் கண்ணனைக் காணும் பாக்கியத்தைப்பெற்றாள் யசோதை .
Wednesday, November 14, 2012
பாரதப் போர் முடிந்தது. தர்மர் முடி சூடிக் கொண்டார். கண்ணன் துவாரகைக்கு விடை பெரும் நேரம் வந்தது. வேதனையுடன் தர்மர் சொல்கிறார். " கண்ணா! எங்கள் தெய்வமே! உன்னைப் போகாதே என்று சொன்னால் அது அபமங்களம். உன்னை இரு என்று கட்டளையிட்டால் அது மமதை. உன்னைப் போ என்று சொன்னால் செய்நன்றி மறந்தவனாவேன். உன் இஷ்டம் போல் செய் என்றால் அது அசட்டையாக கருதப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உன்னிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுதான். உன் இதயத்தில் எங்களுக்கு எப்போதும் தனி இடம் வேண்டும். உன்னை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும்"
Monday, October 29, 2012
சிந்தனையும், உடலும் ஒன்றினால் அங்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது. சிந்தனையும், உடலும் ஈடுபடாத விஷயத்தினால் மனம் சலிப்படைகிறது. சிந்தனையையும், உடல் உழைப்பையும் இணைக்கும் பாலமே தியானம். மனம் ஒருமுகப்பட்டுவிட்டால் எந்த வேலையிலும் சுறுசுறுப்பும், திருப்தியும் உண்டாகும். சலிப்பிற்கு அங்கு இடமே இல்லை. இப்படி நாள்தோறும் மனதிற்கென்று ஒரு பயிற்சியாக தியானத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இத்தியானப் பயிற்சியில் கவனம் செலுத்தி, மனஒருமையோடு கடமைகளைச் செய்பவர்கள் நாளடைவில் தங்களின் பணியில் கூடுதல் திறமையும், வளர்ச்சியையும் பெற்றுவிடுவதை உணர்வார்கள்.
Thursday, October 25, 2012
அம்மா! உன் தரிசனத்தில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன், உன் அணைப்பிலும், முத்தத்திலும் என்னையே மறந்தேன். உன் புன்சிரிப்பில் பிறவிப் பயனை அடைந்துவிட்டேன் அம்மா! ..யாரும் என்னோடு இல்லாத போதும் நீ என்னோடு எப்பொழுதும் இருக்கிறாய். இதைவிட வேறு எதுவும் எனக்கு வேண்டாம் அம்மா! நீ என் காதிற்குள் கூறிய வார்த்தைகளில் ஆழ்ந்த அமைதியும், தெளிவும் உணர்ந்தேன். ஏழேழு ஜென்மத்திற்கும் உன் தாமரைப் பொற்பாதங்கள் பணிந்து, போற்றும் வரம் மட்டும் வேண்டும் அம்மா!
Sunday, October 21, 2012
உன்னைத் தேடி அழுவதற்கு கூட கண்ணீர் வற்றி விட்டது கண்ணா! உன்னைத் தவிர வேறொன்றிலும் என் மனம் நாட்டம் இல்லாமல் தவிக்கிறது. பார்க்கும் இடமெங்கும் உன்னையே காண்கிறேன்..எட்ட நின்று பார்க்கிறாய் கிட்ட வந்தால் மாயமாகி விடுகிறாய்; என்னைப் பாடாய்ப் படுத்துறாய் மாயக்கண்ணா! உன் அன்பெனும் இனிமையில் மூழ்க ஏங்கும் என்னை பிரிவென்னும் துன்பத்தில் மூழ்க வைத்து மகிழ்கிறாய் கண்ணா! உன் பிரிவால் இறந்து கொண்டிருக்கும் எனக்கு உன் நினைவுகள் தான் உயிர் கொடுக்கின்றன கண்ணா! உன் நினைவுகளே என்னை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன..அவற்றையும் என்னிடமிருந்து பறித்து விடாதே கண்ணா!
நீ வருவாய் என எதிர்பார்த்து காத்திருப்பதே என் வாழ்க்கையாகிவிட்டது. உன்னைக் காணாமல் தீயாய் எரிகின்றது என் இதயம்.. தூக்கி ஏறிய முடியாத உன் இனிய நினைவுகளுடன் தவிக்கிறேன் கண்ணா! உன்னை நம்புவதை விட உன்மேல் நான் கொண்ட உண்மை அன்பை நம்புகிறேன், என்றோ நீ என்னைத் தேடி வருவாய்.. உன்னிடமிருந்து ஒரு சிறு துளி அன்பைத் தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் கண்ணா! உன்னைத்தவிர வேறு எதுவும் எனக்கு பெரிதில்லை கண்ணா! என் உயிரோடு கலந்துவிட்ட நிஜம் நீ..என் உயிரே நீ தான் கண்ணா! உந்தன் கடைக்கண் பார்வையில் என் ஜென்மம் தீர காத்திருக்கிறேன் கண்ணா!
நீ வருவாய் என எதிர்பார்த்து காத்திருப்பதே என் வாழ்க்கையாகிவிட்டது. உன்னைக் காணாமல் தீயாய் எரிகின்றது என் இதயம்.. தூக்கி ஏறிய முடியாத உன் இனிய நினைவுகளுடன் தவிக்கிறேன் கண்ணா! உன்னை நம்புவதை விட உன்மேல் நான் கொண்ட உண்மை அன்பை நம்புகிறேன், என்றோ நீ என்னைத் தேடி வருவாய்.. உன்னிடமிருந்து ஒரு சிறு துளி அன்பைத் தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் கண்ணா! உன்னைத்தவிர வேறு எதுவும் எனக்கு பெரிதில்லை கண்ணா! என் உயிரோடு கலந்துவிட்ட நிஜம் நீ..என் உயிரே நீ தான் கண்ணா! உந்தன் கடைக்கண் பார்வையில் என் ஜென்மம் தீர காத்திருக்கிறேன் கண்ணா!
Monday, October 15, 2012
இந்த உலகத்திலே நிறைய நோயும் துன்பமும் தூண்டுதலும் இருப்பதால் இது கெட்ட உலகம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நற்கருமங்கள் செய்து, ஜபம், தியானம் ஆகியவற்றைப் பயின்றுவந்தால் சாஸ்வதமான பேரானந்தத்தை அடையலாம்.
மனிதன் இறக்கும்பொழுதும் பின்னாலே அவனுடைய கர்மங்களை விட்டுச் செல்கிறான். இந்த ஸ்தூல சரீரம் சாகலாம். அழியலாம். ஆனால் அவனுடைய செய்கைகளின் பாதிப்புகள் அழிவதில்லை.
Thursday, October 4, 2012
Wednesday, September 26, 2012
கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதில் எவ்வளவு நீர் நிறைந்திருந்தாலும் அந்த நீர் நம் தாகத்தைத் தணிப்பதில்லை. ஆனால், ஊற்று நீர் சிறியதாக இருந்தாலும், நம் தாகத்தைத் தணித்து விடும். அதுபோல, வாய்பேசும் பண்டிதனைக் காட்டிலும், ஞானியின் ஒரு வார்த்தை கூட நமக்கு நல்வழிக் காட்டும் தன்மையுடையது.
சாதுக்களை என்ன திட்டினாலும் அவர்கள் மவுனமாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மலைமேல் விழுந்த தூறல் மலையையா சாய்த்துவிட முடியும்?
கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அது போல, அஞ்ஞானிகளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.
ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர். ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார். அவரை அனைவரும்பைத்தியம் என்று கேலி பேசினர். அந்த ஞானி சொன்னார், ''எனக்குக் கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை. நம்மைக் காப்பாற்ற வேண்டுமா, மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. அது என்னுடைய கவலை இல்லை. நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை. திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன். ஆகவே, மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது. எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ, மரணத்தைப்பற்றி மட்டும் எப்படிஎன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?''
Tuesday, September 25, 2012
Saturday, September 22, 2012
Sunday, September 16, 2012
கிருஷ்ணா! நீ என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தாலும் என்னால் உன்னை மறக்க முடியவில்லை. உன்மேல் உள்ள அன்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. எந்த ஜென்மத்திலும் உன்னை மறக்கவே முடியாது கண்ணா! மனமும், உடலும் சோர்ந்து விட்டது கண்ணா! உன்னைப்போல் என்மேல் அன்பு காட்டுபவர் யாருமே இல்லை என்று பெருமையுடன் நினைத்திருந்தேன். நீயோ என்னைவிட்டு தொலைதூரம் போய்விட்டாய். நீ உன் கடைக்கண் பார்வையை என்மீது காட்டாவிட்டால் என் வாழ்வே நரகமாகி விடும். என் உயிரோடு கலந்த அழியாத நினைவுகளுடன் உன் பிரிவால் துடிக்கின்றேன் கண்ணா! இதெல்லாம் உனக்கு சொல்லித் தெரியணுமா..என் உணர்வுகள் உன்னையன்றி வேறு யார் அறிவார் கண்ணா? என் வாழ்வில் அன்புக்கு அர்த்தம் கொடுத்தவன் நீதானே கண்ணா! இப்போ என்னை விட்டு விலக உன்னால் எப்படி முடிந்தது? என்னைவிட்டு எங்கு போனாய் மாயக்கண்ணா? உன்னை காணாமல் தவிக்கின்றேன். இந்த அடிமையை நீ திரும்பிப் பார்க்காத அளவிற்கு என்ன பாவம் செய்தேனோ கிருஷ்ணா?உன்னால் எப்படி இப்படி கல்லாக இருக்க முடிகிறது? நான் அழுவதை ரசிப்பது உனக்கு சந்தோசமென்றால் உனக்காகவே அழுது கொண்டேயிருப்பேன். என்மீது அன்பு மழை பொழிவாய் என்று எதிர்பார்த்திருந்தேன். . ஆனால் நீயோ கண்ணீர் மழை பொழிய வைத்து விட்டு சென்றுவிட்டாய். "உன் உயிர் போகுமட்டும் அழு " என்று பார்த்துக் கொண்டிருக்கிறாயா? உனக்கு ஏன் கண்ணா இந்த கொலைவெறி? நீ எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும் உன்னை மறக்கவோ, வெறுக்கவோ முடியாது கிருஷ்ணா, என் உயிர் பிரிந்தாலும் உன் அன்பெனும் இனிமைக்காக என் பிறவிகள் தொடரும். ஒவ்வொரு நொடியும் கண்ணீரோடு காத்திருக்கிறேன் உன் இனிய நினைவுகளோடு....
Wednesday, September 12, 2012
There are many ways to calm a negative energy without suppressing or fighting it. You recognize it, you smile to it, and you invite something nicer to come up and replace it; you read some inspiring words, you listen to a piece of beautiful music, you go somewhere in nature, or you do some walking meditation.
Friday, July 27, 2012
--ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Thursday, July 26, 2012
இது பகுத்தறிவு மற்றும் யுக்தியின் உலகமாகும். இதயத்தின் மொழியை இன்றைய மனிதன் மறந்திருக்கிறான். பரஸ்பரம் அன்பு செலுத்தவும், நம்பிக்கை வைக்கவும், மதிப்பளிக்கவும் கற்பிக்கும் இதயத்தின் மொழி இன்று மறைந்து கொண்டிருக்கிறது.
சொர்க்கமும், நரகமும் பூமியில் தான் இருக்கின்றன. அதைப் படைப்பது நமது மனமே. அதனால் அந்த மனத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் துன்பப்பட நேரிடாது. ஆனந்தம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
சுயநலம் நெருப்புப்பொறி போன்றது. நம்முடைய அமைதி முழுவதையும் குலைக்க சிறிதளவு சுயநலம் போதும். எந்த விதத்திலாவது சுயநலமில்லாமல் வாழப்பழகுங்கள்.
நமது ஒவ்வொரு செயலும், அறிந்தோ, அறியாமலோ பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுபோலவே, பிறரது செயல்கள் நம்மையும் பாதிக்கின்றன. அதனால்தான் நம்முடைய ஒவ்வொரு சிந்தனையிலும், வாக்கிலும், செயலிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வாழ்க்கை என்பது இதயம் நிறைந்த சிரிப்பாக மாற வேண்டும். அதுவே மதம்; அதுதான் ஆன்மிகம்; அதுவே உண்மையான பிரார்த்தனை. உள்ளத்திலிருந்து வெளிப்படும் களங்கமற்ற புன்னகையே இறைவன்.
நல்ல சிந்தனைகளாலும், நச்செயல்களாலும் நம் வாழ்வைப் பொருள் நிறைந்ததாக ஆக்க வேண்டும். எதிலும் நன்மையை மட்டும் காண முயற்சி செய்யுங்கள். யாரையும் பார்த்துப் பொறாமைப் படாதீர்கள். ஆடம்பரமில்லாமல் வாழுங்கள். பலனை எதிர்பாராது சேவை செய்யுங்கள்.
Friday, July 20, 2012
மாயவா! உன்னிடமிருந்து ஒரு சிறிய அன்பைத் தேடி அலைகிறேன். நான் உன் அன்பை அடைய நெருங்கும் போது அதை நீ தட்டிவிட்டுப் போய் விட்டாய். துன்பக் கண்ணீரை அருந்தியவாறு தினமும் உறங்க முடியாமல் தவிக்கின்றேன். என் ஒட்டு மொத்த அன்பையும் கொட்டிக் கொடுத்துவிட்டேன் உன்னிடம். உனக்கு இரக்கமே இல்லையா? உன்னை அன்புடன் நினைக்காத நேரமே இல்லை. என் இதயத்துடிப்பே நீயாகி விட்டாய் கண்ணா! அழுகின்ற கண்கள் நீ காணாததேன்? ஓடி வந்து ஆறுதல் கூறாததேன்?
உன்னை எங்கே தேடுவேன்? உனக்காகக் காத்திருக்கிறேன் குறும்புக்காரா! உனது தரிசனம் தந்தருள்க! நீ என்னோடு இல்லாவிடில் எனக்கு எதிலுமே நாட்டமில்லை. கண்ணா! மதுசூதனா! விரைவில் வந்தருள்க! கிருஷ்ணா! என் குரலைக் கேட்காதது போலிருப்பதேனோ? என் துன்பத்தைப் பார்க்காதது போல் நடிப்பதேனோ? உலகத்தையும், என்னையும் உனக்காக அனைத்தையும் மறந்து தவிக்கின்றேன். ஈடிணையில்லா அன்பை ரசித்து மகிழும் உனக்கு என் அன்பு மட்டும் புரியுதில்லையா கண்ணா? அல்லது கண்டும் காணாமல் இருந்து என்னை சித்திரவதை செய்கிறாயா? உனக்கு என்மேல் கருணையே இல்லையா கல்நெஞ்சக்காரா?? உன்னை எதிர்பார்த்து ஏங்கி அழுகின்றேன். "நல்லா அழு, உன் தலைவிதி என்கிறாயா?" என்ன பாவம் செய்தேன் கண்ணா! உன் பிரிவால் அழுதழுதே செத்துக்கொண்டிருக்கிறேன் கண்ணா! என் மேல் கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டாயா? உனக்காக நான் அழுவதும் எனக்கு ஆனந்தமாக உள்ளது. என் ஆயுள் முழுவதும் உனக்காகவே மட்டும் அழும் பாக்கியத்தை எனக்கு கொடுத்துவிடு கண்ணா!
Wednesday, July 18, 2012
Tuesday, July 17, 2012
அன்பினைத் தேடித்தேடி களைத்து நான் உள்ளம் உடைந்து விட்டேன். எட்டாத் தொலைவிலெல்லாம் தேடித்தேடி கண்ணீர் விட்டுக் களைத்தேன். அல்லும் பகலும் அம்மா உன்னை எண்ணி நெஞ்சம் நெகிழ்கிறது. ஈடில்லா உன் அன்பையும், கருணையையும் என் மேல் காட்டு. துன்பங்களை நீக்குபவளே! உனது புன்னகை கடாட்ஷத்தால், ஆசைகள், பந்தங்களை அறுத்துவிட்டு நித்திய சாந்தி எனும் கரையை அடையச் செய்து விடு.
Thursday, July 12, 2012
அம்மா, என் நினைவு, கனவு, நிஜம், உயிர் எல்லாமே நீதான் அம்மா! என்னைவிட்டு போய் விடுவியா ??!! என் உயிரையும் உன்னுடன் எடுத்துச் செல் . உன்னைப் பிரிந்து இந்த உலகில் என்னால் வாழ முடியாது. அம்மா! உன் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு மென்வார்த்தையில் என்னையே மறந்தேன். எப்பொழுதும் உன் நினைவோடு வாழும் வரத்தைக் கொடுத்து விடு. வேறொன்றும் எனக்கு வேண்டாம்
Thursday, June 28, 2012
Tuesday, June 26, 2012
மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல் நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம். சீடனுக்கு உபதேசம் செய்விக்கிறபோது, குருவானவர் அவனுள் உறங்கிக்கிடக்கும் ஆற்றலை எழுப்பிவிடுகிறார். அதற்கு தன்னுடைய ஆற்றலில் சிறிதளவே அவனுக்கு வழங்குகிறார். உறைமோரைப் போல அவர் செயல்படுகிறார். ஒரு செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதுபோல, அவர் இகலோக சுகத்தில் திளைக்கிற மனதைப் பறித்து ஆன்மிக உலகில் இடம்பெறச் செய்கிறார்.
Saturday, June 23, 2012
அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரமாகும். நித்திரைக்குப் பிறகுமனமும் கர்மேந்திரியங்களும் அந்த வேளையில் அமைதியாக இருக்கின்றன. அப்போது சத்வகுணம் ஓங்கி இருக்கிறது. இந்த வேளையில் சொல்லும் தியான ஸ்லோகங்களே அதிக பலன் தர முடியும். நம்மிடத்தில் அமைதியும், நம்மைச் சுற்றிஅமைதியும் நிறைந்துள்ள அந்த வேளை தான் தியானத்துக்கு மிகவும் ஏற்றது.
Tuesday, June 12, 2012
Wednesday, June 6, 2012
மணல்மேடுகள்
முழு நிலவொளியில் எழில் கொஞ்சும் கபிலபுரத்தின் திண்ணையில் பொன்னுசாமி உறங்குகிறான். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு தக்க உதாரணம் இவன் வாழ்க்கை. சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்த பொன்னுசாமி கபிலபுரத்து சிவன் கோயிலில் வளர்ந்து வந்தான். திருப்பணியாற்றி, தேவாரம் பாடி, சிவன் பிரசாதம் உண்டும் கோயில் திண்ணையில் உறங்கியும் பொன்னுசாமி வாழ்ந்து வந்தான். நொடிப்பொழுது போல் இருபது வருடங்கள் உருண்டோடி விட்டன.
கடுமையாக உழைத்ததன் அசதியில் உறங்கிப்போன பொன்னுசாமி ஒரு கனாக்கண்டான். பொன்னியாற்றின் மணல்ப்பரப்பில் "உன் வாழ்க்கை" என்ற அறிவிப்புத் தாங்கிய பலகை, அவன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் நிழல் சித்திரமாக அவனை நோக்கிச் சிரித்தது. தனது வாழ்க்கைப் பாதையில் நான்கு ஜோடி கால் சுவடுகளை பொன்னுசாமி கண்டான். சற்று உற்று நோக்கிய போது, ஒரு ஜோடி அவனுடையது என்றும் மற்ற ஜோடி தனக்கு எல்லாமாகிய சிவபெருமானின் பாதச் சுவடுகள் என்றும் அவனுக்குப் புரிந்தது.
தன் வாழ்க்கையைக் குறிக்கும் மணல்ப்பரப்பு முழுவதும் கடவுளின் கால்சுவடுகள், தனது கால்சுவடுகளோடு கூட வருவதைக் கண்டவன் "ஆஹா! நம்முடன் சிவபெருமான் வாழ்க்கை முழுவதும் நடந்து வந்திருக்கிறாரே! நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தி இருக்கிறாரே!" என நினைத்து நினைத்து பூரித்துப் போனான். பொன்னுசாமி மணல்பரப்பில் அங்குமிங்குமென மணல்மேடுகள் நிறைந்திருப்பதைக் கண்டதும்; சற்றே உற்று நோக்கினான். மணல் மேடுகளின் மேல் ஒரு ஜோடி கால்சுவடுகள் மட்டும் காணப்படுவதைக் கண்டு பதைத்துப் போனான். "ஈசனே! இது தகுமா! என் வாழ்க்கையின் இக்கட்டான கட்டங்களைக் குறிக்கும் மணல்மேடுகளில் என்னை அம்போ என்று விட்டுவிட்டீர்களே?" என்று புலம்பினான்.
"மகனே! உற்று நோக்கு" என்று குரல் கேட்க; உற்று நோக்கினான். மணல்மேடுகளில் பதிந்தது ஈசனின் பாதச் சுவடுகளேயன்றி தனது கால்சுவடுகளல்ல என்று புரிந்தது. "மகனே! இக்கட்டான சூழ்நிலைகளில் உன்னை நடக்க விடாது எனது தோள்களில் வைத்து சுமந்து சென்றேன். அதனால் தான் எனது கால்சுவடுகள் மட்டும் காணப்படுகிறது. மணல் மேடுகளில் உன்னை நான்தான் சுமந்து சென்றேன்" என்று ஒலி கேட்டது.
திடுக்கிட்டு எழுந்த பொன்னுசாமி " இது கனவல்ல. ஈசன் தனக்கு புகட்டிய பாடம்" என்றே கருதினான். அன்று முதல் வாழ்க்கையைப் பற்றிய அவனது கண்ணோட்டமே மாறிவிட்டது. ஏதாவது கஷ்டம் வரும்போது " இது மணல்மேடு. என்னை இப்பொழுது ஈசன்தான் சுமக்கிறார் " என்று நினைத்துக் கொள்வான். மணல்மேடுகள் வெறும் மணல்துகள்களாவதைக் கண்டான்.
"நம் கண்ணோட்டத்தில் நாம் செய்யும் சின்னஞ்சிறு மாற்றங்கள் நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமையுள்ளவையாகும்".
Monday, June 4, 2012
| |||||||||||
Saturday, June 2, 2012
- வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை. சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்.-----பகவத் கீதை----
Thursday, May 17, 2012
பிறருக்குத் துன்பமும் வேதனையும் தரும் செயலை செய்யக்கூடாது. இப்படிப்பட்ட செயல்கள் இறுதியில் உங்களுக்கே கெடுதல் செய்யும். யாரையாவது புண்படுத்தும் போது, அவர் குற்றமற்றவராகவும் இருக்கலாம். அவர் தவறு எதுவும் செய்யாமலே புண்படுத்தப் பட்டதாக இதயம் நொந்து வருந்துவர். அவரது எண்ணமும், பிரார்த்தனையும் உங்களைப் பாதிக்கும். பிற்காலத்தில் நீங்கள் துன்பப்பட இவை காரணங்களாகிவிடும். ஆகவே யாரையும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தக்கூடாது.
Wednesday, May 16, 2012
சனாதன தர்மமும் பாரத பூமியும்^^
உலகம் முழுவதிலும் இன்று சனாதனதர்மத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள். பழங்காலத்தில் இது உலகம் முழுவதும் நன்கு பரவி இருந்தது. சனாதன தர்மம் பாரத பூமியில் தோன்றியது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரை உள்ள பூமியே பாரதம். சிந்துவும், கங்கையும் பெருகும் பூமி. ஹிமாலயமும், விந்திய மழையும் தலை உயர்த்தி நிற்கும் பூமி. சங்கராச்சாரியார் அவதரித்த கேரளம் முதல் சைவ தரிசனத்தின் பிறப்பிடமான காஷ்மீர் வரை, துவாரகை உள்ளம் குஜராத் முதல், சக்திபீடமான காமாக்யா அமைந்துள்ள அஸாம் வரை பரந்து கிடக்கும் பாரதத்தில்தான் வேதங்களும்,இதிஹாசங்களும், புராணங்களும், யோகம், தந்திரம் போன்ற உபாசனைகளும் தோன்றி, தளிர்த்து வளர்ந்திருக்கின்றன. தேவர்கள் கூட இந்த மண்ணில் பிறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இந்துக்களின் தாய்நாடும் தந்தை நாடும் இதுவே ஆகும். கர்மபூமியும், புண்ணியபூமியும், மோட்ஷபூமியும் இதுதான். சொர்க்கத்தை விட மகிமை பொருந்திய இடம்.
மிகவும் பழமையானதாக இருந்தாலும், இக்காலத்திற்கும் மிகவும் பொருத்தமான தர்மமாக சனாதனதர்மம் திகழ்கிறது. "மெய்ப்பொருள் ஒன்றே என்று அறிந்தவர்கள் அதைப் பல பெயர்களில் வர்ணிக்கின்றனர்" என்ற பரந்த மனப்பான்மையின் மந்திரத்தை தரிசித்த தர்மம் இது. பலவித நம்பிக்கையின், ஆராதனை முறைகளின் பெயரில் கலகங்களில் ஈடுபடாத தர்மமாகும் இது. பிரபஞ்சம் முழுவதையும் தெய்வீகமானதாகக் காணும் ஹிந்து தர்மம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும், இயற்கை முழுவதற்கும் இதமானதாக அமைந்துள்ள தர்மமாகும். இது ஆதியற்றது என்றாலும் எக்காலத்திற்கும் பொருத்தமானது. காலத்தால் எழும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரத்தையும், உலகிற்கு பிரகாசமான எதிர்காலத்தையும் தரும் சனாதன தர்மம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
Subscribe to:
Comments (Atom)












47156_mediumportrait.jpg)



















.jpg)












.jpg)
