Wednesday, May 16, 2012

சனாதன தர்மமும்  பாரத பூமியும்^^


உலகம் முழுவதிலும் இன்று சனாதனதர்மத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள்.   பழங்காலத்தில் இது உலகம் முழுவதும் நன்கு பரவி இருந்தது.   சனாதன தர்மம் பாரத பூமியில் தோன்றியது.  வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரை உள்ள பூமியே பாரதம். சிந்துவும், கங்கையும் பெருகும் பூமி. ஹிமாலயமும்,  விந்திய மழையும் தலை உயர்த்தி நிற்கும் பூமி.  சங்கராச்சாரியார் அவதரித்த கேரளம் முதல் சைவ தரிசனத்தின் பிறப்பிடமான காஷ்மீர் வரை, துவாரகை உள்ளம் குஜராத் முதல்,  சக்திபீடமான காமாக்யா அமைந்துள்ள அஸாம் வரை பரந்து கிடக்கும் பாரதத்தில்தான் வேதங்களும்,இதிஹாசங்களும், புராணங்களும், யோகம்,  தந்திரம் போன்ற  உபாசனைகளும் தோன்றி, தளிர்த்து வளர்ந்திருக்கின்றன.  தேவர்கள் கூட இந்த மண்ணில் பிறப்பதற்கு  ஆசைப்படுகிறார்கள்.  இந்துக்களின்  தாய்நாடும் தந்தை நாடும்   இதுவே ஆகும். கர்மபூமியும், புண்ணியபூமியும், மோட்ஷபூமியும் இதுதான். சொர்க்கத்தை விட மகிமை பொருந்திய இடம். 
மிகவும் பழமையானதாக இருந்தாலும், இக்காலத்திற்கும் மிகவும் பொருத்தமான தர்மமாக சனாதனதர்மம் திகழ்கிறது. "மெய்ப்பொருள் ஒன்றே என்று அறிந்தவர்கள் அதைப் பல பெயர்களில் வர்ணிக்கின்றனர்"  என்ற பரந்த மனப்பான்மையின் மந்திரத்தை தரிசித்த தர்மம் இது. பலவித நம்பிக்கையின், ஆராதனை முறைகளின் பெயரில் கலகங்களில் ஈடுபடாத தர்மமாகும் இது.  பிரபஞ்சம் முழுவதையும் தெய்வீகமானதாகக் காணும் ஹிந்து தர்மம் மனிதர்களுக்கு மட்டுமல்ல,  பிற உயிரினங்களுக்கும், இயற்கை முழுவதற்கும் இதமானதாக அமைந்துள்ள தர்மமாகும். இது ஆதியற்றது என்றாலும் எக்காலத்திற்கும் பொருத்தமானது.  காலத்தால் எழும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரத்தையும், உலகிற்கு பிரகாசமான எதிர்காலத்தையும் தரும் சனாதன தர்மம் என்றென்றும் நிலைத்து  நிற்கும். 

No comments:

Post a Comment