Wednesday, December 28, 2011



பக்தனின் இயல்புகள் 
நான் இறைவனின் தொண்டன், அவரே அனைத்தையும் செய்பவர். நான் அவரது கருவி என்ற எண்ணம். 
இறைவனையும்,  குருவையும்  பலனை அதிர்பாராமல் நேசித்தல். அந்த அன்பில் தகாத நோக்கம் இருப்பதில்லை. அந்த பக்தி ஆசையோடு கூடியதல்ல, அது தத்துவபூர்வமானதாகும். 
எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் அனைவரையும் நேசித்தல்.
தனக்கு தீங்கு செய்பவர், தன்னை வெறுப்பவர் உள்பட அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்று பிரார்த்தித்தல்.
பிறரிடமுள்ள குறைகளைப் பாராமல், நல்லவற்றை மட்டும் பார்க்க முயற்சித்தல். 
குரு கூறுவதற்கேற்ப உள்ளத்தாலும், உடலாலும் கீழ்ப்படிவதன் மூலம் குருபக்தியை வெளிப்படுத்துதல். 
இறைவனின் வருகையை எதிர்பார்த்து, தான் வசிக்கும் இடத்தை எப்பொழுதும் தூய்மையாகவும், நேர்த்தியாகவும், சீராகவும் வைத்திருத்தல். 
இடைவிடாத ஜபத்தால் மனதை தூய்மைப்படுத்த முயற்சித்தல்.
பக்தியோடும், மன ஒருமுகப்பாட்டோடும் பஜனை பாடுதல். ஒவ்வொரு செயலையும் இஷ்ட தெய்வத்தின் ஆராதனையாக செய்தல்.
தனது கவலைகளை இறைவனிடம் மட்டுமே கூறுதல். 
எந்தச் சூழ்நிலையிலும், தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஆத்ம சாதனைகளுக்காக பயன்படுத்துதல்.
புறத்தில் நிகழும் செயல்கள் தனக்கு சாதகமாக இல்லாத போதும், பிரார்த்தனைகளையும், ஆன்மீக சாதனைகளையும் கைவிடாமல் இருத்தல்.
எதையும் தன்னுடையதென்று உரிமை பாராட்டாமல் இறைவனுக்கு சொந்தமானவை என்று கருதுதல். 
மேற்கூறியவை அனைத்தும் ஒரு சிறந்த பக்தனுக்குரிய இயல்புகள். அவற்றைக் கடைப்பிடித்து  வாழ்வை மேம்படுத்திகொள்வோம்.

Tuesday, December 13, 2011


உலகப் பொருள்களிலிருந்தும், புலன் இன்பங்களிலிருந்தும் பெறும் அற்ப சுகங்கள், நமக்குள் விளங்கும் ஆத்மசொரூபத்தின் எல்லையற்ற பேரின்பத்தின் பிரதிபலிப்பாகும்.       உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சம். நாம் ஒருவரை ஒருவர் "ஓம் நமசிவாய' என கூறி வணங்கும் போது ""உங்களுக்குள் இருக்கும் இறைவனை வணங்குகிறேன், அந்த இறைவன் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கின்றன'' என்று அவரிடம் கூறுவதாகப் பொருள்.

Saturday, December 3, 2011

மனதை ஒருமுகப்படுத்தி கண்களை மூடி, அம்பிகையின் திருநாமத்தை உச்சரியுங்கள். அப்போது அவளது உருவம் உங்களுக்கு தெரியும். அவ்வாறு உருவம் தெரியாவிட்டால் அவள் எதிரே நிற்பதாக எண்ணிக்கொண்டு, `அம்மா!' என்று ஆசையுடனும், மனதில் பக்தியுடனும் அழையுங்கள். உங்களது குரலுக்கு அம்பிகை நிச்சயம் காட்சி தருவாள். `அம்மா' எனும் வார்த்தைக்கு `நிலையான அன்பே, நிலையான கருணையே, நீ என்னை வழி நடத்துவாயாக!' என்று பொருள்.

Saturday, November 26, 2011

மரத்துப்போன  இதயங்கள் --சிந்தனைக்கதை----
ஒரு சமய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக நால்வர் ஒரு தீவில் தங்கினர்.  மிகவும் குளிராக இருந்தது.  பயணிகள் நால்வரின் கையிலும் குளிர் காய்வதற்கு தேவையான தீப்பெட்டியும், விறகும் இருந்தன. ஆனால் தன் கையில் மட்டுமே விறகும், தீப்பெட்டியும் இருப்பதாக அந்நால்வரும் கருதினர். 
முதல் ஆள் " அவன் கழுத்தில் தொங்கும் டொலரைக் கண்டால் அவன் வேறு மதத்தை சேர்ந்தவன் என்று தோன்றுகிறது. நான் எதற்காக அவனுக்கும் சேர்த்து தீ மூட்ட வேண்டும்" என்று சிந்தித்தான்: 
இரண்டாவது ஆள்  "இவன் எதிரி நாட்டை சேர்ந்தவன். எங்களுடன் எப்போதும் போர் செய்பவன். என் விறகும் தீப்பெட்டியும் உபயோகித்து அவன் குளிர்காய வேண்டாம். அதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்று நினைத்தான்.
மூன்றாவது ஆள் " மற்றொருவனை நோக்கி இவனை எனக்கு நன்றாகத் தெரியும். இவன் எங்கள் மதத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கும் பிரிவைச் சேர்ந்தவன். என் விறகையும், தீப்பெட்டியையும் உபயோகித்து இவன் குளிர் காய்வதை என்னால் கனவு கூட காண முடியாது" என்று எண்ணினான். 
நான்காவது ஆள்; "அவனுடைய உடல் நிறத்தைப் பார், எனக்கு  இந்நிறத்தவரை கண்டாலே வெறுப்பு.  நான் இவனுக்கு தீமூட்டிக் கொடுக்கும் பேச்சே இல்லை"  என்று தீர்மானித்தான். 
இவ்வாறு நால்வரும் தங்கள் கையிலிருந்த விறகையும், தீப்பெட்டியையும் உபயோகிக்காமல் குளிரால் உடல் விறைத்து இறந்து போனார்கள். உண்மையில் இவர்கள் இறந்தது வெளியில் நிலவிய குளிரால் அல்ல. மரத்துப்போன அவர்கள் மனோபாவத்தினால் தான்.    இது போல்  நாடு, மதம், இனம், மொழி  என்று  நாமும்  மரத்துப்போன இதயங்களால் அழிந்து கொண்டிருக்கிறோம். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம். அன்பால் உலகை ஆள்வோம். 

Friday, November 25, 2011


 உங்களுக்குள்ளேயே இருந்து நன்மை செய்வது மட்டுமின்றி, மற்றவர்கள் மூலமாகவும், வாய்ப்புகளின் வடிவிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறான் இறைவன்.  உங்களது பலவீனத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அந்த பலவீனத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விடுங்கள். அவற்றை திருத்துவதுடன் வேண்டியதை அளிப்பது அவனது கடமை.

Wednesday, November 16, 2011

Sunday, November 13, 2011


மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால், அவை வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை. அதற்கு தரப்பட்ட விதியை சரிவரப் பின்பற்றுகிறது. பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டுமே, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான். எதற்காக? இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக! இப்படி மனிதன் சீரழிந்து போவதைத்தான் நமது சாஸ்திரங்கள் தடுக்கிறது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்பவர்களுக்கு, சாஸ்திர அடிப்படை உதவும். அவை கூறும் தர்மங்களை ஒழுங்காகப் பின்பற்றுபவர்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்கும். இன்றைய நவீன உலகில், கட்டுப்பாடான அமைப்பைக் குலைக்கவும், மாற்றவும் முயல்வது தான் நாகரிகம் எனக் கருதப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் அத்துமீறி நடக்கிறோம்.காலம் மாறி விட்டதால் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இயற்கையைப் பாருங்கள். ஒரு ஒழுங்கில் இயங்குகிறது. மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான். எதையும் உடுத்துகிறான். உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய மனிதன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி தாழ்நிலையை அடைந்து விட்டான். மனிதர்கள் பிறருக்காக தன்னலமற்று வாழ்வது தான் வாழ்க்கை நெறிமுறையாகும்.

Sunday, November 6, 2011





குரு அளித்த மந்திரம்தான் நம்மைத் தூய்மைப்படுத்தவல்லது. அம் மந்திரத்தை ஓத, ஓத அது இறைவனுடன் நம்மைச் சேர்க்கும் பாலமாகிறது.
வாழ்க்கை எனும் ரயில் பயணத்தில் இறைவன் பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருக்கும் வரை நமது மூச்சுக்காற்று நம் உயிரைக் காத்து வருகிறது. அவனது இச்சைமாறி அது சிவப்புக் கொடியானால் இந்த உடலை விட்டு உயிர் பிரிகிறது.
நமது உயிர் காக்கும் கவசமாக நமது நாடி நரம்புகளில் எல்லாம் இறைநாமத்தால் நிரப்பவேண்டும்.
பகவானுக்கும் அவனது திருநாமத்துக்கும்
வித்தியாசமே கிடையாது.
- ஸ்ரீராமகிருஷ்ணர்

Thursday, October 27, 2011

Sunday, October 23, 2011


கடவுள் உருவம் இல்லாதவர். மக்கள் தமக்குப் பழக்கமான உருவத்தில் அவரை வணங்கி வழிபாடு செய்கிறார்கள். கடவுளை அவரவர் மனதிற்கு உகந்த முறையில் படைத்துக் கொள்கிறோம். குழந்தையாக இருந்தால், கடவுளையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்ளும். பசு, கடவுளை வணங்க விரும்பினால் தனது வடிவத்தில் தான் வணங்க முற்படும். நாம் வீட்டில் பூஜை செய்யும் போது, மஞ்சள் பொடியில் சிறிது புனிதநீரைக் கலந்து பிடித்து வைத்துவிட்டு பிள்ளையார் என்று கூறுகிறோம். பிடித்து வைத்த மஞ்சளில், ""அஸ்மின் பிம்பே மகா கணபதிம் ஆவாகயாமி'' என்று அவரை உருவாக்கி வழிபடத் தொடங்குகிறோம். மஞ்சளில் பிள்ளையாரைப் படைத்தபின் அதனை மஞ்சளாக நாம் நினைப்பதில்லை. அதன் பின் அம்மஞ்சளை சமையலுக்கோ, மற்றதற்கோ நாம் பயன்படுத்துவதில்லை. இதனைத் தான் ""பிடித்தால் பிள்ளையார்''என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு. நம் மனதிற்குப் பிடித்த எந்த உருவத்தில் கடவுளை வழிபாடு செய்ய விரும்புகிறோமோ, அந்த வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்வதையே இஷ்ட தெய்வவழிபாடு என்கிறோம். அந்த உருவம் நாம் கொடுத்தது தான் என்றாலும், நாம் உருவம் கொடுத்தபின் அவ்வடிவம் மதிப்பு பெற்று விடுகிறது. நம் மனம் அந்த வடிவத்தில் ஒன்றிவிடத் தொடங்குகிறது. வெறும் வடிவமாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. கடவுளாகப் பாவித்து வழிபாடு செய்து மகிழ்கிறோம்.
-தயானந்த சரஸ்வதி சுவாமி

Sunday, October 9, 2011

அவதாரங்கள் 
இறைவன் உலகின் மீது கொண்ட கருணையால்  பல்வேறு அவதாரங்கள் எடுத்து உலகிற்கு வருகிறார்  என்ற தெய்வீக  ரகசியம் சனாதன தர்மத்தின் ரகசியமாகும்.  உலகில் அதர்மம் அதிகரிக்கவும், நன்மக்கள்  வருந்தவும் செய்யும் போதுதான் இறைவன்  அவதரிக்கிறார்.  ஸ்ரீமத் பகவத்கீதையின் கூற்றுப்படி தர்மத்தை நிலை நிறுத்துவதும், தீயோரைத் தண்டிப்பதும்தான் இறை அவதாரத்தின் திவ்வியமான லட்சியங்கள் ஆகும்.   இது  விஷ்வ பிரேமையின் மூலமே சாத்தியமாகிறது.  எல்லாம் வல்ல இறைவனுக்கு எவ்வடிவத்தையும் எடுக்கவும், விரும்பியது போல்  லீலை  நடத்தவும் இயலும் என்பது  அவதாரத்தின் பொருள்.  

Thursday, October 6, 2011


எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்இதயம் தோல்வியுற்றாலும்,மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை விதியை எதிர்த்துப் போரிட முடியும்.

Sunday, October 2, 2011


  • இந்து மதம் யாரையும் எதிர்ப்பதில்லை. யாரும் தங்கள் மதத்தையோ, நம்பிக்கையையோ விட்டுவிட வேண்டுமென்று கூறவுமில்லை. அது மட்டுமல்ல,ஒருவரது நம்பிக்கையைக் கெடுப்பதை அதர்மமாகவும் அது கருதுகிறது. எல்லா மதங்களையும் ஒரே இலட்சியத்தை அடைவதற்கான பலவித மார்க்கங்களாகவே அது கருதுகிறது. சனாதன தர்மம் வாழ்வின் முழுமையான நிர்வாகவியல் சாஸ்திரமாகும்.அது மனித குலத்தின் ஆன்மிக நலனிற்கும், மற்றும் உலகியல் நலனிற்கும் வழிவகுக்கும்.

Friday, September 30, 2011



8
,
எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சக்தியாகவும், வேட்கையாகவும், சாந்தி வடிவிலும், சிரத்தையாகவும், தாய்மையாகவும், கருணையாகவும் உறைகிறாளோ அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.                        -- தேவி மகாத்மியம் -

Tuesday, September 27, 2011




தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.

Sunday, September 25, 2011



"This world is like a flower. Each nation is a petal. If one petal is infested, does it not affect all the other petals? Does not the disease destroy the life and beauty of the flower? Is it not the duty of each one of us to protect and preserve the beauty and fragrance of this one world flower from being destroyed? This world of ours is a big, wonderful flower with many petals. Only when this is understood and becomes deeply ingrained within us, will there be any real peace and unity." - Amma

Thursday, September 15, 2011


Many Religions


“There is no harm in having many religions and faiths, but it is harmful to think that they are different and that one faith is higher and the other one is lower. Children, do not see the differences. See the unity in them and the great ideals that they teach.”  --Amma--

Thursday, September 8, 2011

Sunday, September 4, 2011

"இறைவனை பலகாலமாக வழிபட்டும் என் துயரங்கள் நீங்கவில்லை' என்று நம்மில் பலரும் வருந்துவதுண்டு. நம் மனம் ஆசைகளால் நிறைந்துள்ளது. நம் ஆசைகளை நிறைவேற்றும் பிரதிநிதியாகவே ஆண்டவனைப் பார்க்கிறோம். எனவே தான் இப்படி ஒரு எண்ணம் எழுகிறது. இறைவனை அன்புக்காகவே மட்டும் அணுகவேண்டும்.மனிதர்களாகப் பிறந்திருந்தும் நம் வாழ்வின் நோக்கத்தை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளித் தோற்றத்தில் மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக கீழ்நிலையில் இருக்கிறோம். மனிதர்கள் பகுத்தறிவு உடையவர்கள். இறைவனை அடைவதே தனது லட்சியம் என்பதை உணர வேண்டும். உலக விஷயங்களில் சிதறிக்கிடக்கும் மனதை தடுத்து நிறுத்தி, அதன் ஆற்றலை ஒருமுகப்படுத்தினால் இறைவனை உணரலாம் தினமும் கடவுளை வணங்கும்போது,""இறைவா! அனைவரும் உன் கருணைக்குப் பாத்திரமாகட்டும். எல்லாரும் நல்லவராகட்டும். நான் தீய செயல்கள் செய்யாதிருக்க அருள்புரிவீராக. பிறரது குற்றங்குறைகளை மன்னித்து, மறந்து விட வகை செய்க,'' என்று பிரார்த்தியுங்கள்

Wednesday, August 31, 2011

காலப்போக்கில் மனமேகுருவாக மாறிவிடுகிறது. மன ஒருமைப்பாடின்றி பல மணிநேரம் பிரார்த்தனை, தியானம் செய்வதைவிட இரண்டு நிமிடங்கள் முழுமையான ஒருமைப்பட்ட மனத்துடன் பிரார்த்தனை, தியானம் செய்வது நல்லது.

Saturday, August 27, 2011

பிறர்மீது அன்பு காட்டும் மனிதர், நதியைப் போன்றவர். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அன்புடைய மனிதரிடம் எல்லோரும்  பழக விருப்பம் கொள்வர். அவருடன் உறவாடி இன்புறுவர். நதியில் அனைவரும் நீராடி மகிழ்வதைப் போல, அன்புடைய மனிதரும் எல்லாருக்கும் அன்பை வாரி வழங்குபவராக இருப்பார். அவரிடத்தில் அன்பு பிரவாகமாகிக் கொண்டே இருக்கும். சொர்க்கமும், நரகமும் நம் உள்ளத்தாலேயே உருவாக்கப்படுகின்றன. மனம் நிம்மதியின்றி இருக்கும் போது மகிழ்ச்சியான விஷயம் கூட நம்மை எரிச்சல் அடையச் செய்வதை அறிவோம். ஆனால், உள்ளத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொண்டிருக்கும் போது நம்மால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய இயலும். அதனால், புறவுலக நிகழ்ச்சிகள் நம் மனதின் போக்கிற்கேற்பவே நம்மை வழிநடத்திச் செல்கின்றன.---அம்மா----

Tuesday, August 23, 2011

Saturday, August 20, 2011

Friday, August 19, 2011


சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.

Friday, August 12, 2011

நூறு நல்ல காரியங்களை செய்தவர்  ஒரே ஒரு தவறு செய்து விட்டாலும்  மக்கள் அவரை வெறுப்பார்கள்.  அவரை நிராகரித்து விடுவார்கள்.  ஆனால் இறைவனோ  நூறு தவறுகளைச் செய்தவன்  ஒரேயொரு நல்லது செய்தாலும் அவன் மீது அன்பைச் சொரிந்து, அவனை ஏற்றுக்கொள்கிறார்.  இறைவனை  மனமுருகி  வேண்டுங்கள்.  

Monday, August 8, 2011

Thursday, August 4, 2011



நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை முன்வையுங்கள். 
வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர் குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும் கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை. 

Saturday, July 30, 2011

Wednesday, July 20, 2011

பாரத மண்ணில் தோன்றிய வேதங்கள்,  நிறைவான  வாழ்க்கைக்கான  மதக்கோட்பாடுகளை  மட்டும்  கூறுவதோடு  நின்று விடவில்லை; அவை இன்றைய விஞ்ஞானம்  நிரூபித்துள்ள  மின்சாரம்,  ரேடியம்,  மின்னணுவியல்,  விமானம்  போன்றவற்றையும்  வேதங்களை  உருவாக்கிய ரிஷிகள் அறிந்திருந்தனர்  என்பதையும்  உறுதிப்படுத்துகின்றன. ---வீலெர்  வில்ஹாக்ஸ்---

Monday, July 18, 2011

உன் அன்பு ஒன்று தான் எனக்கு ஆதாரம். மற்ற  அனைத்தும் என்னை  ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடும்.  உன் சிந்தனையிலேயே  வாழ்ந்து உயிர் துறக்க அருள் புரி அம்மா. ஒரே ஒரு எதிபார்ப்பு  உன் அன்பு ஒன்றுதான்.  மனமுருகி அழைக்கின்றேன்  என்னைத் தேடி வா அம்மா!!

Wednesday, July 13, 2011

Tuesday, July 12, 2011

Thursday, June 30, 2011

உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு இனிய கனவுகளாக வேண்டும். உன் ..உன் அழகிய வடிவத்தை  எப்பொழுதும்  அன்புடன் தியானிக்க  வேண்டும். உன் திருநாமம் என்னை விட்டு பிரியாத சிந்தனை மலர்களாக வேண்டும். உன் கடாட்சம் என்ற கருணைத் தென்றலில்  கரைந்து போக வேண்டும்.  என் வாழ்விற்கு அனைத்தும் நீயே  அம்மா!!

Saturday, June 25, 2011

உன்   அடைக்கலத்தை நான் எப்போதும் தேடுகின்றேன். அளவின்றி  அழுகின்றேன்  அம்மா.  உன்னுடைய அழியா   தெய்வீக மகிமையை  அறிந்து என் அறிவு தெளிவடைய  உன்னை இடைவிடாமல் தேடுகிறேன்.  

Thursday, June 9, 2011

உலகில் அன்பும், பேரன்பும் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அண்டை வீட்டார் மீது அன்பு காட்டுவதில்லை. உங்கள் பெற்றோர் மீது அன்பு காட்டுகிறீர்கள் . ஆனால் அதேமாதிரி அனைவர் மீதும் அன்பு காட்டுவதில்லை. உங்கள் மதத்தின் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் எல்லா மதங்களின் மீதும் அன்பு காட்டுவதில்லை. பிற மதத்தவரை வெறுக்கக்கூடச் செய்கிறீர்கள். உங்கள் நாட்டின் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் எல்லா நாடுகளின் மீதும் அன்பு காட்டுவதில்லை. இது நிஜமான பேரன்பாகாது. இது குறுகிய அன்பாகும். இந்த குறுகிய அன்பை தெய்வீகப் பேரன்பாக மாற்றுவதே ஆன்மீகத்தின் இலச்சியமாகும். இந்த பேரன்பின் நிறை நிலையில் அழகிய, நறுமணமிக்க  கருணை என்னும் மலர் மலர்கிறது. 
அன்பே சிவம்!!

Wednesday, June 8, 2011

ஆண்டவா! ஒவ்வொரு சூழ்நிலையிலும் புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்புரியும் சக்தியைக் கொடு. சிரமமான சூழலிலும் உன்னை மறவாத மனநிலையைக் கொடு. இன்பமோ, துன்பமோ உன் திருவடிகளைப் போற்றும் பாக்கியம் மட்டுமே வேண்டும்.


Monday, May 23, 2011

Sunday, May 15, 2011

Saturday, April 30, 2011


ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றையும் விடுத்து ஆன்மா இறைவனுடன் சேரவேண்டும் என்பதை காட்டுவதே இம்முத்திரை.

Friday, April 8, 2011



ஒருவன் இடைவிடாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முறை மந்திரத்தை ஜபிக்கும்போது, அவனுடைய மனம் தானாகவே வலிமையடைந்து, தியானத்தில் மூழ்குகிறது. இறுதியில் குண்டலினி சக்தி அவனிடம் விழித்தெழுகிறது. தூய்மையான மனம் படைத்தவர்கள் தியானம் செய்யும்போது, அவர்கள் ஜெபிக்கும் மந்திரம் தானாகவே எந்தவித முயற்சியும் இல்லாமல் அவர்களுக்குள்ளிருந்து கொப்பளித்து பொங்குகிறது. யார் இந்த நிலையை அடைகிறார்களோ அவர்கள் ஜபத்தில் வெற்றி பெறுகிறார்கள்.
எண்ணங்களையும், சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி, நல்லுணர்வுகளை உருவாக்க தியானம் ஒரு சிறந்த வழி. ஆழ்ந்த தியானம் என்பது முதலில் சிரமமாகத் தோன்றினால், கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தையே ஜபம் செய்யுங்கள். நாளடைவில் ஜபம் செய்யும் நிலையே தியான நிலைக்கு மாறி, மனதை ஒருமுகப்படுத்த வாய்ப்பு கிட்டும். அப்படியும் மனம் அடங்காவிட்டால், மனத்தூய்மை ஏற்படுவதற்கு வழி பிறக்கும்.

Wednesday, March 23, 2011

விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது. பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.

Saturday, March 12, 2011



இறைவன் துன்பமயமான உலகைப் படைத்தவர் கொடியவர் என்று சிலர் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் சொகுசாக வாழும்போது மற்றவர்கள் வறுமையில் வாடுவது நியாயமா என்று பலர் வருந்துகிறார்கள். இதுவா கடவுளின் கருணை? என்று பலரும் மனம் நொந்து கொள்கின்றனர்.உண்மையில் கடவுள் சோதனைகளை மட்டுமே கொடுக்கும் கொடியவர் அல்ல. அவர் கருணை வடிவானவர். நியாயமான ஆசைகளைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு கடவுளின் கருணை என்றைக்கும் உண்டு. பேராசை கொண்டு அலையாதீர்கள். தர்மநெறிமுறைகளை பின்பற்றி சத்திய வழியில் நடப்பவர்களை கடவுள் நிச்சயம் கரைசேர்க்க தவறுவதில்லை. வேகத்துடன் எதையும் அணுகாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்வது பலவழிகளில் நமக்குத் துணை செய்யும். "அம்மா' என்று ஆண்டவனின் திருப்பாதங்களை சரண்புகுந்து நீயே எனக்குத் துணை என்று கூக்குரல் எழுப்புங்கள். உன்னையன்றி எனக்கு யார் துணை என்று மன்றாடுங்கள். அம்பாளின் மனம் உருகி நிச்சயம் உங்களை தனதாக்கிக் கொள்வாள். எது நமக்கு வாழும் வகை என்பதை பல ரிஷிகள் நமக்கு போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வழிகளை பின்பற்றினால் வாழ்க்கை மேன்மை பெறும்.

Tuesday, March 1, 2011

வாழ்க்கை தத்துவம்




சிவபெருமானின் கழுத்திலுள்ள விஷம் குறிப்பது அமுதம், விஷம் என்பவை இன்ப, துன்பங்கள்.வாழ்க்கை எனும் பாற்கடலைக் கடையும் போதும் இத்தகைய அனுபவங்கள் வரலாம். இன்பத்தை ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். துன்பம் வரும் போது துவண்டுவிடாமல் இறைவனை வழிபட்டு அவனருளால் அதைக் களைய வேண்டும். இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள அசுரர்கள் போன்ற தீயவர்கள் வருவார்கள். அவர்களையும் இனம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்.
காளையின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடி இறைவன் காட்சி கொடுக்கிறார் என்பது - சகல உயிர்களையும் நாம் போற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரன் வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் தோன்றுவது- நம்முடைய வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என உணர்த்துகிறது.
சிவபெருமானின் தலையில் கங்கை இருக்கிறதே- அது எப்போதும் நாமனைவரும் தூய்மையான, குளிர்ச்சியான மனத்துடன் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அவரது கழுத்தைச் சுற்றி இருக்கும் பாம்பு - எப்போதும் நாம் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது. சிவபெருமான் புலித்தோல் அணிந்திருப்பது- மனிதன் ஒருபோதும் மிருக உணர்ச்சிக்கு ஆட்படக்கூடாது என்பதைப் போதிக்கிறது. கையில் சூலம் ஏன் என்று கேட்பீர்களே? அது மனிதன் தன மனதிலுள்ள ஆசை, கோபம், பொறாமை, ஆணவம் போன்ற எதிரிகளை சூலத்தைக்கொண்டு அழிக்க வேண்டும் என்பதை சொல்கிறது.
இறை சொரூபத்தின் ஒவ்வொரு அடையாளமும் வெறும் கற்பனைகள் என்று நினைக்காதீர்கள். அவை மனிதனுக்கு வாழ்வியலை உணர்த்தும் அரிய பாடங்கள்.
என்ன சந்தேகம் தீர்ந்துவிட்டதா??

Friday, February 25, 2011


பராசக்தியின் பாதமலர்களைச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தாலும், அவளிடம் பக்தி கொண்டு வாழ்ந்தாலும், அவளது புகழைப் பாடினாலும் அழியாத பேரின்பவாழ்வு தருவாள். நம் கவலையைப் போக்கி அருள் செய்வாள். அம்பிகையிடம் சுகத்தினை வேண்டித் தொழுங்கள். நம் மனக்குறைகளை அவளிடம் சொல்லி அழுங்கள். நம் வாழ்வில் நல்ல மாற்றங்களையும், மனதிற்கு வலிமையும், ஆறுதலையும் தந்தருளுவாள். தாயே! எங்களைக் காப்பது உன் கடன்! இவ்வுலக வாழ்வினையே உனக்காக அர்ப்பணித்துவிட்டேன். காளித்தாயே! உன் துணை இருக்கும்போது மரணத்திற்கு அஞ்சத் தேவையில்லை. நோய்,பேய், ரணம், பழி என்று இனி எதை எண்ணியும் சிறிதும் பயமில்லை. ஒளி பொருந்திய நீலநிறம் கொண்டவளே! எங்கள் சிந்தையில் நிறைந்திடும் திறம் உடையவளே! அச்சம், பொய், சினம் என்னும் பொய்ம்மைக் குணங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போகட்டும். உள்ளவுறுதியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள அருள்கொடு. உலகங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவள் நீயே. உன்னருளால் சிந்தையும் தெளியட்டும்.

Sunday, February 13, 2011


சத்குருவை அடைக்கலமடைந்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம். ஸ்ரீகுருவின் திருப்பாத கமலங்களில் எல்லா தேவதைகளும், அனைத்து உலகங்களும் அடங்கியிருக்கின்றன. ஒரு சத்குருவிடம் நம்பிக்கை வைத்துவிட்டால் அது குறைந்துவிட ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. நிலையான, ஆழ்ந்த நம்பிக்கை அவசியம். குழந்தைகளே, உங்களுக்கு களங்கமற்ற தன்மை உண்டாக வேண்டும். களங்கமற்ற உள்ளமும், சமர்ப்பணமும்தான் நம்மைக் காக்கும். ------அம்மா----

Thursday, February 10, 2011






நாவின் ருசிக்காக உண்பது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே உண்ணவேண்டும். அதுபோல அளவுக்கு மீறி உறங்குவதும் கூடாது. ஓய்வு நோக்கில் உறங்கி சீக்கிரம் துயில் எழ வேண்டும்.

Monday, January 24, 2011

இறைவனின் அலங்காரம்


"அதரம் மதுரம், நயனம் மதுரம், வதனம் மதுரம், ஹசிதம் மதுரம், ஹ்ருதயம் மதுரம், கமனம் மதுரம், மதுராதிபதே அகிலம் மதுரம்" இவ்வாறு இறைவனோடு சம்பந்தப்பட்ட அனைத்திலும் பக்தன் இறைவனைத் தரிசிக்கிறான். இறைவனை அலங்கரித்து ஐம்புலன்களினால் இறைவனை வழிபடல் பக்தி மார்க்கத்தில் மிகச் சிறந்த முறை. கண்களால் இறைவனின் வடிவைக் காணல், காதுகளால் இறை நாமங்களைக் கேட்டல், நாவால் நைவேத்தியத்தைச் சுவைத்தல், விபூதி அணிதல், இறைவனுக்குப் பூஜை செய்த பொருட்களின் நறுமணத்தை நுகர்தல் என மனதையும், ஐம்புலன்களையும் இறைவனிடம் ஒருமுகப்படுத்த இவை அனைத்தும் உதவுகின்றன. ஆண்டிக் கோலத்திலாயினும் சரி, அரச கோலத்திலாயினும் சரி அவர் முழுமையானவர். நம் சந்தோசத்திற்காக நம்முடைய மன நிலைக்கேற்றவாறு இறைவனை அலங்கரிக்கிறோம். அவர் நம்முடைய கற்பனைகளுக்கு கட்டுப்படுபவர் அல்ல. இறைவனே அனைத்துமாவார். நாம் அவரை அலங்கரித்தாலும், அலங்கரிக்காவிடிலும் அவரின் அழகில் எந்தவித மாற்றமுமில்லை.
புறப் பொருட்களில் அழகைக் காணும் நம் முயற்சி ஜீவன் முக்தி நிலை வரை தொடரும். எங்கும் அழகைத் தேடுவோம். இறைவன் அழகின் முழுவடிவமானவன். அந்த இறைவனை அழகுபடுத்திக் காண விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? இறைவன் எங்கும் நிறைந்த சைதன்யமாவார். தன் அகமும், புறமும் இறைவன் நிறைந்திருக்கிறார் என்பது பக்தனுக்குத் தெரியும். இருந்தாலும் அவருடைய அழகிய வடிவத்தைக் கண்களால் காணவும், அந்த அழகை ரசிக்கவும் பக்தன் விரும்புகிறான்.


Thursday, January 13, 2011

சனாதன(இந்து) தர்மம் --- காலத்தைக் கடந்து நிற்பது.


இந்துமதம் என்று அறியப்படும் மதம் சனாதன தர்மம் என்றும் சொல்லப்படுகிறது. ஆதியற்ற வேதமே இதன் ஆதார நூலாகும். சனாதனம் என்றால் என்றும் உள்ளது என்று பொருள். இந்து தர்மம் எப்போது ஆரம்பமாயிற்று என்று கூறுவது இயலாத செயல். அதேபோல் இதற்கு முடிவும் இல்லை. காலத்தின் ஓட்டம் சக்கர கதியில் செல்கிறது. அதனால், யுகங்கள் மீண்டும் மீண்டும் ஆரம்பமாகும். பிரளயங்கள் மீண்டும் மீண்டும் தோன்றும். ஆனால், சனாதனதர்மம் என்றும் நிலைத்திருக்கும். காரணம், அது பிரபஞ்சத்தைக் கட்டுபடுத்தும் நியதிகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்து தர்மத்தை நிறுவியவர் எனச் சொல்ல யாருமில்லை. ----மாத்ருவாணி---