Monday, December 30, 2013
புத்தாண்டை வரவேற்கும் வேளையில், நமது பழைய பண்பாடுகள், ஆசாரஅனுஷ்டானங்கள் போன்றவற்றின் மதிப்பை பெரும்பான்மையோர் மறந்து வருகிறார்கள். பண்டிகைகள் நமது பண்பாட்டின் வெளிப்பாடாக, வயதில் மூத்தவர்களை வணங்குதல், ஆலயங்களுக்கு சென்று இகபரநலன்களை வழங்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்வது, பகிர்ந்துண்பது, எளிமை போன்றவை நமது வழக்கத்தில் இருந்தவை. இன்றோ, பண்டிகைகள், ஆலயத் திருவிழாக்கள், வீட்டு விஷேசங்கள் என அனைத்திலும் சினிமா, சின்னத்திரை தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆலயங்களுக்குச் சென்று அந்த புனிதமான சூழலில் மனதின் சுமைகளை, தீய சிந்தனைகளை இறக்கி வைத்த காலம் மறைந்து, சினிமா பாடல், குத்தாடம், திரைப்படம் போன்றவை இல்லாத கொண்டாட்டங்கள் அருகி விட்டன. அனைவரும், பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் குழந்தைககளுக்கும் அதன் உயர்வை எடுத்துச் சொல்லி, பண்டிகைகள், விஷேசங்களை உண்மையான, பழைய பண்பாடுகள் நிறைந்த பண்டிகைகள் ஆக கொண்டாட முயற்சி செய்யுங்கள். இறைவனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையவும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்! ---அம்மா , மாத்ருவாணி----
Tuesday, December 17, 2013
Wednesday, December 11, 2013
அம்மா! இவனது உதடுகளிலிருந்து உதிரும் சொற்கள் அனைத்தும் உனது மகா மந்திர ஜபமாக வேண்டும். கைகளின் அசைவுகள் அனைத்தும் உன்னைத் துதிக்கும் முத்திரைகளாக வேண்டும். கால்களின் இயக்கம் முழுவதும் உனக்குச் செய்யும் பிரதட்ஷிணமாக வேண்டும். உண்ணும் உணவும், பருகும் நீரும் உனக்குச் செய்யும் ஹோம அர்ப்பணமாக வேண்டும். எந்தன் உறக்கமும் உனக்குச் செய்யும் நமஸ்காரமாக வேண்டும். அதிகம் கூறுவானேன் அம்மா; இவனது எல்லாக் கர்மங்களும் ஆத்மார்ப்பணமாக உனது ஆராதனையாக வேண்டும். எல்லாச் செயல்களும், சுகங்கள் அனைத்தும் உனக்குச் செய்யும் பூஜையாக வேண்டும். ~~ஆதிசங்கரர்~~
Wednesday, December 4, 2013
ஹரே கிருஷ்ண மந்திரம், கிருஷ்ணரின் ஒலிப் பிரதிநிதித்துவம் ஆகும். ஆகவே, ஒரு சாதாரண சொல்லின் அர்த்தத்தை ஆராய்வது போல, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தத்தைப் பற்றி பேச முடியாது. ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தம் அதனுள்ளேயே அடங்கியுள்ளது.சாதாரண சொற்களைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. உதாரணமாக "நீர்" என்னும் சொல், "நீர்" எனும் பதார்த்தத்தை விட வித்தியாசமானது. நீங்கள் தாகமாக இருக்கும் பொழுது "நீர், நீர், நீர்" என்று கூறினும் நீங்கள் தொடர்ந்தும் தாகமாகவே இருப்பீர்கள். ஆனால் கிருஷ்ணர் அவருடைய நாமத்தில் இருந்து வேறுபட்டவரல்ல. ஆகவே, நாங்கள் "கிருஷ்ணா" என்று கூறியவுடன் அவர் உண்மையிலேயே தோன்றுகிறார். அவருடைய நாமத்தின் ஒலி அதிர்வில் அவருடைய தன்மைகளான அழிவற்ற தன்மை, அறிவு, ஆனந்தம் என்பவற்றை நாம் அனுபவிக்கலாம். அதுவே ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தமாகும். ஆனால் அதை நீங்கள் உங்கள் புத்தி கூர்மையால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்து, அதன் உன்னதமான அர்த்தத்தை நீங்களாகவே அனுபவித்துக் கொள்ள வேண்டும்.
Tuesday, November 26, 2013
Thursday, November 21, 2013
Tuesday, November 12, 2013
4 u..!
மனம் எல்லா இடத்திலும் மூக்கை நுழைக்கும். பைத்தியம் போல கூத்தாடும். அர்த்தமில்லாமல் ஆசைப்படும். நினைவு அலையில் மிதக்கும். ஆகாயத்தில் கோட்டை கட்டும். வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நினைத்து கவலை கொள்ளும்.மனதைக் கட்டுப்படுத்த எண்ணினால், முதலில் அதைச் சிதறடிக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காக இருக்கும் இடத்தை விட்டே ஓடி விடுவது தான் வழி என்று தவறான முடிவு எடுக்கிறார்கள் பலர். எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். வேண்டாத தீய எண்ணம் மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். தூய்மையான மனம் எளிதில் ஒருமுகப்படும். அப்போது எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி எளிதில் கிட்டும்.
மனம் எல்லா இடத்திலும் மூக்கை நுழைக்கும். பைத்தியம் போல கூத்தாடும். அர்த்தமில்லாமல் ஆசைப்படும். நினைவு அலையில் மிதக்கும். ஆகாயத்தில் கோட்டை கட்டும். வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நினைத்து கவலை கொள்ளும்.மனதைக் கட்டுப்படுத்த எண்ணினால், முதலில் அதைச் சிதறடிக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காக இருக்கும் இடத்தை விட்டே ஓடி விடுவது தான் வழி என்று தவறான முடிவு எடுக்கிறார்கள் பலர். எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். வேண்டாத தீய எண்ணம் மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். தூய்மையான மனம் எளிதில் ஒருமுகப்படும். அப்போது எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி எளிதில் கிட்டும்.
Saturday, November 9, 2013
"Love is not aggressive. Love is a constant, uninterrupted and unbreakable flow. Compassion is like a stream, a never-ending stream. It never hurts anyone. Hurting is the nature of human beings. Love never hurts. Compassion never hurts. But we hurt people because we have egos. The ego is happy to see others' unhappiness. The ego is happy to see others struggling and suffering." ~~Amma ~~
Thursday, November 7, 2013
உனது பிரச்சனைகளை எல்லாம் நான் கையாளுகிறேன். இதற்கு உனது உதவி எனக்குத் தேவை இல்லை என்பதை தயவு செய்து நினைவில் வைத்திரு. உன்னால் கையாள இயலாத நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்கு முயலாதே. "இறைவன் செய்ய வேண்டிய காரியம் " என்கிற பெட்டியில் போட்டுவிடு. அதை நான் தீர்த்து வைக்கிறேன். ஆனால் ஒரு விஷயம், நீ நினைக்கும் கால அளவில் அது நிறைவேறுமென எண்ணாதே. கால அளவைத் தீர்மானிப்பது நானாக இருப்பேன்.
சிக்கலைப் பெட்டியில் சேர்த்த பின்னும் அதைப்பற்றி எண்ணிக் கலங்காதே, மாறாக உனது வாழ்வில் இப்போதுள்ள சிறந்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்து. அலுவலகத்தில் மோசமான நாளாக ஒருநாள், அமைந்துவிட்டால், பல வருடங்களாக வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களைப் பற்றி எண்ணிப்பார். இதுவரை இனியதாக இருந்து வந்த ஒரு உறவு மோசமாகி விட்டால் மனம் தளராதே. இவ்வுலகில் அன்பைப் பெறுவதைப் பற்றியும், அதை திருப்பிச் செலுத்துவதைப் பற்றியும் சிறிதும் அறியாதவர்களையும், யாருமே இல்லாதவர்களையும் நினைத்துப் பார். "இந்த வார விடுமுறை கழிந்து விட்டதே" என வருந்த நேர்ந்தால், அன்றாடம் 12 மணிநேரம் ஓய்வின்றி தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு தாயை எண்ணிப்பார்.
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது ஒரு நரை முடியைக் காண நேர்ந்தால், முடியே இல்லாமல் கவலைப்படுபவர்களை எண்ணிப்பார். உனக்கோர் இழப்பு நேர்ந்து விட்டது, நீ " இது என்ன வாழ்க்கை? நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்?" என்று மனம் நொந்து போகும் வேளையில்; அற்ப ஆயுளில் இறந்து போகும் மனிதர்களை எண்ணிப்பார். பிறரது வெறுப்புக்கோ, மடைமைக்கோ, தாழ்ச்சிக்கோ, ஆதரவின்மைக்கோ ஆளாக நேர்ந்தால்,"இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புண்டு. அந்நிலை எனக்கு வரவில்லையே என்று கருது. இக்கருத்துக்களை உனது நண்பர்களுக்கு அறிய வைக்க முடிவு செய்து விட்டாயா? நன்றி! உன்னால் அறிய முடியாத முறையில் நீ அவருக்கு நலன் புரிந்திருப்பாய்.-- இப்படிக்கு கடவுள்-- நன்றி மாத்ருவாணி--
Friday, November 1, 2013
Thursday, October 10, 2013
Friday, October 4, 2013
Wednesday, October 2, 2013
பொறுமையற்றவர்கள், சுயநலக்காரர்கள், கோழைகள்; அவர்கள் தங்கள் காரியம் முடியும் வரை எதுவும் செய்வார்கள்.
பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. பயமும், பகையும் அவனிடம் வளர்ந்து கொண்டே போகும்.
உயர்ந்தவர்களிடம் கொண்ட நட்பு உண்மையானதாக இருக்கும். ஆனால், தாழ்ந்தோர் நட்போ வைக்கோல் மீது பிடித்த நெருப்பு போல அழிந்து விடும்.~~மகாவீரர்~~
Friday, September 27, 2013
Monday, September 23, 2013
"Love is not aggressive. Love is a constant, uninterrupted and unbreakable flow. Compassion is like a stream, a never-ending stream. It never hurts anyone. Hurting is the nature of human beings. Love never hurts. Compassion never hurts. But we hurt people because we have egos. The ego is happy to see others' unhappiness. The ego is happy to see others struggling and suffering."
~~Amma
Thursday, September 19, 2013
Sunday, September 15, 2013
Thursday, September 5, 2013
Wednesday, September 4, 2013
Friday, August 23, 2013
Tuesday, August 20, 2013
Thursday, August 15, 2013
Sunday, August 11, 2013
Monday, July 29, 2013
Wednesday, July 24, 2013
Wednesday, July 17, 2013
Monday, July 15, 2013
Saturday, July 13, 2013
Friday, July 12, 2013
Tuesday, July 9, 2013
Wednesday, June 19, 2013
Thursday, June 13, 2013
Sunday, May 26, 2013
Wednesday, April 17, 2013
பிருந்தாவனத்தின் ஒவ்வொரு கோபிகையும் ஒவ்வொரு ரிஷிக்கு சமானமாக இருந்தனர். கோபிகைகள் என்னதான் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் எப்பொழுதும் அகலாத கிருஷ்ண தியானத்திலேயே இருந்தார்கள். . சுகப் பிரம்மரிஷி, ஜட பரதர், ரிஷிப யோகி போன்றோர்கள் எப்படிப்பட்ட உயர்ந்த பிரம்ம ஞானத்தில் திளைத்துக் கிடந்தார்களோ அப்படித்தான் கோபிகைகளும் இருந்தனர். அவர்களை கிருஷ்ணனின் காதலிகள் என்று சொல்வதா... யோகத்தின் உச்சநிலை நிற்கும் யோகினிகள் என்று அழைப்பதா... இல்லை, எப்படி அழைத்தாலும் அவர்களை விளக்குவது மிகவும் கடினம் என்று அமைதியாக இருப்பதுதான் நல்லதா என்று சொல்லும்படியாக அவர்கள் திகழ்ந்தார்கள். முற்றிலுமான சரணாகதி அது. சரணாகதி செய்து விட்டால் எது நடந்தாலும் அது கிருஷ்ணனின் திருவுளப்படிதான் நடக்கிறது என்கிற திடம் வந்துவிடும். உடலால் எல்லா காரியங்களையும் செய்வார்கள். ஆனால், மனம் எப்போதும் கிருஷ்ண நாமத்தையோ அல்லது தியானத்திலோ இருக்கும்.. வாழ்வின் கவலைகளையும் துக்கங்களையும் சுகங்களையும் எல்லோரையும்போல அனுபவிப்பதாக தெரிந்தாலும் மாபெரும் சக்தியே அனைத்தையும் நடத்துவிக்கிறது என்கிற எண்ணம் அவர்களிடம் வலிமையாக இருந்தது.
Wednesday, March 20, 2013
Subscribe to:
Comments (Atom)







































.jpg)









