Thursday, June 28, 2012


அம்மா! 

Tuesday, June 26, 2012



மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல் நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம்.  சீடனுக்கு உபதேசம் செய்விக்கிறபோது, குருவானவர் அவனுள் உறங்கிக்கிடக்கும் ஆற்றலை எழுப்பிவிடுகிறார். அதற்கு தன்னுடைய ஆற்றலில் சிறிதளவே அவனுக்கு வழங்குகிறார். உறைமோரைப் போல அவர் செயல்படுகிறார். ஒரு செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதுபோல, அவர் இகலோக சுகத்தில் திளைக்கிற மனதைப் பறித்து ஆன்மிக உலகில் இடம்பெறச் செய்கிறார்.

Saturday, June 23, 2012



அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரமாகும். நித்திரைக்குப் பிறகுமனமும் கர்மேந்திரியங்களும் அந்த வேளையில் அமைதியாக இருக்கின்றன. அப்போது சத்வகுணம் ஓங்கி இருக்கிறது. இந்த வேளையில் சொல்லும் தியான ஸ்லோகங்களே அதிக பலன் தர முடியும். நம்மிடத்தில் அமைதியும், நம்மைச் சுற்றிஅமைதியும் நிறைந்துள்ள அந்த வேளை தான் தியானத்துக்கு மிகவும் ஏற்றது.

Friday, June 22, 2012

பாவியேன் இனிஎன் செய்கேன்
பரமனே! பணிந்து உன் பாதம்
சேவியேன் விழிநீர் மல்கச் 
சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த
அமுதமே என்னேன்; அந்தோ
சாவிபோம் சமயத்து ஆழ்ந்து
ஜகத்திடைத் தவிக்கின் றேனே!
- தாயுமானவ சுவாமிகள்

Wednesday, June 20, 2012



மனதை அலைக்கழிக்கும் வீண் விஷயங்களில் இருந்து விடுபடுங்கள். அமைதியாக இருங்கள். பயனுள்ள விஷயங்களை மட்டுமே பேச பயிற்சி எடுங்கள்.  ஆண்டுக்கணக்கில் செய்யவேண்டிய பெரிய விஷயங்களைக் கூட, சில நாட்களிலோ, சில மணிநேரத்திலோ நம்மால் சாதிக்க முடியும். அதற்குத் தேவை ஆன்மிகப்பயிற்சி மூலம் கிடைக்கும் மனத்துணிவு. 

Sunday, June 17, 2012


கருமேனி வண்ணம் கொண்டவனே! உன் திருவடியைப் போற்றிடும் உள்ளங்கள் அழியாத பேரின்பத்தினை உறுதியாகப் பெறும். வளமும், செல்வமும், பெருமையும், புகழும் உன்னருளால்கிடைக்கும்.---பாரதியார் -----

Saturday, June 16, 2012



கட்டுப்பாடுகள் மதத்தில் நமக்கு நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடைசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல.
----- -பகவத் கீதை.-----

Friday, June 15, 2012


பிறர் மீது அன்பும் கருணையும் படைத்தவர்கள் பகவானைத் தேடி அலைய வேண்டியதில்லை.  கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடி கடவுள் செல்வார். அத்தகைய இதயமே கடவுள் விரும்பி குடியிருக்கும் கோயிலாகும்.--AmmA--- 

Thursday, June 14, 2012



Only the attitude ‘I am nothing, I know nothing’ will help you reach the goal. — Amma

Tuesday, June 12, 2012

Monday, June 11, 2012


இறைவனின் பாதம் தர்மத்தையும், கைகள் மோட்சத்தையும், முகம் இறைவடிவத்தையும் காட்டுகிறது. இவற்றுள் இறைவனின் பாதமே மிக உயர்ந்தது. எனவே தான், இறைவனின் திருவடிகளைப் பூஜிக்கச் சொல்கிறார்கள் பெரியோர்.

Wednesday, June 6, 2012

மணல்மேடுகள்


முழு நிலவொளியில் எழில் கொஞ்சும் கபிலபுரத்தின் திண்ணையில் பொன்னுசாமி உறங்குகிறான்.   திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு தக்க உதாரணம் இவன் வாழ்க்கை.  சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்த பொன்னுசாமி கபிலபுரத்து சிவன் கோயிலில் வளர்ந்து வந்தான்.  திருப்பணியாற்றி, தேவாரம் பாடி, சிவன் பிரசாதம் உண்டும்  கோயில் திண்ணையில் உறங்கியும் பொன்னுசாமி வாழ்ந்து வந்தான். நொடிப்பொழுது போல் இருபது வருடங்கள் உருண்டோடி விட்டன.  
கடுமையாக உழைத்ததன் அசதியில் உறங்கிப்போன பொன்னுசாமி ஒரு கனாக்கண்டான்.  பொன்னியாற்றின் மணல்ப்பரப்பில் "உன் வாழ்க்கை"  என்ற அறிவிப்புத் தாங்கிய பலகை, அவன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின்  நிழல் சித்திரமாக அவனை நோக்கிச் சிரித்தது.  தனது வாழ்க்கைப் பாதையில் நான்கு ஜோடி கால் சுவடுகளை பொன்னுசாமி கண்டான்.  சற்று உற்று நோக்கிய போது, ஒரு ஜோடி  அவனுடையது என்றும்  மற்ற ஜோடி தனக்கு எல்லாமாகிய சிவபெருமானின்  பாதச் சுவடுகள்  என்றும் அவனுக்குப் புரிந்தது. 
தன் வாழ்க்கையைக் குறிக்கும் மணல்ப்பரப்பு முழுவதும் கடவுளின் கால்சுவடுகள், தனது கால்சுவடுகளோடு  கூட வருவதைக் கண்டவன் "ஆஹா! நம்முடன் சிவபெருமான் வாழ்க்கை முழுவதும் நடந்து வந்திருக்கிறாரே! நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தி இருக்கிறாரே!"  என நினைத்து  நினைத்து பூரித்துப் போனான்.  பொன்னுசாமி  மணல்பரப்பில் அங்குமிங்குமென  மணல்மேடுகள் நிறைந்திருப்பதைக் கண்டதும்; சற்றே உற்று நோக்கினான். மணல் மேடுகளின் மேல் ஒரு ஜோடி கால்சுவடுகள் மட்டும் காணப்படுவதைக் கண்டு பதைத்துப் போனான். "ஈசனே! இது தகுமா!  என் வாழ்க்கையின் இக்கட்டான கட்டங்களைக் குறிக்கும் மணல்மேடுகளில் என்னை அம்போ  என்று விட்டுவிட்டீர்களே?" என்று புலம்பினான். 
"மகனே! உற்று நோக்கு" என்று குரல் கேட்க; உற்று நோக்கினான்.  மணல்மேடுகளில் பதிந்தது  ஈசனின் பாதச் சுவடுகளேயன்றி தனது  கால்சுவடுகளல்ல என்று புரிந்தது.  "மகனே! இக்கட்டான சூழ்நிலைகளில் உன்னை நடக்க விடாது எனது தோள்களில் வைத்து சுமந்து சென்றேன். அதனால் தான் எனது  கால்சுவடுகள் மட்டும் காணப்படுகிறது. மணல் மேடுகளில் உன்னை நான்தான் சுமந்து சென்றேன்"  என்று  ஒலி கேட்டது. 
திடுக்கிட்டு எழுந்த பொன்னுசாமி  " இது கனவல்ல.  ஈசன் தனக்கு புகட்டிய பாடம்" என்றே கருதினான். அன்று முதல் வாழ்க்கையைப்  பற்றிய அவனது கண்ணோட்டமே மாறிவிட்டது. ஏதாவது கஷ்டம் வரும்போது " இது மணல்மேடு.  என்னை இப்பொழுது ஈசன்தான் சுமக்கிறார் " என்று நினைத்துக் கொள்வான். மணல்மேடுகள் வெறும் மணல்துகள்களாவதைக் கண்டான். 
 "நம் கண்ணோட்டத்தில் நாம் செய்யும் சின்னஞ்சிறு மாற்றங்கள் நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமையுள்ளவையாகும்". 

Monday, June 4, 2012



நமது ஜீவனின் ஏழு மையங்கள்
- ஸ்ரீ அரவிந்தர்



1) ஆயிரமிதழ்த்தாமரையென்னும் சகஸ்ரதல மையம் - தலையுச்சியில்.
2) நெற்றியின் நடுவில் - அஜ்ன சக்கரம் - (சங்கற்பம், திருஷ்டி, செயலாற்றும் மனம்).
3) தொண்டையின் பின்னிருக்கும் மையம் - வெளிப்படுத்தும் மனம்.
4) இதய கமலம் - உளவுணர்ச்சி மையம். இதன் பின்னே சைத்திய புருஷன் இருக்கிறது.
5) நாபி - மேல் பிராணன்.
6) நாபிக்குக் கீழுள்ள மையம் - கீழ்ப்பிராணன்.
7) மூலாதாரம் - தூல ஜீவன்.

இந்த மையங்களனைத்தும் உடலின் நடுவிலிருக்கின்றன. அவை முதுகுத் தண்டுவடத்துடன் பிணைந்திருப்பதாகக் கூறுவர். ஆனால், உணர்வு விழிக்கும்போது இவற்றின் இயக்கங்கள் தூல உடலில் நடப்பதாகத் தோன்றிய போதிலும் - உண்மையில் இவை சூக்கும தேகமென்னும் நுண்ணுடலில் இருக்கின்றன.

Saturday, June 2, 2012



  • வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை. சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்.-----பகவத் கீதை----