Sunday, May 27, 2012
Thursday, May 17, 2012
பிறருக்குத் துன்பமும் வேதனையும் தரும் செயலை செய்யக்கூடாது. இப்படிப்பட்ட செயல்கள் இறுதியில் உங்களுக்கே கெடுதல் செய்யும். யாரையாவது புண்படுத்தும் போது, அவர் குற்றமற்றவராகவும் இருக்கலாம். அவர் தவறு எதுவும் செய்யாமலே புண்படுத்தப் பட்டதாக இதயம் நொந்து வருந்துவர். அவரது எண்ணமும், பிரார்த்தனையும் உங்களைப் பாதிக்கும். பிற்காலத்தில் நீங்கள் துன்பப்பட இவை காரணங்களாகிவிடும். ஆகவே யாரையும் எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தக்கூடாது.
Wednesday, May 16, 2012
சனாதன தர்மமும் பாரத பூமியும்^^
உலகம் முழுவதிலும் இன்று சனாதனதர்மத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள். பழங்காலத்தில் இது உலகம் முழுவதும் நன்கு பரவி இருந்தது. சனாதன தர்மம் பாரத பூமியில் தோன்றியது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரை உள்ள பூமியே பாரதம். சிந்துவும், கங்கையும் பெருகும் பூமி. ஹிமாலயமும், விந்திய மழையும் தலை உயர்த்தி நிற்கும் பூமி. சங்கராச்சாரியார் அவதரித்த கேரளம் முதல் சைவ தரிசனத்தின் பிறப்பிடமான காஷ்மீர் வரை, துவாரகை உள்ளம் குஜராத் முதல், சக்திபீடமான காமாக்யா அமைந்துள்ள அஸாம் வரை பரந்து கிடக்கும் பாரதத்தில்தான் வேதங்களும்,இதிஹாசங்களும், புராணங்களும், யோகம், தந்திரம் போன்ற உபாசனைகளும் தோன்றி, தளிர்த்து வளர்ந்திருக்கின்றன. தேவர்கள் கூட இந்த மண்ணில் பிறப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இந்துக்களின் தாய்நாடும் தந்தை நாடும் இதுவே ஆகும். கர்மபூமியும், புண்ணியபூமியும், மோட்ஷபூமியும் இதுதான். சொர்க்கத்தை விட மகிமை பொருந்திய இடம்.
மிகவும் பழமையானதாக இருந்தாலும், இக்காலத்திற்கும் மிகவும் பொருத்தமான தர்மமாக சனாதனதர்மம் திகழ்கிறது. "மெய்ப்பொருள் ஒன்றே என்று அறிந்தவர்கள் அதைப் பல பெயர்களில் வர்ணிக்கின்றனர்" என்ற பரந்த மனப்பான்மையின் மந்திரத்தை தரிசித்த தர்மம் இது. பலவித நம்பிக்கையின், ஆராதனை முறைகளின் பெயரில் கலகங்களில் ஈடுபடாத தர்மமாகும் இது. பிரபஞ்சம் முழுவதையும் தெய்வீகமானதாகக் காணும் ஹிந்து தர்மம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும், இயற்கை முழுவதற்கும் இதமானதாக அமைந்துள்ள தர்மமாகும். இது ஆதியற்றது என்றாலும் எக்காலத்திற்கும் பொருத்தமானது. காலத்தால் எழும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரத்தையும், உலகிற்கு பிரகாசமான எதிர்காலத்தையும் தரும் சனாதன தர்மம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
Sunday, May 6, 2012
மனித சமுதாயத்தின் துன்பத்தை நீக்கும் மருந்தாக மதம் அமைய வேண்டுமானால் அகங்காரத்தையும், பகைமையையும் வளர்க்கக்கூடாது.
"நான், எனது' என்ற எண்ணம், நம் மனதைப் பற்றுடையதாக்கி, பார்வையை மறைக்கிறது. உண்மையான மதத்தத்துவங்களைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே அகங்காரம் நீங்கும்.
சுயநலத்தோடு கூடிய அன்பைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம், இந்தக் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, தெய்வீக அன்பாக மாற்றுவதே மதத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்.உண்மையான அன்பு முழுமையடையும் போது, அதிலிருந்து அழகான வாசனை கமழும் கருணையாகிய மலர் மலர்கிறது.----Amma----
Thursday, May 3, 2012
தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். நியாயத்திற்கு விரோதமாகவும், விதண்டாவாதம் பேசுபவர்களாகவும், தன்னலம் மிகுந்தவர்களாகவும் இருப்பவர்களிடமும் கூட அன்பாக இருங்கள்.
வெறுப்புக்கு அழிக்கும் சக்தியே உண்டு. அது எப்போதும் தீங்கான செயலையே விளைவிக்கும். ஆனால், அன்பு அனைவருக்கும் நல்லதையே அளிக்கும். அது ஒன்று தான் கவலையை போக்கி ஆறுதலை அளித்து, அடைக்கலமும் அளிக்கிறது.
Subscribe to:
Comments (Atom)


.jpg)


