Tuesday, November 26, 2013

Thursday, November 21, 2013

Wednesday, November 20, 2013


Tuesday, November 12, 2013

4 u..!

மனம் எல்லா இடத்திலும் மூக்கை நுழைக்கும். பைத்தியம் போல கூத்தாடும். அர்த்தமில்லாமல் ஆசைப்படும். நினைவு அலையில் மிதக்கும். ஆகாயத்தில் கோட்டை கட்டும். வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நினைத்து கவலை கொள்ளும்.மனதைக் கட்டுப்படுத்த எண்ணினால், முதலில் அதைச் சிதறடிக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காக இருக்கும் இடத்தை விட்டே ஓடி விடுவது தான் வழி  என்று தவறான முடிவு எடுக்கிறார்கள் பலர்.  எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். வேண்டாத தீய எண்ணம் மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். தூய்மையான மனம் எளிதில் ஒருமுகப்படும். அப்போது எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி எளிதில் கிட்டும்.

Saturday, November 9, 2013

"Love is not aggressive. Love is a constant, uninterrupted and unbreakable flow. Compassion is like a stream, a never-ending stream. It never hurts anyone. Hurting is the nature of human beings. Love never hurts. Compassion never hurts. But we hurt people because we have egos. The ego is happy to see others' unhappiness. The ego is happy to see others struggling and suffering." ~~Amma ~~

Thursday, November 7, 2013


உனது பிரச்சனைகளை எல்லாம் நான் கையாளுகிறேன். இதற்கு உனது உதவி எனக்குத் தேவை இல்லை என்பதை தயவு செய்து நினைவில் வைத்திரு.  உன்னால் கையாள இயலாத நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்கு முயலாதே. "இறைவன் செய்ய வேண்டிய காரியம் " என்கிற பெட்டியில் போட்டுவிடு. அதை நான் தீர்த்து வைக்கிறேன். ஆனால் ஒரு விஷயம், நீ நினைக்கும் கால அளவில் அது நிறைவேறுமென எண்ணாதே. கால அளவைத் தீர்மானிப்பது நானாக இருப்பேன்.
சிக்கலைப் பெட்டியில் சேர்த்த பின்னும் அதைப்பற்றி எண்ணிக் கலங்காதே, மாறாக உனது வாழ்வில் இப்போதுள்ள சிறந்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்து. அலுவலகத்தில் மோசமான நாளாக ஒருநாள், அமைந்துவிட்டால், பல வருடங்களாக வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களைப் பற்றி எண்ணிப்பார். இதுவரை இனியதாக இருந்து வந்த ஒரு உறவு மோசமாகி விட்டால் மனம் தளராதே. இவ்வுலகில் அன்பைப் பெறுவதைப் பற்றியும், அதை திருப்பிச் செலுத்துவதைப் பற்றியும் சிறிதும் அறியாதவர்களையும், யாருமே இல்லாதவர்களையும் நினைத்துப் பார். "இந்த வார விடுமுறை கழிந்து விட்டதே" என வருந்த நேர்ந்தால், அன்றாடம் 12 மணிநேரம் ஓய்வின்றி தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு தாயை எண்ணிப்பார்.
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது ஒரு நரை முடியைக் காண நேர்ந்தால், முடியே இல்லாமல் கவலைப்படுபவர்களை எண்ணிப்பார். உனக்கோர் இழப்பு நேர்ந்து விட்டது, நீ " இது என்ன வாழ்க்கை? நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்?" என்று மனம் நொந்து போகும் வேளையில்; அற்ப ஆயுளில் இறந்து போகும் மனிதர்களை எண்ணிப்பார். பிறரது வெறுப்புக்கோ, மடைமைக்கோ, தாழ்ச்சிக்கோ, ஆதரவின்மைக்கோ ஆளாக நேர்ந்தால்,"இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புண்டு. அந்நிலை எனக்கு வரவில்லையே என்று கருது. இக்கருத்துக்களை உனது நண்பர்களுக்கு அறிய வைக்க முடிவு செய்து விட்டாயா? நன்றி! உன்னால் அறிய முடியாத முறையில் நீ அவருக்கு நலன் புரிந்திருப்பாய்.--  இப்படிக்கு  கடவுள்--  நன்றி மாத்ருவாணி--

Wednesday, November 6, 2013

"The mind always has expectations. In order to experience pure consciousnesses, this nature of the mind must disappear. --Amma--

Friday, November 1, 2013