Thursday, December 27, 2012
Tuesday, December 25, 2012
நாட்கள் நகர்கின்றன. உன் நினைவுகள் கூடிக் கொண்டே போகிறது. வருடங்கள், மாதங்கள் போனாலும் அழியாத உன் நினைவுகளில் பேரின்பம் கண்ணா! உன்மேல் கொண்ட ஆழ்ந்த அன்பினாலும், நீ என்னைத் தேடி வருவாய் என்ற நம்பிக்கையிலும் தான் உயிர்ப்புடன் வாழ்கிறேன் கண்ணா!
உன் அன்பெனும் இனிமையை உணர்ந்தேன் கண்ணா! கனவா, நிஜமா புரியவில்லை. எதுவோ இந்த நொடியில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய் என்ற நிம்மதியோடு இருக்கிறேன். நீ எங்கோ இருந்தாலும் நானும், நீயும் இதயத்தின் மொழியில் நிறையவே பேசிக்கொண்டிருக்கிறோம். ...முடிவில்லாமல் தொடர்கிறது எங்கள் உரையாடல்.... . .கொட்டும் பனியின் கடும் குளிரிலும் உன் அன்பின் மென்மையும், இனிமையும் என்னைச் சூழ்ந்துள்ளது .பேரானந்தம்....கண்ணா! ... உன்னை நினைத்தாலே பரவசம். கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எண்ணமெல்லாம் நீயாக நிற்கின்றாய் கண்ணா! உன் நினைவுடனே என் உயிர் பிரிந்து விட வேண்டும். இதைவிட வேறு ஆசைகள் எனக்கு இல்லை கண்ணா!
நான் அழுவதை பார்த்துக் கொண்டு கல்லாக இருப்பது உனக்கொன்றும் புதிதில்லையே...இப்படியே கல்லாகவே இரு... உன் மௌனத்தை கலைத்து விடாதே கண்ணா! நீ என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தாலும், எவ்வளவு காயப்படுத்தினாலும் நான் உன்னைக் காண தவமிருக்கிறேன். எந்த பிறவியிலாவது உன்னைக் காண்பேன்..நான் உன்மேல் கொண்ட பேரன்பின் சக்தி என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் கண்ணா!
Wednesday, December 19, 2012
Monday, December 17, 2012
கஷ்டம் வந்து விட்டதா? மனிதர்களின் காலில் விழுந்து பலனேதும் இல்லை. கடவுளின் திருவடியை நம் இருகைகளாலும் பற்றிக் கொள்வதே சிறந்த சரணாகதி. "நீ தான் எனக்கு கதி' என்று கெட்டியாக இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவனுக்கு எத்தனையோ முகங்கள், கைகள், ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், அவருக்கு பாதங்கள் (கால்கள்) என்னவோ இரண்டு மட்டும் தான். ஏனென்றால், அவரை வணங்கும் நமக்கு இரு கைகள் மட்டுமே. சரணாகதி அடைய வரும் அன்பர்கள் தன் இருகைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருணையோடு இருதிருவடிகளைத் தாங்கி நிற்கிறார். இதனையே, "அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்று இறைவனின் திருவடியின் பெருமையை குறிப்பிடுவது வழக்கம்.
Tuesday, December 11, 2012
ஒரு சமயம் ஆயர்பாடியில் யசோதை கண்ணனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தாள். குழந்தையாக இருக்கும்போது தயிரையும், வெண்ணெயையும் திருடித் தின்றாலும், என்னை விட்டு எங்கும் போகாமல் இருந்தான். ஆனால், இளைஞனானதும் சொல்லாமல் கொள்ளாமல் இஷ்டம் போல் எங்காவது போய்விடுகிறானே,'' என்று வருந்தினாள். வளர்த்த பாசம் அவளை இப்படி எண்ண வைத்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. விறுவிறு என்று ஒரு வீட்டை நோக்கி நுழைந்தாள். அது வேறு யாருடைய வீடுமல்ல! கண்ணனின் காதலி ராதாவின் வீடு தான்.அவளிடம், ""அம்மா! ராதா! கண்ணனைக் கண்டாயா?'' என்று கேட்டாள். அவளோ கண்களை மூடியபடியே தியானத்தில் இருந்தாள். யசோதையின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. கண்ணனோடு இரண்டறக்கலந்து தெய்வீகப்பரவச நிலையில் இருந்த ராதா, மெல்ல உலகநினைவுக்குத் திரும்பியபடியே கண்விழித்தாள். தன் முன் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அப்படியே அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள். யசோதை பரபரப்புடன்,""ராதா! என்பிள்ளை கண்ணனைப் பார்த்தாயா?'' என்று மீண்டும் கேட்டாள்.
அவளோஇயல்பாக, ""கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்போது நம் உள்ளத்தில் கண்ணன் இருப்பதைக் காண்பீர்கள்,'' என்று சொன்னாள். யசோதையும் அப்படியே தியானித்தில் லயித்தாள். ராதா தன்னுடைய தெய்வீக சக்தியை யசோதையின் மீது செலுத்தினாள். புல்லாங்குழலை இசைத்தபடியே கண்ணன் கண்ணுக்குள் தோன்றினான். அதன்பின், நினைத்த நேரத்தில் எல்லாம் கண்ணனைக் காணும் பாக்கியத்தைப்பெற்றாள் யசோதை .
Subscribe to:
Posts (Atom)




