Monday, December 30, 2013


புத்தாண்டை வரவேற்கும் வேளையில், நமது பழைய பண்பாடுகள், ஆசாரஅனுஷ்டானங்கள் போன்றவற்றின் மதிப்பை பெரும்பான்மையோர் மறந்து வருகிறார்கள். பண்டிகைகள் நமது பண்பாட்டின் வெளிப்பாடாக, வயதில் மூத்தவர்களை வணங்குதல், ஆலயங்களுக்கு சென்று இகபரநலன்களை வழங்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்வது, பகிர்ந்துண்பது, எளிமை போன்றவை நமது வழக்கத்தில் இருந்தவை. இன்றோ, பண்டிகைகள், ஆலயத் திருவிழாக்கள், வீட்டு விஷேசங்கள் என அனைத்திலும் சினிமா, சின்னத்திரை தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆலயங்களுக்குச் சென்று அந்த புனிதமான சூழலில் மனதின் சுமைகளை, தீய சிந்தனைகளை இறக்கி வைத்த காலம் மறைந்து, சினிமா பாடல், குத்தாடம், திரைப்படம் போன்றவை இல்லாத கொண்டாட்டங்கள் அருகி விட்டன. அனைவரும், பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் குழந்தைககளுக்கும் அதன் உயர்வை எடுத்துச் சொல்லி, பண்டிகைகள், விஷேசங்களை உண்மையான, பழைய பண்பாடுகள் நிறைந்த பண்டிகைகள் ஆக கொண்டாட முயற்சி செய்யுங்கள். இறைவனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையவும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்! ---அம்மா , மாத்ருவாணி----

Tuesday, December 17, 2013

Wednesday, December 11, 2013


அம்மா!  இவனது உதடுகளிலிருந்து உதிரும் சொற்கள் அனைத்தும் உனது மகா மந்திர ஜபமாக வேண்டும். கைகளின் அசைவுகள் அனைத்தும் உன்னைத் துதிக்கும் முத்திரைகளாக வேண்டும். கால்களின் இயக்கம் முழுவதும் உனக்குச் செய்யும் பிரதட்ஷிணமாக வேண்டும். உண்ணும் உணவும், பருகும் நீரும் உனக்குச் செய்யும் ஹோம அர்ப்பணமாக வேண்டும். எந்தன் உறக்கமும் உனக்குச் செய்யும் நமஸ்காரமாக வேண்டும்.  அதிகம் கூறுவானேன் அம்மா; இவனது எல்லாக் கர்மங்களும் ஆத்மார்ப்பணமாக உனது ஆராதனையாக வேண்டும். எல்லாச் செயல்களும், சுகங்கள் அனைத்தும் உனக்குச் செய்யும் பூஜையாக வேண்டும். ~~ஆதிசங்கரர்~~

Tuesday, December 10, 2013

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை 
           – கௌதம புத்தர்--

Wednesday, December 4, 2013


 ஹரே கிருஷ்ண மந்திரம், கிருஷ்ணரின் ஒலிப் பிரதிநிதித்துவம் ஆகும். ஆகவே, ஒரு சாதாரண சொல்லின் அர்த்தத்தை ஆராய்வது போல, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தத்தைப் பற்றி பேச முடியாது. ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தம் அதனுள்ளேயே அடங்கியுள்ளது.சாதாரண சொற்களைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. உதாரணமாக "நீர்" என்னும் சொல், "நீர்" எனும் பதார்த்தத்தை விட வித்தியாசமானது. நீங்கள் தாகமாக இருக்கும் பொழுது "நீர், நீர், நீர்" என்று கூறினும் நீங்கள் தொடர்ந்தும் தாகமாகவே இருப்பீர்கள். ஆனால் கிருஷ்ணர் அவருடைய நாமத்தில் இருந்து வேறுபட்டவரல்ல. ஆகவே, நாங்கள் "கிருஷ்ணா" என்று கூறியவுடன் அவர் உண்மையிலேயே தோன்றுகிறார். அவருடைய நாமத்தின் ஒலி அதிர்வில் அவருடைய தன்மைகளான அழிவற்ற தன்மை, அறிவு, ஆனந்தம் என்பவற்றை நாம் அனுபவிக்கலாம். அதுவே ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தமாகும். ஆனால் அதை நீங்கள் உங்கள் புத்தி கூர்மையால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்து, அதன் உன்னதமான அர்த்தத்தை நீங்களாகவே அனுபவித்துக் கொள்ள வேண்டும்.

Monday, December 2, 2013

 இறவாத வின்ப வன்பு     வேண்டிப்பின்
வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும்
மறவாமை வேண்டு மின்னும் வேண்டும்நான்
மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போதுன் அடியின்கீழ்
இருக்க வென்றார் .