Thursday, October 27, 2011
Sunday, October 23, 2011
கடவுள் உருவம் இல்லாதவர். மக்கள் தமக்குப் பழக்கமான உருவத்தில் அவரை வணங்கி வழிபாடு செய்கிறார்கள். கடவுளை அவரவர் மனதிற்கு உகந்த முறையில் படைத்துக் கொள்கிறோம். குழந்தையாக இருந்தால், கடவுளையும் ஒரு குழந்தையாக பாவித்துக் கொள்ளும். பசு, கடவுளை வணங்க விரும்பினால் தனது வடிவத்தில் தான் வணங்க முற்படும். நாம் வீட்டில் பூஜை செய்யும் போது, மஞ்சள் பொடியில் சிறிது புனிதநீரைக் கலந்து பிடித்து வைத்துவிட்டு பிள்ளையார் என்று கூறுகிறோம். பிடித்து வைத்த மஞ்சளில், ""அஸ்மின் பிம்பே மகா கணபதிம் ஆவாகயாமி'' என்று அவரை உருவாக்கி வழிபடத் தொடங்குகிறோம். மஞ்சளில் பிள்ளையாரைப் படைத்தபின் அதனை மஞ்சளாக நாம் நினைப்பதில்லை. அதன் பின் அம்மஞ்சளை சமையலுக்கோ, மற்றதற்கோ நாம் பயன்படுத்துவதில்லை. இதனைத் தான் ""பிடித்தால் பிள்ளையார்''என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு. நம் மனதிற்குப் பிடித்த எந்த உருவத்தில் கடவுளை வழிபாடு செய்ய விரும்புகிறோமோ, அந்த வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்வதையே இஷ்ட தெய்வவழிபாடு என்கிறோம். அந்த உருவம் நாம் கொடுத்தது தான் என்றாலும், நாம் உருவம் கொடுத்தபின் அவ்வடிவம் மதிப்பு பெற்று விடுகிறது. நம் மனம் அந்த வடிவத்தில் ஒன்றிவிடத் தொடங்குகிறது. வெறும் வடிவமாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. கடவுளாகப் பாவித்து வழிபாடு செய்து மகிழ்கிறோம்.
-தயானந்த சரஸ்வதி சுவாமி
Sunday, October 9, 2011
அவதாரங்கள்
இறைவன் உலகின் மீது கொண்ட கருணையால் பல்வேறு அவதாரங்கள் எடுத்து உலகிற்கு வருகிறார் என்ற தெய்வீக ரகசியம் சனாதன தர்மத்தின் ரகசியமாகும். உலகில் அதர்மம் அதிகரிக்கவும், நன்மக்கள் வருந்தவும் செய்யும் போதுதான் இறைவன் அவதரிக்கிறார். ஸ்ரீமத் பகவத்கீதையின் கூற்றுப்படி தர்மத்தை நிலை நிறுத்துவதும், தீயோரைத் தண்டிப்பதும்தான் இறை அவதாரத்தின் திவ்வியமான லட்சியங்கள் ஆகும். இது விஷ்வ பிரேமையின் மூலமே சாத்தியமாகிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு எவ்வடிவத்தையும் எடுக்கவும், விரும்பியது போல் லீலை நடத்தவும் இயலும் என்பது அவதாரத்தின் பொருள்.
Thursday, October 6, 2011
Sunday, October 2, 2011
- இந்து மதம் யாரையும் எதிர்ப்பதில்லை. யாரும் தங்கள் மதத்தையோ, நம்பிக்கையையோ விட்டுவிட வேண்டுமென்று கூறவுமில்லை. அது மட்டுமல்ல,ஒருவரது நம்பிக்கையைக் கெடுப்பதை அதர்மமாகவும் அது கருதுகிறது. எல்லா மதங்களையும் ஒரே இலட்சியத்தை அடைவதற்கான பலவித மார்க்கங்களாகவே அது கருதுகிறது. சனாதன தர்மம் வாழ்வின் முழுமையான நிர்வாகவியல் சாஸ்திரமாகும்.அது மனித குலத்தின் ஆன்மிக நலனிற்கும், மற்றும் உலகியல் நலனிற்கும் வழிவகுக்கும்.
Subscribe to:
Comments (Atom)



