Wednesday, September 26, 2012


கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதில் எவ்வளவு நீர் நிறைந்திருந்தாலும் அந்த நீர் நம் தாகத்தைத் தணிப்பதில்லை. ஆனால், ஊற்று நீர் சிறியதாக இருந்தாலும், நம் தாகத்தைத் தணித்து விடும். அதுபோல, வாய்பேசும் பண்டிதனைக் காட்டிலும், ஞானியின் ஒரு வார்த்தை கூட நமக்கு நல்வழிக் காட்டும் தன்மையுடையது.  
சாதுக்களை என்ன திட்டினாலும் அவர்கள் மவுனமாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மலைமேல் விழுந்த தூறல் மலையையா சாய்த்துவிட முடியும்? 
கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அது போல, அஞ்ஞானிகளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.
ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர். ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார். அவரை அனைவரும்பைத்தியம் என்று கேலி பேசினர். அந்த ஞானி சொன்னார், ''எனக்குக் கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை. நம்மைக் காப்பாற்ற வேண்டுமா, மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. அது என்னுடைய கவலை இல்லை. நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை. திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன். ஆகவே, மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது. எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ, மரணத்தைப்பற்றி மட்டும் எப்படிஎன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?''

Tuesday, September 25, 2012

Saturday, September 22, 2012

Sunday, September 16, 2012




கிருஷ்ணா!   நீ  என்னை ஏறெடுத்துப் பார்க்காமல்  இருந்தாலும்  என்னால் உன்னை மறக்க முடியவில்லை.  உன்மேல்  உள்ள அன்பு   அதிகமாகிக் கொண்டே போகிறது.  எந்த ஜென்மத்திலும் உன்னை மறக்கவே  முடியாது கண்ணா! மனமும், உடலும்   சோர்ந்து விட்டது கண்ணா!  உன்னைப்போல்  என்மேல்  அன்பு காட்டுபவர் யாருமே இல்லை  என்று பெருமையுடன் நினைத்திருந்தேன்.  நீயோ என்னைவிட்டு  தொலைதூரம் போய்விட்டாய்.  நீ  உன்  கடைக்கண் பார்வையை என்மீது காட்டாவிட்டால்  என் வாழ்வே  நரகமாகி விடும்.  என் உயிரோடு கலந்த அழியாத நினைவுகளுடன்  உன் பிரிவால் துடிக்கின்றேன் கண்ணா!   இதெல்லாம் உனக்கு சொல்லித் தெரியணுமா..என் உணர்வுகள்  உன்னையன்றி வேறு யார் அறிவார் கண்ணா? என் வாழ்வில் அன்புக்கு அர்த்தம் கொடுத்தவன்  நீதானே  கண்ணா!  இப்போ  என்னை விட்டு விலக உன்னால் எப்படி முடிந்தது?  என்னைவிட்டு  எங்கு போனாய்  மாயக்கண்ணா?  உன்னை காணாமல் தவிக்கின்றேன்.  இந்த  அடிமையை நீ திரும்பிப் பார்க்காத அளவிற்கு என்ன பாவம் செய்தேனோ கிருஷ்ணா?உன்னால் எப்படி இப்படி  கல்லாக  இருக்க முடிகிறது?  நான்  அழுவதை  ரசிப்பது  உனக்கு சந்தோசமென்றால்  உனக்காகவே அழுது கொண்டேயிருப்பேன்.  என்மீது  அன்பு மழை பொழிவாய்  என்று  எதிர்பார்த்திருந்தேன். . ஆனால் நீயோ   கண்ணீர்  மழை பொழிய  வைத்து விட்டு  சென்றுவிட்டாய்.   "உன் உயிர்  போகுமட்டும் அழு " என்று பார்த்துக் கொண்டிருக்கிறாயா?   உனக்கு ஏன் கண்ணா இந்த கொலைவெறி?  நீ  எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும் உன்னை மறக்கவோ, வெறுக்கவோ முடியாது  கிருஷ்ணா,  என் உயிர் பிரிந்தாலும் உன் அன்பெனும் இனிமைக்காக  என் பிறவிகள் தொடரும்.  ஒவ்வொரு நொடியும் கண்ணீரோடு காத்திருக்கிறேன்  உன் இனிய நினைவுகளோடு....

Wednesday, September 12, 2012



There are many ways to calm a negative energy without suppressing or fighting it. You recognize it, you smile to it, and you invite something nicer to come up and replace it; you read some inspiring words, you listen to a piece of beautiful music, you go somewhere in nature, or you do some walking meditation.

Tuesday, September 11, 2012



ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பே மேலானது. இந்த பரமகருணைக்கு "அநுக்ரஹம்' என்று பேர் சொல்கிறோம். அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உயர்ந்த அன்பு தான் பக்தி ஆகும். 
--- காஞ்சிப்பெரியவர்

Tuesday, September 4, 2012


The tears of true devotion are more powerful than meditation. — Amma