Tuesday, March 3, 2015

இந்து தர்மத்தில் சக்தியை பரம்பொருளின் வடிவமாக கூறுகிறோம். இறைவனில் அடங்கியுள்ள இயற்கையானது செயற்பட தொடங்கி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை  நடாத்தும் சக்தியாக வடிவெடுக்கிறது.  இந்த பராசக்தியை நாம் ஜகன்மாதாவாக வழிபடுகிறோம். செல்வத்தின் அதிபதியான திருமகளாகவும், கல்வியின் நாயகியாக கலைமகளாகவும், துர்க்குணங்களை  அழிக்கும் மலைமகளாகவும் நாம் சக்தியை வழிபடுகிறோம். ஒவ்வொரு தெய்வபாவத்திற்கும் அந்த தெய்வத்தின் தர்மத்தை செயல் படுத்தும் சக்தி இருக்கிறது. சக்தி உபாசனை செய்யாமல் ஆன்மீக முன்னேற்றம்  அடைவது  கடினம் என்று மகான்கள் கூறியுள்ளார்கள்.