--ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Friday, July 27, 2012
--ராமகிருஷ்ண பரமஹம்சர்.
Thursday, July 26, 2012
இது பகுத்தறிவு மற்றும் யுக்தியின் உலகமாகும். இதயத்தின் மொழியை இன்றைய மனிதன் மறந்திருக்கிறான். பரஸ்பரம் அன்பு செலுத்தவும், நம்பிக்கை வைக்கவும், மதிப்பளிக்கவும் கற்பிக்கும் இதயத்தின் மொழி இன்று மறைந்து கொண்டிருக்கிறது.
சொர்க்கமும், நரகமும் பூமியில் தான் இருக்கின்றன. அதைப் படைப்பது நமது மனமே. அதனால் அந்த மனத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் துன்பப்பட நேரிடாது. ஆனந்தம் மட்டுமே எஞ்சி நிற்கும்.
சுயநலம் நெருப்புப்பொறி போன்றது. நம்முடைய அமைதி முழுவதையும் குலைக்க சிறிதளவு சுயநலம் போதும். எந்த விதத்திலாவது சுயநலமில்லாமல் வாழப்பழகுங்கள்.
நமது ஒவ்வொரு செயலும், அறிந்தோ, அறியாமலோ பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுபோலவே, பிறரது செயல்கள் நம்மையும் பாதிக்கின்றன. அதனால்தான் நம்முடைய ஒவ்வொரு சிந்தனையிலும், வாக்கிலும், செயலிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வாழ்க்கை என்பது இதயம் நிறைந்த சிரிப்பாக மாற வேண்டும். அதுவே மதம்; அதுதான் ஆன்மிகம்; அதுவே உண்மையான பிரார்த்தனை. உள்ளத்திலிருந்து வெளிப்படும் களங்கமற்ற புன்னகையே இறைவன்.
நல்ல சிந்தனைகளாலும், நச்செயல்களாலும் நம் வாழ்வைப் பொருள் நிறைந்ததாக ஆக்க வேண்டும். எதிலும் நன்மையை மட்டும் காண முயற்சி செய்யுங்கள். யாரையும் பார்த்துப் பொறாமைப் படாதீர்கள். ஆடம்பரமில்லாமல் வாழுங்கள். பலனை எதிர்பாராது சேவை செய்யுங்கள்.
Friday, July 20, 2012
மாயவா! உன்னிடமிருந்து ஒரு சிறிய அன்பைத் தேடி அலைகிறேன். நான் உன் அன்பை அடைய நெருங்கும் போது அதை நீ தட்டிவிட்டுப் போய் விட்டாய். துன்பக் கண்ணீரை அருந்தியவாறு தினமும் உறங்க முடியாமல் தவிக்கின்றேன். என் ஒட்டு மொத்த அன்பையும் கொட்டிக் கொடுத்துவிட்டேன் உன்னிடம். உனக்கு இரக்கமே இல்லையா? உன்னை அன்புடன் நினைக்காத நேரமே இல்லை. என் இதயத்துடிப்பே நீயாகி விட்டாய் கண்ணா! அழுகின்ற கண்கள் நீ காணாததேன்? ஓடி வந்து ஆறுதல் கூறாததேன்?
உன்னை எங்கே தேடுவேன்? உனக்காகக் காத்திருக்கிறேன் குறும்புக்காரா! உனது தரிசனம் தந்தருள்க! நீ என்னோடு இல்லாவிடில் எனக்கு எதிலுமே நாட்டமில்லை. கண்ணா! மதுசூதனா! விரைவில் வந்தருள்க! கிருஷ்ணா! என் குரலைக் கேட்காதது போலிருப்பதேனோ? என் துன்பத்தைப் பார்க்காதது போல் நடிப்பதேனோ? உலகத்தையும், என்னையும் உனக்காக அனைத்தையும் மறந்து தவிக்கின்றேன். ஈடிணையில்லா அன்பை ரசித்து மகிழும் உனக்கு என் அன்பு மட்டும் புரியுதில்லையா கண்ணா? அல்லது கண்டும் காணாமல் இருந்து என்னை சித்திரவதை செய்கிறாயா? உனக்கு என்மேல் கருணையே இல்லையா கல்நெஞ்சக்காரா?? உன்னை எதிர்பார்த்து ஏங்கி அழுகின்றேன். "நல்லா அழு, உன் தலைவிதி என்கிறாயா?" என்ன பாவம் செய்தேன் கண்ணா! உன் பிரிவால் அழுதழுதே செத்துக்கொண்டிருக்கிறேன் கண்ணா! என் மேல் கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டாயா? உனக்காக நான் அழுவதும் எனக்கு ஆனந்தமாக உள்ளது. என் ஆயுள் முழுவதும் உனக்காகவே மட்டும் அழும் பாக்கியத்தை எனக்கு கொடுத்துவிடு கண்ணா!
Wednesday, July 18, 2012
Tuesday, July 17, 2012
அன்பினைத் தேடித்தேடி களைத்து நான் உள்ளம் உடைந்து விட்டேன். எட்டாத் தொலைவிலெல்லாம் தேடித்தேடி கண்ணீர் விட்டுக் களைத்தேன். அல்லும் பகலும் அம்மா உன்னை எண்ணி நெஞ்சம் நெகிழ்கிறது. ஈடில்லா உன் அன்பையும், கருணையையும் என் மேல் காட்டு. துன்பங்களை நீக்குபவளே! உனது புன்னகை கடாட்ஷத்தால், ஆசைகள், பந்தங்களை அறுத்துவிட்டு நித்திய சாந்தி எனும் கரையை அடையச் செய்து விடு.
Thursday, July 12, 2012
அம்மா, என் நினைவு, கனவு, நிஜம், உயிர் எல்லாமே நீதான் அம்மா! என்னைவிட்டு போய் விடுவியா ??!! என் உயிரையும் உன்னுடன் எடுத்துச் செல் . உன்னைப் பிரிந்து இந்த உலகில் என்னால் வாழ முடியாது. அம்மா! உன் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு மென்வார்த்தையில் என்னையே மறந்தேன். எப்பொழுதும் உன் நினைவோடு வாழும் வரத்தைக் கொடுத்து விடு. வேறொன்றும் எனக்கு வேண்டாம்
Subscribe to:
Comments (Atom)









