Saturday, January 21, 2012

Wednesday, January 11, 2012


வாழ்க்கையின் சுமை அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து அர்ப்பண மனப்பான்மையுடன் வாழ்ந்தால் கவலை இருக்காது. கடவுளும் நம்மைக் காத்தருள்வார்.  முற்காலத்தில் காடுகளில் புதர் மண்டிக் கிடந்தது. இப்போது நம் மனம் தான் அக்காட்டினைப் போல மண்டிக் கிடக்கிறது. மனதைச் சுத்தமாக்கி, இறைவன் தங்கும் கோயிலாக்க வேண்டும். மனதில் உள்ள ஆசாபாங்களை அடியோடு விலக்கினால் மட்டுமே நிம்மதியுடன் வாழமுடியும். இதற்கு தியானம் மிக உதவியாகத் திகழ்கிறது.
-மாதா அமிர்தானந்தமயி

Thursday, January 5, 2012

ஹோமாக்கினியில் பொருட்களை அர்ப்பிக்கும்போது  அவை வீணாகி விடுவதில்லை: ஹோமத்தால் இயற்கை  நலன் பெறுகிறது.  வேதத்திலுள்ள கர்ம காண்டப்பகுதியில் இவை  விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பலன்களை விஞ்ஞானபூர்வமாகவும் விளக்கியுள்ளார்கள். நெய், எள், அருகம்புல், தேங்காய், தேன் போன்றவற்றை அக்கினியில் இடும்போது உண்டாகும் புகை சுற்றுபுறத்தை தூய்மையாக்கும். வேதிப்பொருட்களை உபயோகிக்காமல் தீய  அணுக்களை இதனால் அழிக்க முடிகிறது. அந்த  மணத்தை நுகரும்போது மனிதர்களுக்கும்  நலன் விளைகிறது.  அதிகாலையில் ஹோம குண்டத்திற்கு முன்னால் அமர்ந்து  ஹோமம் செய்வதன் மூலம் மன ஒருமைப்பாடு கிடைக்கும். எண்ணங்கள் குறையும், மன இறுக்கம் குறையும், அக்கினியின் அருகில் இருப்பதால் உடல் வியர்க்கும், அதன் மூலம் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறும்.  நெய், தேங்காய் போன்றவை எரிவதால் எழும் மணத்தை சுவாசிக்கிறோம். அது உடல் நலத்திற்கு  மிகவும் நல்லது. அத்துடன் சுற்றுப்புறமும் தூய்மையாகிறது. நம் முன்னோர்கள் கூறியுள்ள  ஒவ்வொரு ஆசாரமும் இயற்கையின் சமநிலையையும் காக்கும் குறிக்கோளையுடையதாக அமைந்திருந்தது. இவை எதுவும் இயற்கையை மாசுபடுத்தாது. 

Wednesday, January 4, 2012