இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக் கொண்டு அவனைஅணுகாதீர்கள். காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால் நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது அழைத்தான் என்றால் அது காரைகைகால் அம்மையார் ஒருவரைத்தான்.அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன் கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று. ‘’இறவாத அன்பு வேண்டும், பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும்’ என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர். நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக வரம் தர வேண்டும்’ என்றார். ‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்! கண்ணீர் விடுங்கள்!அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்! மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்.
புத்தர் பெரிய அரச வம்சம். ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாகிறார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள். ‘அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக்காரனைப்போல திரிகிறாயே’ என்றெல்லாம் கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனமும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து, “சன்னியாசியே! நாங்க இவ்வளவு அவமானப்படுத்தியும் நீங்கள் அமைதியாக அல்லவா இருக்கிறீர்!” அமைதியாக மட்டுமா! ஆனந்தமாக அதெப்படி? புத்தர், “நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்று வினவினார். “யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம்” என்றனர் மக்கள். “இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்றார் புத்தர். “எங்களுக்குத்தான்” – மக்கள்.. “சரி, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” – புத்தர். ஆம், உங்களின் உடந்தையில்லாமல் உங்களை யாரும் தாழ்த்திவிட முடியாது. நீங்கள் தாழ்வாக உணர்ந்தால் அதை செய்தவர் நீங்களே. ஆக இது போன்ற சூழ்நிலையிலே உங்களை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் உங்க மனம்தான். மற்றவர்கள் அவமானப்படுத்தும்போது, கோபப்படுத்தும் போது, உங்களுக்குள்ள இடதை பறிக்கும் போது, அவசரப்படாதீர்கள், ஆத்திரப்படாதீர்கள், கொஞ்சம் நிதானத்தை கையிலெடுங்கள். உங்கள் மனதை தயார்படுத்துவதில்தான் உங்கள் வெற்றியே அமையும்.*
கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனுக்கு உயிர் கூட ஒரு பொருட்டாக இருக்க முடியாது.