பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,""அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.""மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? '' அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான். அப்போது அவர்,"" தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்! அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான். வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது. ""பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன். "தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான். ""அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய். வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார். தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது. இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை. புரிகிறதா!
Saturday, January 26, 2013

Sunday, January 20, 2013
கடவுளை அதிகம் சிந்திப்பது யார்?
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர், ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது, அவனது இதயநாயகி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில், அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் அங்கு வந்தார்.
""கண்ணாடியைப் பார்த்து கணவனும், மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என்ன விஷயம்?'' என்று கேட்டார்.
""மாமா! இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா, பாமாவா, மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன்,'' என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு.யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன்! அவன் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான்.
""இதென்ன விந்தை,'' என அபிமன்யு கேட்டான்.
""அபிமன்யு! என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால், சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு,'' என்றார். பார்த்தீர்களா! நோக்கம்
எதுவானாலும், பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை!
Saturday, January 12, 2013
மனதில் பக்தி இருக்குமானால் கடவுளை உணர முடியும். அவருடைய அருளைப் புரிந்து கொள்ள முடியும். அவரின் கருணையை ஆழ்ந்து அனுபவிக்க முடியும். ஏனென்றால் கடவுள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார்.
ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. நாம் தான் குடத்தில் எடுத்து வரவேண்டும். அதுபோல் இறைவனின் கருணை எங்கும் நிரம்பி இருந்தாலும் நாம் தான் அதைப் பெற்றுக் கொள்ள நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். கடவுள் நம்மைப் பெற்ற தாய் போன்றவர். தாய் நம்மை அடித்துத் திருத்தினாலும் அவள் உள்ளத்தில் இருக்கும் அன்பு மாறுவதில்லை. தாயின் அன்பு எல்லாக் குழந்தைகளின் மீதும் சமமாகவே இருக்கும். அதுபோல, ஆண்டவன் சோதனைகள் மூலம் நம்மைத் திருத்துகிறார். உயிர்களைப் படைத்த இறைவன் எது நல்லது எது கெட்டது எது நிலையானது எது அழியக்கூடியது என்று தெரிந்து கொள்ளும் பகுத்தறிவை நமக்குக் கொடுத்திருக்கின்றான். அதைப் பயன்படுத்தி நல்லவைகளை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். லாபநஷ்டங்களைப் பற்றி சிந்திக்காது, நமது செயல்களின் பயனை இறைவனிடம் அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே சரியான துறவாகும்.
Wednesday, January 2, 2013
கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவமின்றி ஒளிவடிவாக காட்சிதரும் அவனை நாமும் அந்நிலையில் வழிபாடு செய்வது மிக உயர்ந்த நிலையாகும். ஆனால், நம்மைப் போன்ற பாமரர்களால் இவ்வாறு இறைவனை வணங்க முடியாது. எனவே தான் பகவானே நம் மத்தியில் பாலகிருஷ்ணனாக அவதரித்தான். மதுசூதன சரஸ்வதி என்னும் அடியவர் குழந்தை கண்ணன் மீது ""ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம்'' என்னும் பெயரில் நூறு ஸ்லோகங்களைப் பாடியுள்ளார். அதில்,"" ஞானிகள் தம் மனதை அடக்கி தங்களுக்குள் இறைனை ஜோதிவடிவில் பார்த்துவிட்டுப் போகட்டும். நம்மால் அப்படி யோகம், தவம் எல்லாம் செய்ய முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலஒளியாக, கார்மேகவண்ணனாக, யமுனாநதிக்கரையில் ஓடி விளையாடுகிறது. அந்த கண்ணனைப் பாருங்கள். அது, நம் கண்களுக்கு ஆனந்தத்தை தருவதோடு, முக்தியையும் தந்துவிடும்'' என்கிறார். அதனால், மகான்கள் கூட கண்ணனின் வடிவழகில் மயங்கி அவனைப் போற்றியிருக்கிறார்கள். தியானம், தவம் போன்ற உயர் பக்தியைக் காட்டிலும், கண்ணனைக் காண்பதே கூட நம்மைக் கரைசேர்க்கும் என்பது மகான்களின் முடிவு.
Subscribe to:
Comments (Atom)