Wednesday, January 2, 2013


கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவமின்றி ஒளிவடிவாக காட்சிதரும் அவனை நாமும்  அந்நிலையில் வழிபாடு செய்வது மிக உயர்ந்த நிலையாகும். ஆனால், நம்மைப் போன்ற பாமரர்களால் இவ்வாறு இறைவனை வணங்க முடியாது. எனவே தான் பகவானே நம் மத்தியில்  பாலகிருஷ்ணனாக அவதரித்தான்.  மதுசூதன சரஸ்வதி என்னும் அடியவர் குழந்தை கண்ணன் மீது ""ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம்'' என்னும் பெயரில் நூறு  ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.  அதில்,"" ஞானிகள் தம் மனதை அடக்கி தங்களுக்குள் இறைனை ஜோதிவடிவில் பார்த்துவிட்டுப் போகட்டும். நம்மால் அப்படி யோகம், தவம் எல்லாம் செய்ய  முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலஒளியாக, கார்மேகவண்ணனாக, யமுனாநதிக்கரையில் ஓடி விளையாடுகிறது. அந்த கண்ணனைப் பாருங்கள். அது, நம் கண்களுக்கு ஆனந்தத்தை தருவதோடு, முக்தியையும் தந்துவிடும்'' என்கிறார்.  அதனால், மகான்கள் கூட கண்ணனின் வடிவழகில் மயங்கி அவனைப் போற்றியிருக்கிறார்கள். தியானம், தவம் போன்ற உயர் பக்தியைக் காட்டிலும், கண்ணனைக் காண்பதே கூட நம்மைக் கரைசேர்க்கும் என்பது மகான்களின் முடிவு.

No comments:

Post a Comment