Saturday, February 25, 2012
Wednesday, February 22, 2012
ஒருவனுக்கு அமைதியின்மையையும், ஒருவனுக்கு சுகத்தையும் தருவதற்கு கடவுள் என்ன ஓரவஞ்சனைக்காரரா? படைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. மனிதன் நல்லவற்றை பார்க்க மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. ருசியுள்ள உணவுப்பதார்த்தங்களை தன் முன்னே இருக்க அவற்றை உண்ணாமல் கவலையுடன் அமர்ந்திருக்கும் பசித்த மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா? நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். ----ரமணர்---
Sunday, February 19, 2012
'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன்.
ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.
Wednesday, February 15, 2012
சுயநலமின்மை, அன்பு என்னும் இருசிறகுகளைக் கொண்டுதான் ஆன்மிக உலகில் பறக்கமுடியும். அன்பு இருக்குமிடத்தில் தான் ஆண்டவன் இருப்பான். சுயநலம் இல்லாவிட்டால் எதை செய்ய நினைத்தாலும் இறைவனே முன்நின்று உதவுவான்.
பிறர் மீது அன்பு காட்டவும், அவர்களுக்கு சேவை செய்யவும் கடவுள் கொடுத்த அரியவாய்ப்பு தான் இம்மனிதப்பிறவி. அத்தகைய வாய்ப்பினை நமக்களித்த கடவுளை நன்றியோடு வணங்கி மகிழுங்கள்.
உண்மையான ஆன்மிகவாதி என்பவன் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றுதான் எண்ணிக்கொள்வான். அவனுடைய மனதில் எதிர்மறையான எண்ணங்களுக்கு சிறிதும் இடமிருப்பதில்லை.
Monday, February 13, 2012
Subscribe to:
Comments (Atom)




