Tuesday, March 1, 2011

வாழ்க்கை தத்துவம்




சிவபெருமானின் கழுத்திலுள்ள விஷம் குறிப்பது அமுதம், விஷம் என்பவை இன்ப, துன்பங்கள்.வாழ்க்கை எனும் பாற்கடலைக் கடையும் போதும் இத்தகைய அனுபவங்கள் வரலாம். இன்பத்தை ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். துன்பம் வரும் போது துவண்டுவிடாமல் இறைவனை வழிபட்டு அவனருளால் அதைக் களைய வேண்டும். இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள அசுரர்கள் போன்ற தீயவர்கள் வருவார்கள். அவர்களையும் இனம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்.
காளையின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடி இறைவன் காட்சி கொடுக்கிறார் என்பது - சகல உயிர்களையும் நாம் போற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரன் வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் தோன்றுவது- நம்முடைய வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என உணர்த்துகிறது.
சிவபெருமானின் தலையில் கங்கை இருக்கிறதே- அது எப்போதும் நாமனைவரும் தூய்மையான, குளிர்ச்சியான மனத்துடன் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அவரது கழுத்தைச் சுற்றி இருக்கும் பாம்பு - எப்போதும் நாம் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது. சிவபெருமான் புலித்தோல் அணிந்திருப்பது- மனிதன் ஒருபோதும் மிருக உணர்ச்சிக்கு ஆட்படக்கூடாது என்பதைப் போதிக்கிறது. கையில் சூலம் ஏன் என்று கேட்பீர்களே? அது மனிதன் தன மனதிலுள்ள ஆசை, கோபம், பொறாமை, ஆணவம் போன்ற எதிரிகளை சூலத்தைக்கொண்டு அழிக்க வேண்டும் என்பதை சொல்கிறது.
இறை சொரூபத்தின் ஒவ்வொரு அடையாளமும் வெறும் கற்பனைகள் என்று நினைக்காதீர்கள். அவை மனிதனுக்கு வாழ்வியலை உணர்த்தும் அரிய பாடங்கள்.
என்ன சந்தேகம் தீர்ந்துவிட்டதா??

No comments:

Post a Comment