இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்குகிறோம். உண்மையில் இறைவன் ஒருவரே. இந்து மதம் இறைவன் ஒருவரே என்று நம்புவது மட்டுமல்லாமல், அந்த இறைவனைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனவும், எங்கும் நிறைந்திருக்கும் சைதன்யமே இறைவன் எனவும் கூறுகிறது. இறைவன் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர், இருந்தாலும், பக்தனுக்கு அருள் புரிவதற்காக அவர் எந்த வடிவத்தையும் எடுக்கவல்லவர். எந்த பாவத்தை வேண்டுமானாலும் வெளிப்படுத்தவல்லவர். காற்று இளந் தென்றலாக வரலாம், வேகமாக வீசலாம், புயல் காற்றாகவும் மாறலாம், அந்தக் காற்றையும் கட்டுப்படுத்தும் சர்வேஸ்வரனால் எந்த பாவத்தையும் மேற்கொள்ள முடியுமல்லவா? அவருடைய மகிமைகளை வர்ணிக்க யாரால் முடியும்? ஒரே இறைவன் சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், துர்க்கை, காளி, சரஸ்வதி என பல நாமங்களிலும் பல வடிவங்களிலும் ஆராதிக்கப்படுகிறார். ஒவ்வொருவரின் விருப்பங்களும் வேறுபட்டவை. அவர்களது பண்பாடு, வளர்ந்த சூழ்நிலை போன்றவை மாறுபட்டவை. அவரவரின் விருப்பத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப இறைவனை எந்த வடிவிலும் வணங்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு. இதனால்தான் இந்து மதத்தில் இறைவனின் பல வடிவங்கள் தோன்றினவே அன்றி, அவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல
No comments:
Post a Comment