உடலையோ, புற சுகங்களையோ, புறபொருட்களையோ சார்ந்து நிற்பதல்ல வாழ்க்கை. வாழ்க்கையின் உண்மையான இன்பம் மனதை ஆதாரமாகக் கொண்டது. அந்த மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்தால் எல்லாம் நம் கைக்குள் அடங்கிவிடும். மனதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் கல்வியே உண்மையான கல்வி. அதுவே ஆன்மீகக் கல்வி. இந்தக் கல்வியைப் பயின்றால் தான் நாம் கற்றுள்ள பிற துறைகளின் அறிவை எல்லாம் முறையாகப் பயன்படுத்த முடியும்.குழந்தையைப் போன்ற இதயமும், விவேகம் நிறைந்த அறிவுமே ஆன்மீகவாதிக்குத் தேவை. அது இருந்தால் தான் ஆத்மானுபூதியை அனுபவிக்க முடியும். அத்தகையவரின் வாழ்வில் துன்பத்திற்கோ, ஏமாற்றத்திற்கோ இடமில்லை.அமைதியை அனுபவிக்க வேண்டுமெனில் களங்கமற்ற இதயம் தேவை. களங்கமற்ற இதயமே இறைவன் வாழுமிடமாகும்.♣♣♣♣
No comments:
Post a Comment