Saturday, March 13, 2010

கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். திட்டம் எதுவும் தேவையில்லை.திட்டமிடுதலால் ஆகப்போவதுமில்லை.----இறைவன் ஒளிர்வதாலேயே அனைத்தும் ஒளிர்கின்றன.எங்கெல்லாம் எதுவெல்லாம் அறிவுமயமாக ஒளிர்கின்றதோ சூரியனில் வீசுகின்ற ஒளியாகட்டும் அல்லது நம் அறிவில் ஒளிர்கின்ற சைதன்யமாகட்டும் அது இறைவனே அன்றி வேறில்லை.---தாமரை இலை போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும். அது நீரிலேயே இருந்தாலும் நீரில் நனைக்கப்படுவதில்லை. மனிதனும் அவ்வாறே இவ்வுலகில் பற்று எதுவும் இல்லாமல், உடல் உலகிலும் உள்ளம் இறைவனிடத்திலுமாக வாழ வேண்டும். இறையடி சேர்தலே நிரந்தரம்.----பெரிதும் சிறிதும் எல்லாமே கடவுள் தான். வேறுபாடெல்லாம் ஆற்றலின் வெளிப்பாட்டில் தான் உருவத்தில் இல்லை.*****சுவாமி விவேகானந்தர்******

No comments:

Post a Comment