இவ்வுலகில் இப்போது வாழ்வது போல் வாழ்ந்து கொண்டு இறைவனை அறிவது மிகவும் கடினம் தான்.ஆனால் இவ்வுலகை இறைவனாக காண்போமானால் இறைவனையும் உலகையும் சரிவர அறிந்து கொள்ளலாம்.ஏராளமான காக்கைகளுக்கு நடுவே ஒரு கொக்கு அமர்ந்திருப்பதாக வைத்துக்கொள்வோம்.தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும்.சிறிது அருகில் சென்று பார்த்தால் காக்கைகள் தெரியும்.மேலும் அருகில் சென்றால் கொக்கையும் தெளிவாக காணலாம்.பிறகு நமது கவனம் முழுவதும் அதன் மேல் தான் இருக்கும்.அது போல் தொலைவில் நின்றால் சுத்த சைதன்யம் நமக்கு புலப்படாது.நாம் வெளியில் தேடினால் மெய்ப்பொருள் கிடைக்காது.மெய்ப்பொருள் ஒன்று தான். அதை உள்ளே தான் தேட வேண்டும்.மற்றவை எல்லாம் சிலகாலம் மட்டுமே இருப்பவை. இவ்வுலகின் அடிப்படை இறைவனே!!! ஆனால் அதைத்தெரிந்து கொள்ள ஞானக்கண் வேண்டும்.****அம்மா******
No comments:
Post a Comment