Thursday, March 11, 2010

அவதாரம்

கடவுள் மனித உடலும், மனமும் எடுத்து மனிதன் முன் தோன்றுகின்றார். கடவுள் உருவமில்லாமல் இருந்தால் அவரை யாரால் புரிந்து கொள்ள முடியும்? அவரிடமிருந்து யாரால் உற்சாகத்தை பெறமுடியும்? அவர் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவராகவும், கற்பனையானவராகவுமே இருப்பார். கடவுளை பற்றி எழுதப்பட்டுள்ள சாஸ்திரங்களும் கருத்துக்களும் மனித அறிவுக்கு எட்டாதவைகளாகவே இருக்கும். இவைகளைத் தவிர்ப்பதற்காகவே கடவுள் மனித வடிவில் வந்து, மக்களுக்கு சேவை செய்து, அன்பு காட்டுவதன் மூலம் உலகிற்கு உதாரணமாக திகழ்கிறார்.இதைச் செய்ய கடவுளுக்கு மனித வடிவம் தேவைப்படுகிறது. மக்களை துன்பமில்லாமல் வாழவைக்க ஒவ்வொரு யுகத்தின் தேவைக்கு ஏற்றபடி ஒரு உருவத்தையும், பெயரையும் எடுத்துக் கொள்கிறார்.
இறைவன் எங்கும் நிறைந்தவர்.அவர் மனித வடிவில் பூமியில் தோன்றுவதில் என்ன சந்தேகம் ? இறைவன் வடிவமற்றவர்; ஆனால் அவர் விருப்பினால் விரும்பும் வடிவை எடுக்கவும் முடியும். அவர் மனிதனாகத் தோன்றி, மனிதர்களோடு வாழ்ந்தாலும் தமது தெய்வீக இயல்பை ஒரு போதும் மறப்பதில்லை.

***அம்மா***

No comments:

Post a Comment