Friday, April 27, 2012


ஒரு பக்தர், ஆதிவாசிகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக அடர்ந்த காட்டுக்குள் சென்றார். அப்போது, வழியில் காட்டு யானைகள் வரக்கூடும் என்று அவரை எச்சரித்தனர். அதற்கு அவர், "பரவாயில்லை எனக்கு என் குருவின் மீது நம்பிக்கை இருக்கிறது அவர் என்னைக் காப்பார்" என்று பதிலளித்தார். அவர் காட்டுக்குள் சிறிது தூரம் சென்றபோது, எதிரில் ஒரு காட்டுயானை வருவதைக் கண்டார். அதைப் பார்த்ததும் உயிரைக் கையில் பிடித்தபடி ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடினார். வீட்டை அடைந்த பிறகுதான் அவரது ஓட்டம் நின்றது. இதைக் கண்டவர்கள் "என்ன உனக்கு குருவின் மீது நம்பிக்கை போய்விட்டதா?"  என்று கேட்டனர்.  அதற்கு அவர் " எனக்கு குருவின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த யானை மீது நம்பிக்கை இல்லை." என்று பதிலளித்தார். 
இதிலிருந்து நமது நம்பிக்கை எவ்வளவு பலமற்றது என்று புரிகிறது. நாம் மகிழ்வோடு வாழும்போது நமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கருதுகிறோம். ஆனால், கஷ்டம் வந்ததும் நம்பிக்கை காற்றோடு போய்விடுகிறது. 

No comments:

Post a Comment