எங்கள் முன்னோர்கள், இன்று போல் மன அமைதிக்காக மனநல மருத்துவர்களை நாடியதில்லை. தங்கள் ஊரிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு, தனது குறையை இறைவனிடம் எடுத்துரைத்தால் போதும்; மனம் லேசாகி விடும். கவலைகளும் பறந்து விடும். மருத்துவரின் உதவியோ, தூக்க மாத்திரையின் உதவியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை. கந்தசஸ்டி கவசமோ, சிவபுராணமோ ஓதியபடியே உறங்கி விடுவர். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது முதுமொழி. கடவுள் நம்பிக்கை பாரத மக்களின் முழுமூச்சாக இருந்தது. ஆனால் இன்று அன்னியர் புகுத்திய ஆங்கிலக் கல்வித்திட்டத்தில் மதிமயங்கி, வாழ்வின் நோக்கம் நிலையற்ற செல்வத்தை தேடுவது என்றாகி விட்டது. "தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடி கிழப்பருவம் எய்தி கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதர்களால்" ஆலயங்களையும், மத தத்துவங்களையும், ஆன்மீக குருமார்களையும் குறை கூறத்தான் முடியும். ஆலயங்களும், குருமார்களும் சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் பண்பாட்டு வளர்ச்சியை ஊட்ட எந்த அளவு ஆணி வேராகத் திகழ்கின்றனர் என்பதை காணத் தவறிவிடுகிறார்கள்.
Tuesday, April 17, 2012

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment