Sunday, April 1, 2012



பாரதத்தின் இதயத்தை அறிய வேண்டுமெனில் ராமாயணம், மகாபாரதத்தை தவிர வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. அவற்றின் காவிய நடையும், மிகப்பெரிய அளவும் ஒருவேளை இக்கால மனிதனை கவராமல் போகலாம். ஏனெனில், இக்கால மனிதன் நேரத்தை பணத்தால் அளக்கிறான். ராமாயணமும், மகாபாரதமும் பழம்பெரும் இதிகாசங்களாக பெருமை பெறுகின்றன. தர்மம், மோட்சம், அர்த்தம், காமம் ஆகியவற்றை உபதேசிப்பதும், முன்பு நடந்தவற்றைக் கதை வடிவில் தருவதும் எதுவோ அது இதிகாசம் எனப்படும். இந்த மகா காவியங்களை படிக்கும் போது பாரத மக்களின் பண்பாட்டைப் பற்றி அறியாத மனிதர்களுக்கு இதில் காணப்படுபவை எல்லாம் முட்களாகவே தோன்றும். இதனால் அவர்கள் இவற்றில் காணப்படும் மலர்களை காணும் வாய்ப்பை இழக்கக் கூடும். 

No comments:

Post a Comment