பொங்கி எழுகின்ற துன்பத்தீயில் என் மனம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறது. தனியாய் இருந்து அழுகின்றேன். சாரமற்ற இந்த வாழ்க்கையின் உணர்வு மனதை பலவீனமாக்கிவிட்டது. அம்மா நீ என்மீது காட்டிய அளவற்ற கருணையையும், அன்பையும் நினைத்து நினைத்து வாழ்கிறேன். எனக்கு ஆறுதல் தருவது அந்த இனிய நினைவுகள் மட்டுமே. என் நினைவு, கனவு, நிஜம், உயிர் எல்லாமே நீதான் அம்மா!

No comments:
Post a Comment