Wednesday, February 24, 2010

கடவுளிடமிருந்து ஒரு கடிதம்


கடவுளிடமிருந்து ஒரு கடிதம்
இன்று காலையில் நீ எழுந்ததிலிருந்து உன்னை கவனித்து வந்தேன்.நேற்று நிகழ்ந்த நல்லதை குறித்து எனக்கு நன்றி செலுத்துவாய்,இன்று நிகழ இருப்பது பற்றி எனது கருத்து கேட்பாய், ஒரு சில வார்த்தைகளாவது என்னுடன் பேசுவாய் என்று எதிபார்த்தேன்.நீயோ வேலைக்குப் போகும் போது அணிவதற்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாய்.ஒரு சந்தர்ப்பத்தில் செய்வதற்கு ஏதுமின்றி, நீ நாற்காலியில் பதினைந்து நிமிடங்கள் ஓய்வாக உட்கார்ந்த்திருந்தாய்.ஒ! நீ எழுவதைக் கண்டேன்.என்னுடன் பேசுவதற்காகவே வருகிறாய் என்ற சந்தோசத்துடன் உன் முகத்தை நோக்கினேன்.ஆனால் என்னை அலட்சியம் செய்த நீ தொலைபேசியின் மூலம் ஒரு நண்பனுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாய் நீ வேலைக்கு சென்ற போது உன்னைக்கவனித்தேன்.முற்பகல் முழுவதும் உனக்காக காத்திருந்தேன்.உனது அலுவல்களிலேயே மூழ்கியிருந்த நீ என்னிடம் எதுவும் பேசவில்லை.மதிய உணவை அருந்த அமர்ந்த நீ சுற்றும் முற்றும் பார்த்தாய்.என்னுடன் பேசுவது உனக்கு தர்ம சங்கடத்தை தருமென எண்ணினாய் போலும்; நீ எனக்கு தலை வணங்க வில்லை.உனது அலுவலக நண்பர்களில் சிலர் உணவை அருந்த முன்பு எனக்கு நன்றி கூறியதைக் கவனித்தாய்.ஆனால் நீ செய்ய வில்லை! போனது போகட்டும்.இனியும் நேரம் இருக்கிறது.நீ என்னுடன் பேசுவாய் என நான் உறுதியாக நம்பினேன்.
மாலையில் வீடு திரும்பிய உனக்காக காத்திருந்த சில வேலைகளை செய்து முடித்த பிறகு தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தாய்.நீ தொலைக்காட்சியை பார்த்த போதும், இரவு உணவை அருந்திய போதும், உனது வருகைக்காக பொறுமையாக நான் காத்திருந்தேன்.ஆனால் நீ என்னுடன் பேசவில்லை.படுக்கும் நேரம் வந்தது.இப்போதாவது நீ என்னுடன் பேசாமல் இருக்க மாட்டாய் என்ற ஆவலுடன் உனது வரவிற்காக காத்திருந்தேன்.குடும்பத்தினருக்கு "குட் நைட்" சொல்லி நீ என்னை திரும்பியும் பார்க்காமல் படுக்கைக்கு சென்றாய். படுத்த உடனே உறங்கியும் விட்டாய்.
பரவாயில்லை! நான் உனக்காக எப்போதும் காத்திருக்கிறேன்.உன்னால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அளவு பொறுமை மிகுந்தவன் நான்.பொறுமையாக நடந்து கொள்வது எப்படி என்பதை உனக்கு கற்பிக்க விருபுகிறேன்.நீ என்னை அலட்சியம் செய்த போதிலும் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.எனவே, தினமும் உனது இதயம் நிறைந்த நன்றியை, பிரார்த்தனையை,சிந்தனையை அல்லது தலை வணங்குதலையாவது எதிபார்த்து காத்திருக்கிறேன்.
இதோ, மற்றொரு புதிய தினம் மலர்ந்து விட்டது.நீ விழித்து விட்டாய். இதோ,இப்போதும் உனக்காக நான் காத்திருக்கிறேன்.இன்றாவது நீ என்னிடம் பேசுவாய்! எனக்காக சில நிமிடங்களை ஒதுக்குவாய் என்று நம்புகிறேன்.உனது நலனை மட்டுமே விரும்பும்.--------உனது இனிய நண்பன் கடவுள்-------

இன்று நாம் இறைவனுக்கு கொடுத்திருக்கும் இடம் எது என்பதை விளக்கும் கற்பனைச் சொல்லோவியமே இது.அதைப் புரிந்து கொள்ளவோ அவரது குரலைக் கேட்கவோ உலக சுகங்களில் மூழ்கியிருக்கும் நம்மால் இயலவில்லை. போனது போகட்டும் இனியாவது நாம் இறைவனுக்கு உரிய இடத்தை அளிப்போம்.இறைவனுக்கும் நமக்கும் இடையில் அன்புப் பாலம் உருவாகட்டும்.நமது வாழ்வே இறைவன் ஆனந்த நடமிடும் மேடையாக மாறட்டும்.**************

No comments:

Post a Comment