Monday, February 1, 2010


அம்மாவின் அவதாரம் அல்லது அலங்காரம்! அதற்குரிய விளக்கம் அம்மாவாலேயே கொடுக்கப்பட்டுருக்கிறது..-----ஒரு நடிகன் எந்த வேடம்
அணிந்தாலும் தான் யார் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.எந்த வேஷம் போட்டாலும் நடிகனின் மனதில் எந்தவித மாற்றமுமில்லை.அதுபோல் எந்த வேஷத்தை போட்டாலும் தான் யார் என்பது அம்மாவுக்கு தெரியும்.அம்மா இவை எவற்றிலும் கட்டுப்படுவதில்லை.இந்த வேஷம் கூட அம்மா தானே அணிந்த வேஷமா? பக்தர்கள் விரும்பினார்கள்.அவர்கள் சமர்ப்பித்தார்கள் அவர்கள் ஆனந்தம் அடைகிறார்கள்.
அம்மா வடஇந்தியாவில் சில இடங்களுக்கு செல்வதுண்டு.அங்கே அம்மாவை காண சில சமயங்களில் கிருஷ்ண பக்தர்கள் வருவதுண்டு.அவர்கள் அம்மா தலையில் கிரீடம் சூட்டுவார்கள்,மயிலிறகு வைப்பார்கள்,மஞ்சள் பட்டாடை சாத்துவார்கள்,புல்லாங்குழலை கையில் தருவார்கள்,ஆரத்தி காண்பிப்பார்கள்.அவர்கள் அதில் ஆனந்தம் அடைகிறார்கள்.அவர்களுடைய சந்தோசத்திற்காக அம்மா அனுமதிக்கிறேன்."நான் வேதாந்தி.என்னால் இதற்கு சம்மதிக்க முடியாது"என்று சொல்ல அம்மாவால் முடியாது.அம்மா ஆரம்ப காலங்களில் எந்த வேஷமும் அணியவில்லை.பக்தர்கள் ஒவ்வொன்றாக கொண்டு வந்தார்கள்.அவர்களின் சந்தோசத்திக்காகவும் திருப்திக்காகவும்
அம்மா அவற்றை அணிகிறேன்.அவ்வாறு அது சடங்காக மாறிவிட்டது.--------ஸ்ரீமாதாஅமிர்தானந்தமயி *******ஒளியைநோக்கி முதலாம் பாகம் எனும் புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment