
உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் மதம் எனும் உணர்வு கிடையாது. மரத்திற்கோ, நம்முடன் இருக்கும் வீட்டு பிராணிகளுக்கோ மதம் இல்லை. ஏனென்றால், அவற்றுக்குப் பசி, தூக்கம், இனப்பெருக்கம் ஆகிய அடிப்படையான உணர்வுகள் மட்டுமே உள்ளன. மனிதன் அப்படிப்பட்டவனல்ல. மனம் என்ற ஒன்றினைப் பற்றிய சிந்தனை மனித இனத்திற்கு மட்டுமே உண்டு. தனக்குள் இருப்பதை உணர்ந்து கொள்வதன் மூலம் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். தன்னை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வழிகாட்டுவது தான் மதம். நம்மை நாமே உணர்தல் என்பதே மனித வளர்ச்சிக்கு அடையாளமாகவே மதம் உள்ளது.
No comments:
Post a Comment